தொழில்யோகம் காட்டும் பூதக்கண்ணாடி தசாம்சம் பலத்தை அறிய பகுதி 4…

தொழில் யோகம் காட்டும் பூதக்கண்ணாடி தசாம்சம் - தசாம்சத்தின் பலத்தை எளிமையாக அறிய பகுதி 4

நம் முன்னோர்கள் வகுத்துகொடுத்த வர்க்க அம்சங்களில் தொழிலின் நிலை அறிந்து கொள்ள கொடுக்கபட்ட வர்க்க முறைதான் தசாம்சம் கணிதம் ஆகும் இதை கணிக்க இரு மூன்று வழிகள் பின்பற்றபடுகின்றன அப்படி கணிக்கபடும் தசாம்ச கட்டத்தில் அதன் சுப பலத்தை அறிந்துகொள்ள எளிமையான சில வழிகளை ஜோதிட விதிகளின் மூலமாக தருகிறேன்,

இராசிகட்டம் கணிப்பதற்கும் மற்ற வர்க்க அம்ச கட்டங்கள் கணிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு உதாரணமாக இராசிகட்டத்தில் சூரியனையும் புதனையும் சப்தம ஸ்தானமாக அதாவது எதிர் எதிர் ஆக காணமுடியாது ஏனென்றால் 360 பாகை (டிகிரி) வானியல் சுற்றுவட்ட பாதையில் சூரியனிலிருந்து புதன் 27 டிகிரி தூரத்திற்குள் தான் எப்போதும் இருக்கும் அதனால் இராசிகட்டத்தில் சூரியனையும் புதனையும் சப்தம ஸ்தானமாக அதாவது எதிர் எதிர் ஆக காணமுடியாது ஆனால் வர்க்க கட்டங்களில் அதை காணமுடியும் இதன் மூலமாக பலபுதிய கோட்பாடுகள் வர்க்க கட்டங்கள் உருவாகும் இது ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக அமையும் இதுபோல் பல உண்டு,

இராசிக்கட்டமே நமது தாய் கட்டம் அதனால் அதனோடு சேர்த்து தான் எந்த வர்க்கத்தின் பலனையும் அறிய வேண்டும், சரி தசாம்ச கட்டத்தின் சுப பலத்தை அறிந்துகொள்ள எளிமையான சில விதிகளை பார்ப்போம் -

1) இராசிக்கட்டத்திற்கு 10 ஆம் ஸ்தானாதிபதி தசாம்ச கட்டத்தில் ஆட்சி, உச்சம், நட்பு இராசி வீடுகளில் அமைந்தால் சிறப்பு யோக வலிமையை பெற்ற 10 ஆம் ஸ்தானாதிபதியாக மாறும்.

2) இராசிக்கட்டத்திற்கு ஜென்ம லக்ன ஸ்தானாதிபதியும் 10 ஆம் ஸ்தானாதிபதியும் சேர்ந்து அல்லது சப்தமாக  அமைந்து தசாம்ச கட்டத்தில் யாரேனும் ஒருவர் அல்லது இருவர் ஆட்சி, உச்சம், நட்பு இராசி வீடுகளில் அமைந்தால் சிறப்பு தொழில் யோக வலிமையை பெற்ற ஜாதகமாக மாறும்.

3) இராசிக்கட்டத்திற்கு ஜென்ம லக்னத்திற்கு 5 ஆம் ஸ்தானாதிபதியும் 10 ஆம் ஸ்தானாதிபதியும் சேர்ந்து அல்லது சப்தமாக அமைந்து தசாம்ச கட்டத்தில் யாரேனும் ஒருவர் அல்லது இருவர் ஆட்சி, உச்சம், நட்பு இராசி வீடுகளில் அமைந்தால் சிறப்பு தொழில் யோக வலிமையை பெற்ற ஜாதகமாக மாறும்.

4) இராசிக்கட்டத்திற்கு ஜென்ம லக்னத்திற்கு 9 ஆம் ஸ்தானாதிபதியும் 10 ஆம் ஸ்தானாதிபதியும் சேர்ந்து அல்லது சப்தமாக அமைந்து தசாம்ச கட்டத்தில் யாரேனும் ஒருவர் அல்லது இருவர் ஆட்சி, உச்சம், நட்பு இராசி வீடுகளில் அமைந்தால் சிறப்பு தொழில் யோக வலிமையை பெற்ற ஜாதகமாக மாறும்.

5) இராசிக்கட்டத்திற்கு ஜென்ம லக்னத்திற்கு 9,11 ஆம் ஸ்தானாதிபதிகள் 10 ஆம் ஸ்தானாதிபதிகளுடன் சேர்ந்து அல்லது சப்தமாக அமைந்து தசாம்ச கட்டத்தில் யாரேனும் ஒருவர் அல்லது இருவர் ஆட்சி, உச்சம், நட்பு இராசி வீடுகளில் அமைந்தால் சிறப்பு தொழில் யோக வலிமையை பெற்ற ஜாதகமாக மாறும்.

6) இராசிக்கட்டத்திற்கு ஜென்ம லக்னத்திற்கு 6 ஆம் ஸ்தானாதிபதியும் 10 ஆம் ஸ்தானாதிபதியும் சேர்ந்து அல்லது சப்தமாக அமைந்து தசாம்ச கட்டத்தில் யாரேனும் ஒருவர் அல்லது இருவர் ஆட்சி, உச்சம், நட்பு இராசி வீடுகளில் அமைந்தால் சிறப்பு தொழில் யோக வலிமையை பெற்ற ஜாதகமாக மாறும்.

7) இராசிக்கட்டத்திற்கு ஜென்ம லக்னத்திற்கு 2, 4 ஆம் ஸ்தானாதிபதிகள் 10 ஆம் ஸ்தானாதிபதிகளுடன் சேர்ந்து அல்லது சப்தமாக அமைந்து தசாம்ச கட்டத்தில் யாரேனும் ஒருவர் அல்லது இருவர் ஆட்சி, உச்சம், நட்பு இராசி வீடுகளில் அமைந்தால் சிறப்பு தொழில் யோக வலிமையை பெற்ற ஜாதகமாக மாறும்.

8) பிறந்த நேரத்தை துல்லியமாக கண்டு கணித்த ஜாதகமானால் தசாம்ச லக்னத்திற்கு 1,5,9 ஆம் ஸ்தானாதிபதிகளும் தசாம்ச லக்னத்திற்கு 10 ஆம் ஸ்தானாதிபதியும் சேர்ந்து அல்லது சப்தமாக அமைந்து தசாம்ச கட்டத்தில் ஆட்சி, உச்சம், நட்பு இராசி வீடுகளில் அமைந்தால் சிறப்பு தொழில் யோக வலிமையை பெற்ற ஜாதகமாக மாறும்.

9) பிறந்த நேரத்தை துல்லியமாக கண்டு கணித்த ஜாதகமானால் தசாம்ச லக்னத்திற்கு 11,2, 4 ஆம் ஸ்தானாதிபதிகளும் தசாம்ச லக்னத்திற்கு 10 ஆம் ஸ்தானாதிபதியும் சேர்ந்து அல்லது சப்தமாக அமைந்து தசாம்ச கட்டத்தில் ஆட்சி, உச்சம், நட்பு இராசி வீடுகளில் அமைந்தால் சிறப்பு தொழில் யோக வலிமையை பெற்ற ஜாதகமாக மாறும்.

ஒரு கிரகம் ஆட்சி, உச்சம் அடைவதை காட்டிலும் வலிமையானது நீசபங்கத்தை அடைவது மேலும் ஒரு கிரகம் இராசிகட்டத்தில் ஆட்சி, உச்சம், நட்பு இராசி வீடுகளில் அமைந்தால் அதை மற்ற அம்சங்களில் ஒப்பிட்டு பார்ப்பதில் பல விதிக்கள் உள்ளன எனவே மேலே சொன்னவைகளுக்கு சில விதிவிலக்குகளும் உள்ளன இருந்தாலும் பொதுவாக எளிமையாக தொழில் யோக வலிமையை காண இது உதவும்

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "தொழில்யோகம் காட்டும் பூதக்கண்ணாடி தசாம்சம் பலத்தை அறிய பகுதி 4…"

கருத்துரையிடுக

Powered by Blogger