உங்களின் அஷ்டவர்க்க பரலில் பொதுவான திருமண வாழ்க்கை பலத்தை…

உங்களின் அஷ்டவர்க்க பரலில் பொதுவான திருமண வாழ்க்கை பலத்தை


ஒருவரின் ஜாதகத்தை விரிவாக எழுதி இருந்தால் அதில் அஷ்டவர்க்க பரல் என்ற ஜோதிட கணிதத்தையும் அவரது ஜாதகத்தில் ஜோதிடர்கள் எழுதி இருப்பார்கள் இந்த அஷ்டவர்க்க பரல் முறை கணிதம் பற்றி பின்னர் விரிவாக சந்தர்ப்பம் அமைந்தால் எழுதுகிறேன் இப்போது  ஏழு கிரகம் உடன் லக்னம் ஆக அஷ்ட (எட்டு) கிரக ஆதிபத்யங்களின் பொது வலிமையை காட்டும்,

அஷ்டவர்க்க பரல் முறை கணிதம் என்பது ஒரு மேலோட்டமான கணித விகிதம் என்பதால் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் ஏன்னென்றால் இதில் நீச பங்க யோகம், உச்ச பங்க தோஷம் போன்ற யோக தோஷ பலம் பலவீனங்களை தனிபட்டு சுட்டிக்காட்டாது மேலும் கிரக சேர்க்கை அளவீடுகளை காட்டாது மற்றும் முக்கியமாக இராகு கேது நிழல் கிரகங்களுக்கு இந்த கணிதத்தில் இடமில்லை இன்னும் சொல்லலாம் எனவே ஒருவரின் தனிபட்ட பலன்களை நுணுக்கமாக கணிப்பது அவ்வளவு பொருந்தாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளவும் எனவே மேலோட்டமான அஷ்ட (எட்டு) கிரக ஆதிபத்ய பலத்தை பார்த்துக்கொள்ளலாம் அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், 

அப்படி அஷ்டவர்க்க பரல்களின் மூலம் ஒருவரது ஜாதகத்தில் திருமண வாழ்க்கை பலத்தை எளிமையாக அறிய அவரின் பொது ஜாதக இராசிகட்டத்தில்

ஜென்ம லக்கனத்திற்கு 7 ஆம் ஸ்தானத்தின் (களத்திர ஸ்தானம் - இல்லற வாழ்க்கை) மொத்த பரல்கள் மற்றும் 12 ஆம் ஸ்தானத்தின் (அயன சயன போக ஸ்தானம்) மொத்த பரல்கள் இவற்றில் ஏதாவது ஒரு ஸ்தானத்தின் பரல்கள் 24 பரல்களுக்கு குறைவாக இருந்து மற்ற ஸ்தானத்தின் பரல்கள் அதிகமாக இருந்தால் பொதுவான திருமண வாழ்க்கையை பலவீனப்படுத்தும். உதாரணமாக


இதில் பாருங்கள் கும்ப லக்னம் 7 ஆம் ஸ்தானம் 36 பரல்கள் வாங்கி பலப்பட்டு 12 ஆம் ஸ்தானம் 18 பரல்கள் வாங்கி பலவீனப்பட்டுள்ளது இவரின் திருமண வாழ்க்கை தோல்வி கண்டது,


இதில் பாருங்கள் மிதுன லக்னம் 7 ஆம் ஸ்தானம் 24 பரல்கள் வாங்கி பலவீனப்பட்டுள்ளது 12 ஆம் ஸ்தானம் 31 பரல்கள் வாங்கி பலப்பட்டுள்ளது இவரின் முதல் திருமண வாழ்க்கை தோல்வி கண்டது,

மேலும் ஒரு ஜோதிட விதி லக்ன ஸ்தானம் பரல்கள் + 7 ஆம் ஸ்தானம் பரல்கள் இதை கூட்டி வரும் தொகையானது, 6 ஆம் ஸ்தானம் பரல்கள் + 8 ஆம் ஸ்தானம் பரல்கள் இதை கூட்டி வரும் தொகையை விட அதிகமாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் பொதுவான திருமண வாழ்க்கையை பலப்படும். உதாரணமாக


+7ம் = 68, 6ம்+8ம் = 52 - இந்த ஜாதகர் மனைவியுடன் ஒற்றுமையாகவும் சிறப்பாகவும் செல்வ வளத்துடனும் குழந்தை செல்வங்களுடனும் வாழ்கிறார்கள்.

லக்ன ஸ்தானம் பரல்கள் + 7 ஆம் ஸ்தானம் பரல்கள் இதை கூட்டி வரும் தொகையானது, 6 ஆம் ஸ்தானம் பரல்கள் + 8 ஆம் ஸ்தானம் பரல்கள் இதை கூட்டி வரும் தொகையை விட குறைவாக இருந்தால் பொதுவான திருமண வாழ்க்கையை பலவீனப்படுத்தும்.

லக்ன ஸ்தானம் பரல்கள் + 7 ஆம் ஸ்தானம் பரல்கள் இதை கூட்டி வரும் தொகையும், 6 ஆம் ஸ்தானம் பரல்கள் + 8 ஆம் ஸ்தானம் பரல்கள் இதை கூட்டி வரும் தொகையும் ஆக இரண்டில் பரல் தொகையும் சம வலுவான எண்ணிக்கையில் இருந்தால் கணவன் மனைவி ஒற்றுமை அல்லது ஒத்திசைவுக்கு இடையூறுகளை கொடுக்கும்.

லக்ன ஸ்தானம் பரல்கள் + 7 ஆம் ஸ்தானம் பரல்கள் இதை கூட்டி வரும் தொகை 50 பரல்களுக்கு குறைவாக வந்தாலும் கணவன் மனைவி ஒற்றுமை அல்லது ஒத்திசைவுக்கு இடையூறுகளை கொடுக்கும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


1 Response to "உங்களின் அஷ்டவர்க்க பரலில் பொதுவான திருமண வாழ்க்கை பலத்தை…"

  1. Velu R says:

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது. உங்களின் சேவை தொடர நான் ஆண்டவனை பிராதிக்கிறேன்.

கருத்துரையிடுக

Powered by Blogger