ஐந்தாம் ஸ்தானமும் உங்களின் உயர்வும் - பதவி பூர்வ புண்ணியானாம்…


12 ஸ்தானங்களில் மிக உயர்ந்த சுப ஸ்தானங்களில் முதன்மையாக இருப்பது லக்னம், ஐந்தாம், ஒன்பதாம் ஸ்தானங்கள் ஆகும் இதை திரிகோண ஸ்தானங்கள் என்பர்,

அதில் லக்னம் முதல் சுப ஸ்தானம் ஆகும் இருந்தாலும் உபய லக்னங்களில் பிறந்தவருக்கும் மற்றும் ஒரே ஆதிபத்தியம் பெற்ற கடகம், சிம்மம் லக்னங்களுக்கும் லக்னாதிபதி கேந்திரங்களில் அமரும் போது சிறிய அளவிலாவது கேந்திராதிபத்திய தோஷம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும்,

அதேபோல் ஒன்பதாம் ஸ்தானம் ஆனால் தனது ஜென்ம லக்னத்தை ஸ்திர லக்னமான அதாவது ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பமாக ஒருவர் பெற்றிருந்தால் 9ஆம் ஸ்தானம் பாதக ஸ்தானம் ஆக வரும் அதனால் மிதமான அளவில் பாதகமான விஷயங்களை செய்வதற்கு கடமைபட்டவராக ஒன்பதாம் ஸ்தானாதிபதி ஆகி போவார்.

இதுவே ஐந்தாம் ஸ்தானம் ஆனால் எந்த விதமான குறைபாடுகளும் இல்லாத அதே சமயம் பூர்வ ஜென்ம புண்ணியங்களையும் பாவங்களையும் யாராலும் தடுக்க முடியாமல் கொடுக்கும் ஸ்தானம் ஆகும் மேலும் புத்திர ஸ்தானம் இருந்து குழந்தை செல்வத்தை தருவதாக இருக்கும் முக்கிய ஸ்தானமும் இதுவே மேலும் படைப்புத் திறன், சிந்தனை சக்தி & போக்கு, உயர்கல்வியறிவு போன்றவை காட்டும் ஸ்தானமும் இதுவே,

இதற்கெல்லாம் முத்தாய்பாக பூர்வ புண்ணித்தால் கிடைக்கும் இந்த பிறவிக்கு உயர்வான பதவியையும் உயர்வான சமூக நிலையையும் தரும் ஸ்தானமும் இந்த ஐந்தாம் ஸ்தானம் ஆகும் பதவி என்றவுடன் சாதாரணமாக எல்லாருக்கும் ஞாபகம் வருவது அரசாங்கம், தனியார் நிறுவனங்கள், உலகலாவிய தனியார் நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களில் அடையும் உயர்பதவிகளை பொதுவாக  எல்லாருக்கும் ஞாபகம் வரும் ஆனால் ஒரு பெரிய மடத்தின் தலைமை பிடாதிபதியும் உயர்பதவி யோகம் தான் மேலும் பொதுநல தொண்டு நிறுவனங்களில் உயர் பதவிகளை அடைவதும் சிறந்த உயர்பதவி யோகம் தான் மேலும் தொழில் கூட்டமைப்புகளில் உயர் பதவிகளை அடைவதும் சிறந்த உயர்பதவி யோகம் தான் இவைகளை உயர்வுகளை காட்டும் மிக உயர்ந்த சுத்தசுப திரிகோண ஸ்தானம் தான் இந்த ஐந்தாம் ஸ்தானம் ஆகும்


இப்போது 12 லக்னங்களுக்கும் 5 க்குடைய ஸ்தானாதிபதி யார் ஆட்சி, உச்சம் பெறும் இராசிகள் என்ன என்ன என்று விரிவாக பார்ப்போம் : -

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5 ஆம் ஸ்தானாதிபதி சூரியன் 5 ஆம் ஸ்தானம் அதாவது சிம்மம் இராசியில் ஆட்சி அடைவார், 1ஆம் ஸ்தானம் மேஷம் இராசியில் உச்சம் அடைவார்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5 ஆம் ஸ்தானாதிபதி புதன் 2, 5 ஆம் ஸ்தானம் அதாவது மிதுனம், கன்னியில் ஆட்சி அடைவார், 5ஆம் ஸ்தானம் கன்னி இராசியில் உச்சம் அடைவார்.

