காதல் ஜாதகம் - சாதகமும் பாதகமும் பகுதி 4…

காதல் ஜாதகம் - சாதகமும் பாதகமும் பகுதி 4…

உலகில் காதல் பழையது

உற்றபொழுதே புதியது

எல்லா நிலத்தும் எல்லா

பொழுதும் நிகழ்வதுஉலகின் நெருப்பு காதலே

உயிரில் நெருப்பு காதலே

உண்மை காதல்

உலகைவிடவும் பெரியது
- வைரமுத்து

ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் 11 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் அனைவருடனும் கலந்து பழகக்கூடியவர்கள், நண்பர்களே காதலர்களாக வரவாய்ப்பு ஏற்படலாம், முற்பிறவிகளில் விட்டுப்போன பந்தங்களினால் கூட காதல் வயப்பட வாய்ப்பு ஏற்படலாம், காதலை விரும்பக்கூடியவர்கள் எனவே காதலர்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாகவும் யோசித்து தேர்ந்தெடுப்பார்கள் எனவே இதனால் இவர்கள் காதல் வயப்பட வாய்ப்பு அதிகம் ஏற்படும்.

காலதலுக்கும் சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் லக்னம், 5 ஆம் ஸ்தானம், 7ஆம் ஸ்தானம், 11ஆம் ஸ்தானம், 4 ஆம் ஸ்தானம், 8ஆம் ஸ்தானம் ஆகிய ஸ்தானங்களில் இருக்கும் போது ஏற்படும் காதல் அமைப்புகளை பார்த்தோம் இதில் 1,5,7,11,4,8 ஆகிய ஸ்தானாதிபதிகளின் சாரத்தை சந்திரன் வாங்கினாலும் காதல் பலன்கள் உண்டு ஆனால் அவற்றை எல்லாம் எழுத முடியாது,

இனி செவ்வாய் 

ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் லக்ன ஸ்தானத்தில் இருந்தால் தனித்து இருந்தால் காதல் வயப்பட வாய்ப்பு குறைவு ஆனால் செவ்வாய் உடன் சுக்கிரனோ அல்லது 5 ஆம் ஸ்தானாதிபதி, 7ஆம் ஸ்தானாதிபதி, 11ஆம் ஸ்தானாதிபதிகளில் சேர்க்கை மற்றும் பார்வை, சாரம் பெற்றிருந்தால் இளம்பருவத்திலேயே எதிர்பாலினத்தின் மீது ஈர்ப்பு ஏற்படும் எனவே இதனால் இவர்கள் காதல் வயப்பட வாய்ப்பு அதிகம் ஏற்படும்.

ஒரு ஜாதகத்தில் லக்னத்திற்கோ சந்திரனுக்கோ 5 ஆம் ஸ்தானம், 7ஆம் ஸ்தானம் 11ஆம் ஸ்தானம், இவற்றில் செவ்வாய் நின்று சந்திரனோ சுக்கிரனோ சேர்ந்தாலோ பார்த்தலோ காதலுடன் ஆண் பெண் ஊடல்களிலும் பிரியங்கள் உள்ளவராக்கும் அதனால் இவர்கள் காதல் வயப்பட வாய்ப்பு அதிகம் ஏற்படும். சனியோ கேதுவோ சேர்ந்தாலோ பார்த்தலோ தனது சமுகபழக்க வழக்கங்களில் மீறிய சிந்தனையும் நட்பு வட்டங்களும் உள்ளவர்கள் அதனால் வேற்று மதம் சாதி அல்லது மாற்று சமூக சிந்தனை வட்டங்களில் கூட இவர்கள் காதல் வயப்பட வாய்ப்பு அதிகம் ஏற்படும்.

செவ்வாய் சுக்கிரனும் மிக நெருங்கி 10 பாகைக்குள் இருந்தாலும் காதலில் விழுவதற்கும் அல்லது எதிர்பாலினத்தின் மீது அதீத ஈர்ப்புகளினால் பாதிக்கபடவும் வாய்ப்பு பலமாக ஏற்படும்.

இனி இராகு

மேலே செவ்வாயிக்கு சொன்னது போல் தான் ஒருவரது ஜாதகத்தில் இராகு லக்னம், 5 ஆம் ஸ்தானம், 7ஆம் ஸ்தானம் 11ஆம் ஸ்தானம், இவற்றில் தனித்து இருப்பதை காட்டிலும் அங்கு சந்திரனோ சுக்கிரனோ சேர்ந்தாலோ பார்த்தலோ காதலிலும் எதிர்பாலினத்தின் மீதும் மிக ஈர்ப்பு உடையவராக மாற்றும் மேலும் காதல் செய்வதற்க்கான சூழல்களும் அமையும் அதே போல் தனது சமுகபழக்க வழக்கங்களில் மீறிய சிந்தனையும் நட்பு வட்டங்களும் உள்ளவர்கள் அதனால் வேற்று மதம் சாதி அல்லது தொழில் நட்புரீதியான சிந்தனை வட்டங்களில் கூட இவர்கள் காதல் வயப்பட வாய்ப்பு அதிகம் ஏற்படும்.

சுக்கிரன் சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் லக்னம், 5 ஆம் ஸ்தானம், 7ஆம் ஸ்தானம், 11ஆம் ஸ்தானம், 4 ஆம் ஸ்தானம், 8ஆம் ஸ்தானம் ஆகிய ஸ்தானங்களின் அதிபதிகளாகி இந்த இரு கிரகங்களும் தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்றாலோ, சேர்ந்தாலோ பார்த்தலோ, சார பரிவர்த்தனை பெற்றாலும் காதலும் அது வலுப்பெற்று பலவருட பழக்கங்கள் ஏற்படவும் வாய்ப்பு ஏற்படும்.

தொடரும்...

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

2 Response to "காதல் ஜாதகம் - சாதகமும் பாதகமும் பகுதி 4…"

  1. கன்னி லக்னம்,11ல் செவ்வாய் சுக்ரன்,அம்சத்தில் இருவரும் உச்சம்..சந்திரன் 2ல்.,சுக்ர சந்திர பரிவர்த்தனை.,சந்திரனுக்கு செவ்வாய் பார்வை,.2ஆண்டு காதல்,திருமணம் எப்படி??

    முழு ஜாதகத்தையும் ஆராய்ந்து தான் முடிவுக் வர முடியும்.

கருத்துரையிடுக

Powered by Blogger