ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) ஜாதகம் - உலகின் முக்கியமான இயற்பியல், அண்டவியல் ஆய்வாளர்…


ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) ஜாதகம் - உலகின் முக்கியமான இயற்பியல், அண்டவியல் ஆய்வாளர்

ஸ்டீபன் ஹாக்கிங் ஆசிரியர் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள கோட்பாட்டு அண்டவியல் மையம் ஆராய்ச்சி இயக்குநர். இவரது அறிவியல் படைப்புகள் அண்டவியலும் (cosmology), குவாண்ட்டம் ஈர்ப்பும் (quantum gravity), கருங்குழி (black holes) ஆகும். ஆராய்ச்சித் துறைக்கான இவரது முக்கியமான பங்களிப்பு கருங்குழி (black holes)களுக்கும், கருங்குழி (black holes) வெளியேறும் கற்றை தொடர்பான ஆராய்ச்சி கட்டுரைகளின் நிரூபனத்திற்க்காக அந்த கருங்குழி வெளியேறும் கற்றைக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயர் சூட்ட பட்டுள்ளது.

இந்த ஜோதிட கட்டுரை எழுத காரணம் ஒருவர் உடல்நிலை வீழ்ந்தாலும் தன் இருக்கும் மட்டும் தனது மாறாத நோக்கம் செயலின் காரணமாக சாதிக்க இயலும் என்பதை காட்டும் வீதமான ஜாதகம் என்பதால் இதை எழுத ஆரம்பிக்கிறேன்,

இவர் அண்டவெளியின் தோற்றத்தையும், அதன் பரிணாம வளர்ச்சியையும் பற்றி ஆராய்ந்து மகத்தான கண்டுபிடிப்புகளை வெளியிட்டவர், இவர் எழுதிய அறிவியல் நூல்களான, நேரத்தின் ஒரு சுருக்க வரலாறு (A Brief History of Time), The Universe in a Nutshell ஆகிய இரண்டும், உலகம் முழுவதும் மிகப் பிரபலமாக விற்பனையாகிச் சாதனை படைத்த நூல்கள் ஆகும்,

ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) ஜாதகம்

இவர் 21 வயதிலேயே அதாவது சர லக்னம் என சுட்டகாட்டபடகின்ற துலாம் லக்னத்திற்கு 2,7ம் ஸ்தானங்கள் மாரக ஸ்தானமாகும் அதாவது உடலை பெரிய அளவில் பாதிக்க கூடிய நோய்கள், கண்டங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்தக் கூடியவராக செவ்வாய் உள்ளார் இவர் ஏழில் சனியுடன் சேர்ந்து ஆட்சி பெற்று கேதுவின் சாரம் பெற்று நவாம்சத்தில் கேதுவுடன் சேர்ந்தும் இராசிகட்டத்தில் லக்னத்தை பார்க்கிறார் மேலும் லக்னாதிபதியான சுக்கிரன் மாராகாதிபதியான செவ்வாயின் சாரம் பெற்று நவாம்சத்தில் 12 நீசமும் அடைகிறார் மேலும் கூட சேர்ந்த புதனும் பாதகாதிபதியன் சாரம் ஆகும் அதனால் சரியாக செவ்வாய் திசையில் சுக்கிரன் புத்தியில் குணப்படுத்த முடியாத அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis,) என்னும் நரம்பு நோயால் தாக்குண்டார்,  

இந்த நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார், கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தநிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்கு ஆளானார் அப்படி பாதிக்கபட்டும் கூட தீர்க்கமான ஆயுளில் வாழ்ந்த்து கொண்டிருகிறார் காரணம் துலா லக்ன யோகாதிபதியான சனி பகவான் நீசபங்க ராஜயோகத்தை அடைந்து லக்னத்தையும் லக்னாதிபதியான சுக்கிரனையும் பார்ப்பதாலும் மற்றும் குரு பகவானும் புதன், சுக்கிரனை பார்ப்பதாலும் நோயுடன் கூடிய ஆயுளை பெற்றார்,

இப்படி தன் உடல் நோயினால் சிதைவடைந்த பின் தான் தனது அனைத்து சாதனை கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடிக்க ஆரம்பித்தார், முதலில் ஆய்வு, ஆராய்ச்சி என்றால் அதற்கு முக்கிய காரகத்துவம் பெற்றவர் புதன் பகவான் ஆகும் வேத ஜோதிடத்தில் புதன் பகவானை பெரிய விஞ்ஞானி. தர்ம சாஸ்திரம், வித்யா சாஸ்திர நூல்களை படைப்பவர் என்று புகழ்கிறது, மேற்கத்திய ஜோதிடத்தில் புதன் பகவானை கடவுளின் தூதுவர் என்றும் பகுப்பாய்வு மற்றும் கணிப்பு தேவர் என்றும் கூறுகிறது, இப்படிபட்ட புதன் இவரின் லக்னாதிபதியுடன் இணைந்து நிபுனத்துவ யோகம் ஏற்படுத்தி மற்றும் அந்த யோகத்தை குரு பகவானும் சனி பகவானும் பார்த்தும் மேலும் புதன் சுக்கிரன் 10 ஆம் கர்ம ஸ்தானத்தை பார்த்து ஆய்வு, ஆராய்ச்சி மனபான்மையை ஏற்படுத்தி உள்ளனர்,

மற்றவர்களால் எளிதாகவோ அல்லது மற்றவர்களிடம் எளிதாக விளக்கம் சொல்லதக்க அதே நேரத்தில் புதிய  ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பு செய்வதற்க்கான ஸ்தானம் ஐந்தாம் ஸ்தானம் (ஜாதகத்தில் ஐந்தாம் வீடு சொல்லும் உண்மை என்ன?) இதன் அதிபதி சனி பகவான் நீசபங்க ராஜ யோகம் பெற்று ஆட்சி பெற்ற எந்திரவியலுக்கு காரகத்துவமும் பெற்ற செவ்வாயுடன் சேர்ந்து அணு விஞ்ஞானத்திற்கு அதிபதியான சூரியனின் சாரம் பெற்று அமைந்ததால் குவாண்டம் ஈர்ப்பு விசை மற்றும் குவாண்டம் மெக்கானிக்ஸ் என்ற படிப்பில் தனது ஆராய்ச்சி மேற்படிப்பை தொடங்கினார் இவர் தனது கண்டுபிடிப்புகள் பெரும்பாலானவைகளை இயற்பியல் (சனி பகவான்), ஈர்ப்பியல் விசை gravity (சூரிய பகவான்) இத்தகை துறைகளின் கலப்பான துறையில் தான் செய்தார் காரணம் சனி சூரியனின் சாரம் பெற்று நீசபங்க ராஜ யோகம் பெற்று பஞ்சாம்சம், சஷ்டாம்சம், சப்தாம்சம், தசாம்சம், திரிம்சாம்சம் ஆகிய அம்சங்களில் எல்லாம் ஆட்சி, உச்சம் அடைந்து மிக உயர்ந்த வர்க்கோத்தம பலத்தை சனி மறைமுகமாக பெற்று வலிமை அடைகிறார் நான் இதை வெறுமனே எழுதிகொண்டு போவதை விட இவரின் தசாம்சத்தை பார்த்தால் உங்களுக்கே புரிந்துவிடும்
 

தசாம்சத்தை பாருங்கள் சனியும் ஆட்சி வீடு, சூரியனும் ஆட்சி வீடு உடன் விண்வெளி ஆகாயத்திற்கு காரகத்துவம் பெற்றவர் குரு பகவான் உச்சமும் அடைகிறார் இப்படி உயர்வான அமைப்புகளால் தனது மதிப்புமிக்க கண்டுபிடிப்புகளை செய்து விஞ்ஞான உலகத்தில் மதிப்புமிக்க இடத்தை அடைந்துள்ளார்.

கருங்குழி (black holes) ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் தான் இவரை உலகப்புகழுக்கு தூக்கி கொண்டுவந்தது கருங்குழி என்பது நவீன அறிவியல் என்று அழைக்கப்படுகிறது வலுவான ஈர்ப்பு சக்தி தான் இந்த கருங்குழி இது ஒளி, ஒலி என அனைத்தையும் தன்னுள் ஈர்த்து அடங்கி பின் கருங்குழிக்குள் அகப்பட்ட பொருட்களை முடிவின்றி உள்ளே வைத்திராமல், கருங்குழிகள் இவற்றை ஒருவித வெப்பச் சக்தி வடிவில் கசியவிடக்கூடும் என இத் துறையிலான ஆய்வுகள் காட்டினார் இது தான் ஹோக்கிங் கதிர்வீச்சு எனப் பின் இவரது பெயர் பெற்றது,

