ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 32 - ஷத்திரிபரி யோகம்…

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 32 - ஷத்திரிபரி யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


ஷத்திரிபரி யோகம்
ஜென்ம லக்னத்திற்கு 3,6,10,11 ஆம் ஸ்தானாதிபதிகள் ஜென்ம லக்னத்திற்கு 5 ஆம் ஸ்தானம் அல்லது 9 ஆம் ஸ்தானத்தில் இருந்து 2,5,9 ஆம் ஸ்தானாதிபதிகளால் பார்த்தால் 2,5,9 ஆம் ஸ்தானாதிபதிகளுடன் சேர்ந்தால் அதனால் ஷத்திரிபரியோகம் ஏற்படும், இதில் அசுபர், பகை கிரகங்கள் வாராமல் இருப்பது யோகம் முழுமையாக வேலை செய்ய நல்லது ஆகும்.

இதன் பலன்கள் -
இந்த யோகத்தினால் அரசியலில் செல்வாக்கு பெற்றிருத்தல், அரசு அல்லது அரசியலில் உயர் பொறுப்புகள்  பெறுவது, வசதி வாய்ப்புகளுடன் வாழ்வது, இதனுடன் அரசு அரசியல் கிரகமான சூரியன், செவ்வாய், சனி நன்றாக இருந்தால் தலைமை தாங்கும் திறனும் வாய்ப்பும் கிடைக்கும்.

0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 32 - ஷத்திரிபரி யோகம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger