12 இராசிகளும் பார்வை செய்யும் இராசிகளும்…

12 இராசிகளும் பார்வை செய்யும் இராசிகளும்

12 இராசி பிரிவுகளும் பார்வை உண்டு என்று சில ஜோதிட நூல்கள் கூறுகின்றன இது அனுபவத்தில் அதிகமாக பயன்படுத்தபடுவது குறைவாகவே உள்ளது இருந்தாலும் ஜென்ம லக்னம் தொடங்கி 12 இராசி ஸ்தானங்களும் வலுவடையும் போதும் மற்றும் அஷ்டவர்க்க பரல்களில் இராசி ஸ்தானங்கள் வலுவடையும் போதும் அந்த ஸ்தானங்களின் பார்வைக்கு சுப அசுப வலு ஏற்படும் என்று அந்த நூல்கள் கூறுகின்றன எனவே அடிப்படையில் இதை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது அதற்க்காக இந்த 12 இராசிகளும் பார்வை செய்யும் இராசிகளை கொடுத்துள்ளேன் -

சர இராசிகள் = மேஷம், கடகம், துலாம், மகரம் போன்ற இராசி பிரிவு மண்டலங்கள்
ஸ்திர இராசிகள் = ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் போன்ற இராசி பிரிவு மண்டலங்கள்
உபய இராசிகள் = மிதுனம்,கன்னி,தனுசு,மீனம் போன்ற இராசி பிரிவு மண்டலங்கள்

சர இராசிகள் -  ஒவ்வொரு சர இராசிகளிலும் அதற்கு பக்கத்தில் இருக்கும் ஸ்திர இராசியை தவிர மற்ற ஸ்திர இராசிகளை பார்வை செய்கின்றன.

ஸ்திர இராசிகள் - ஒவ்வொரு ஸ்திர இராசிகளிலும் அதற்கு பக்கத்தில் இருக்கும் சர இராசியை தவிர மற்ற சர இராசிகளை பார்வை செய்கின்றன.

உபய இராசிகள் - ஒவ்வொரு உபய இராசிகளும் மற்ற உபய இராசிகளை பார்வை செய்கின்றன.

விளக்கி சொன்னால் - மேஷ இராசி தனக்கு அருகில் இருக்கும் ரிஷப இராசியை தவிர மற்ற ஸ்திர இராசிகளை பார்வை செய்யும்.

ஒரு இராசியில் கிரகங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த ஒவ்வொரு இராசிகளின் பார்வை மாறாது மேலும் இந்த பார்வையானது நிரந்தரமானது அப்படியானால் இதை எப்படி பார்ப்பது

மிக எளிய உதாரணமாக ஒருவரின் 4 ஆம் ஸ்தானத்தின் அஷ்டவர்க்க பரல்கள் அதிகமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் அந்த இராசி மேஷம் என்று வைத்துக்கொள்ளுங்கள் அந்த மேஷ இராசி தனக்கு அருகில் இருக்கும் ரிஷப இராசியை தவிர மற்ற ஸ்திர இராசிகளை பார்வை செய்யும் அப்போது அந்த அந்த இராசிகளின் வலிமை சற்று பலப்படும் என்று கூறுகின்றன அந்த நூல்கள்.


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "12 இராசிகளும் பார்வை செய்யும் இராசிகளும்…"

கருத்துரையிடுக

Powered by Blogger