உங்களின் லக்னாதிபதியின் சிறப்பும் அதனால் உண்டாகும் பலனும்… - பகுதி 1

உங்களின் லக்னாதிபதியின் சிறப்பும் அதனால் உண்டாகும் பலனும்… - பகுதி 1


உங்களின் லக்னாதிபதி சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகி அவர்கள் சிறப்பாக ஜாதகத்தில் அமைந்திருந்தால் வரும் பலன்கள்


முதல் பாடலின் விளக்கம் -
உங்களின் லக்னத்தின் ராசிநாதன் (லக்னாதிபதி) நல்ல வலுவாக அமைந்தால் அதனால் அவன் பிறப்பு உயர்வான பிறப்பாக இருக்கும், அனுபவிக்கும் கர்ம வினைகள் சிறப்பாக அமையும், உயிராற்றல் புலனாற்றல் சிறப்பாக இருக்கும், அவனது தோற்றத்தால் மற்றவரை ஈர்ப்பான், திடமான ஆயுளும் இருக்கும், திறமாய் உலகை வலம் வருவான் (he impressed the world to his Talent), அப்படி வலுவாகும் அந்த லக்னாதிபதி சூரியன் ஆனால் நன்கு பரிமாணிக்கும் தேகம், சிறந்த கண்கள், பித்தத்தினால் வரும் பாதிப்புகள் வராது, அளவாக வளரும் தலைமயிர் கொள்வான்.

இரண்டாம் பாடலின் விளக்கம் -
அப்படி வலுவாகும் அந்த லக்னாதிபதி சந்திரன் ஆனால் நன்கு வட்டமான உடலும், குளிர்ந்த தேகம், மூச்சு சுவாசத்தில் பலம் மற்றும் பாதிப்புகள் வராது, எந்த சூழலிலும் அறிவார்ந்த பார்வை கொண்டிருப்பார், இனிமையான பேச்சு, அடர்ந்த முடி அழகும் கொண்டிருப்பார், ஆதியாக வந்த சூரியசந்திரர்களின் பலனை சொல்லி உள்ளேன் அடுத்து அப்படி வலுவாகும் அந்த லக்னாதிபதி செவ்வாய் ஆனால் இளமையும் வனப்பும் கொண்ட தேகம் அதனால் பிரகாசமான தோற்றம் கொண்டிருப்பார், அவர்கள் மனம் மிகவும் வேகமானது, அழகான இடுப்பும் பலமான கைகால் மூட்டும் கொண்டிருப்பார்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "உங்களின் லக்னாதிபதியின் சிறப்பும் அதனால் உண்டாகும் பலனும்… - பகுதி 1"

கருத்துரையிடுக

Powered by Blogger