இதை பற்றிய எந்த விதமான ஆராய்ச்சியை செயல் வடிவமாக செய்து பார்க்க இவருக்கு நோயால் உடல் வலுவில்லை இருந்த போதும் சிந்தினை படிப்பு என தனது மனோசக்தியால் நேரம், அண்டம், கருங்குழி பற்றிய கருத்தியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்ற பொருமை இவருக்கு உண்டு நான் முதலில் சொன்னபடி ஈர்ப்பியல் விசை gravity சூரிய பகவான் அதிபதி ஆவார் சூரிய பகவானின் சாரத்தில் சனி நீசபங்க ராஜ யோகம் பெற்றதாலும் மேலும் சந்திரன், புதன் ஆகிய கிரகங்களும் சூரிய பகவானின் சாரத்தில் அமைந்து சந்திரன், இராகு, சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் நெருப்பு பஞ்சபூத இராசியில் இருந்தது இதனால் சனியின் வலுவில் சூரியனின் வலுவும் கலந்து இவரது ஜாதகத்தில் அமைந்து விட்டது.

கொடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட போதும் 7 ஆம் ஸ்தானாதிபதி ஆட்சி வீட்டில் சிறப்பாக உள்ளதால் ஹாக்கிங் ஜேன் என்பவர் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார், இவர் அறிவியல் உலகமெங்கும் விருதுகள் பெற்றுள்ளார் ஸ்டீபன் ஹாக்கிங் Pius XI அறிவியல் கழகத்தில் தங்கப்பதக்கம், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பதக்கம், ராணி இரண்டாம் எலிசபெத் பிரிட்டிஷ் பேரரசின் சார்பாக சர் விருது, ஜனாதிபதி பாரக் ஒபாமாவிடம் இருந்து சுதந்திர ஜனாதிபதி பதக்கமும் வென்றுள்ளார்,  

புகழ் ஸ்தானத்திற்கு அதிபதியான புதன் புகழுக்கு அதிகார கிரகமான சூரியனின் சாரம் பெற்று அமைந்ததும் அந்த சூரியன் புகழ் ஸ்தானமான 9 ஆம் ஸ்தானத்தை பார்ப்பதும், நவாம்சத்தில் ஒன்பதுக்கு உடையவன் புதன் 5ல் அமர்ந்து 5க்குடைய சனியால் பார்க்கபட்டு 5க்குடைய சனியால் ஒன்பதாம் ஸ்தானமும் பார்க்கபட்டு ஒன்பதில் அமர்ந்த குருவால் புதனும் பார்க்கபட்டுள்ளது 5க்கும் 9க்கும் மிகநல்ல தொடர்பு அமைந்தாலும் ஏன் தசாம்சத்தில் கூட 9 ஆம் ஸ்தானத்தின் அதிபதி புதன் லக்னத்தில் அமைந்த 5க்குடைய சனி 4ல் ஆட்சி பெற்று 10 ஆம் பார்வையாக புதனை பார்க்கிறது அதனால் உலகமெங்கும் விருதுகளால் கவுரவிக்கபட்டுள்ளார்.

குருவின் திசையில் தான் இவரின் நேரம் ஒரு சுருக்கமான வரலாறு என்ற உலகப்புகழ் பெற்ற புத்தகம் வெளியிடபட்டது, இவரது குவாண்டம் ஈர்ப்பு விசை மற்றும் குவாண்டம் மெக்கானிக்ஸ் துறையில் அவரது எண்ணற்ற ஆய்வு கட்டுரைகள் மற்றும் அதன் அங்கீகாரம், விருதுகள் என அனைத்தும் கிடைந்தாக அவருக்கு அமைந்தது நான் முதலீலேயே இவரின் ஜாதகத்தில் வலுமையானவர் என்று சொன்ன சூரிய பகவானின் சாரத்தில் நீசபங்க ராஜ யோகம் பெற்ற சனியின் திசையில் தான் சுமார் இது 1998 முதல் 2017 வரை உள்ளது இதில் தான் ஆராய்ச்சியில் வெற்றி மற்றும் உலக அங்கீகாரத்தையும் பெற்றுவருகிறார்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


0 Response to "ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) ஜாதகம் - உலகின் முக்கியமான இயற்பியல், அண்டவியல் ஆய்வாளர்…"

கருத்துரையிடுக

Powered by Blogger