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5 ஆம் ஸ்தானாதிபதி சுக்கிரன் 5, 12 ஆம் ஸ்தானம் அதாவது துலாம், ரிஷபத்தில் ஆட்சி அடைவார், 10ஆம் ஸ்தானம் மீனம் இராசியில் உச்சம் அடைவார்.

கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5 ஆம் ஸ்தானாதிபதி செவ்வாய் 5, 10 ஆம் ஸ்தானம் அதாவது விருச்சிகம், மேஷத்தில் ஆட்சி அடைவார், 7ஆம் ஸ்தானம் மகரம் இராசியில் உச்சம் அடைவார்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5 ஆம் ஸ்தானாதிபதி குரு 5, 8 ஆம் ஸ்தானம் அதாவது தனுசு, மீனத்தில் ஆட்சி அடைவார், 12ஆம் ஸ்தானம் கடகம் இராசியில் உச்சம் அடைவார்.

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5 ஆம் ஸ்தானாதிபதி சனி 5, 6 ஆம் ஸ்தானம் அதாவது மகரம், கும்பத்தில் ஆட்சி அடைவார், 2ஆம் ஸ்தானம் துலாம் இராசியில் உச்சம் அடைவார்.

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5 ஆம் ஸ்தானாதிபதி சனி 4, 5 ஆம் ஸ்தானம் அதாவது மகரம், கும்பத்தில் ஆட்சி அடைவார், 1ஆம் ஸ்தானம் துலாம் இராசியில் உச்சம் அடைவார்.

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5 ஆம் ஸ்தானாதிபதி குரு 2, 5, ஆம் ஸ்தானம் அதாவது தனுசு, மீனத்தில் ஆட்சி அடைவார், 9ஆம் ஸ்தானம் கடகம் இராசியில் உச்சம் அடைவார்.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5 ஆம் ஸ்தானாதிபதி செவ்வாய் 5, 12 ஆம் ஸ்தானம் அதாவது மேஷம், விருச்சிகத்தில் ஆட்சி அடைவார், 2ஆம் ஸ்தானம் மகரம் இராசியில் உச்சம் அடைவார்.

மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5 ஆம் ஸ்தானாதிபதி சுக்கிரன் 5, 10 ஆம் ஸ்தானம் அதாவது ரிஷபம், துலாத்தில் ஆட்சி அடைவார், 3ஆம் ஸ்தானம் மீனம் இராசியில் உச்சம் அடைவார்.

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5 ஆம் ஸ்தானாதிபதி புதன் 5, 8 ஆம் ஸ்தானம் அதாவது மிதுனம், கன்னியில் ஆட்சி அடைவார், 8ஆம் ஸ்தானம் கன்னி இராசியில் உச்சம் அடைவார்.

மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5 ஆம் ஸ்தானாதிபதி சந்திரன் 5 ஆம் ஸ்தானம் அதாவது கடகம் இராசியில் ஆட்சி அடைவார், 3ஆம் ஸ்தானம் ரிஷபம் இராசியில் உச்சம் அடைவார்.

இப்படி 5 ஆம் ஸ்தானாதிபதி பலம் அடைந்தாலும் தீய பகை கிரகங்களின் பார்வை, சேர்க்கை பெற்றிருந்தால் உயர்பதவி யோகங்கள் பாதிக்கபடும், மேலும் அவ்வாறு தீய பகை கிரகங்களின் பார்வை, சேர்க்கை பெறாமல் இருந்து நல்ல நிலையில் இருந்தால் 5 ஆம் ஸ்தானாதிபதி மற்றும் அவருடன் சுப சம்பந்தபட்ட கிரகங்களின் திசா புத்தி காலங்களில் அந்த சிறப்பான உயர்பதவி யோகங்கள் அவரை வந்து சேரும். சிறந்த அதிகாரங்கள் பெற்று பொறுப்புடன் உயர்பதவிகளை அலங்கரிப்பார் மேலும் குரு, சுப வலிமை பெற்ற கேது, சனியினால் பலமான ஜந்தாம் ஸ்தானம் ஆனால் இறைவனுடை தீர்க்கமான அருளை பெற்று கோயில்களில் திருபணிகள் மற்றும் இறைபக்தி பாடல் இயற்றி செய்தல் பாடுதல் இறைவுணர்வாளர்களின் நன்மதிப்பை பெறுதல் போன்ற உயர்ந்த ஆன்மீக புண்ணியங்களையும் சேர்ப்பார்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 0 Response to "ஐந்தாம் ஸ்தானமும் உங்களின் உயர்வும் - பதவி பூர்வ புண்ணியானாம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger