நவகிரகங்களின் பார்வை எடுத்துக்காட்டு விளக்கம் பகுதி 2 - ஓஷோ ஜாதகம்...

நவகிரகங்களின் பார்வை எடுத்துக்காட்டு விளக்கம் பகுதி 2 - ஓஷோ ஜாதகம்...

நவகிரகங்கள் பார்வை செய்யும் ஸ்தானங்கள் அதன் விளக்கம் போன்றவை பற்றி கிரக பார்வை என்றால், நவகிரகங்கள் பார்வை செய்யும் ஸ... - பகுதி 1 என்ற வலைபதிப்பில் விளக்கமாக பார்த்தோம் இதில் நவகிரகங்கள் பார்வை செய்யும் ஸ்தானங்களின் பலன்களை காணும் சில எளிய விளக்கங்களை உதாரண ஜாதகத்தை வைத்து பார்ப்போம்,

உதாரணத்துக்கு எடுத்துக் கொண்ட ஜாதகம் மிகவும் வித்தியாசமான அதே நேரத்தில் பார்வைக்கு விளக்கம் தர எற்று ஜாதகமாக எடுத்துள்ளேன் அவர் தான் ஓஷோ தத்துவஞானி இவரை அறியாதவர்கள் இருக்க முடியாத அந்தளவுக்கு சுப அசுப புகழின் அனைத்து உச்சங்களையும் அனுபவித்தவர் இவர் தனது ஆன்மீக தத்துவங்களின் காரணமாக மிக அதிக ஆதரவாளர்களையும், மிக அதிக எதிர்ப்பாளர்களையும் தன் வாழ்நாளில் அனுபவித்தவர், எதன் மூலம் இத்தகை இடத்தை அடைந்தார் என்று யோசித்தால் அவரது சிந்தனைகள் மற்றும் அவரின் பேச்சுக்கள்,

ஒஷோ ஒரு முறை சொல்லியிருப்பார் "நான் எனது தத்தவங்களை சிந்தனைகளை எதையும் எழுதியதே இல்லை" இப்படி இருப்பினும் இவரது தத்தவங்களும் சிந்தனைகளும் உலகில் உள்ள 200 க்கும் மேற்பட்ட புத்தக வெளியீட்டாளர்கள் மூலமாக 60 மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது எப்படி இது நிகழ்தது அவரின் ஒவ்வொரு பேச்சும் கவரக்கூடியதாகவும் மற்றும் அதை புத்தகமாக்கினால் விற்று சாதனை படைக்கும் படியானதாகவும் இருந்தது எனவே தனது பேச்சின் மூலமாக உலகை தன்னை நோக்கி ஈர்க்கவும் வைத்தவர் எதிர்க்கவும் வைத்தவர்.

ஓஷோ ஜாதகம்

இந்த கிரக பார்வை பற்றி பேசும் போது யாவரும் தனக்கும் இதே போல எனக்கும் குரு உச்சம் சார் நானும் ரிஷப லக்னம் தான் என்றெல்லாமும் நினைத்து எனக்கும் இதே போல பலன்கள் தான் தருமா என்று நினைப்பார் அப்படி அல்ல எப்படி ஒருவரின் இராசிகட்டம் கணித்து அமைக்கிறோமோ அதே போல அந்த கிரகங்களின் பார்வைகளை வைத்து கிரக பார்வைகளின் சக்கரம் ஒன்று அமைக்கபட்டுள்ளது அதில் நவகிரகங்களின் பார்வை தாக்கமும் அந்த ஜாதகருக்கு தெரியும் அதுதான் நிஜமான நவகிரக பார்வை பலம் ஆகும் எனவே வெறும் ஒரு சில கிரகங்களின் பார்வை பலத்தை வைத்து ஜாதக பார்வை பலத்தை நிர்ணயித்துவிடக்கூடாது.
ஒஷோ ஜாதக பார்வை சக்கரம்

ஓஷோவின் இராசிகட்டத்தில் லாபாதிபதியும், மறைஞான ஸ்தானாதிபதியும் ஆன குரு பகவான் உச்ச பெற்று உள்ளார் எப்படி 8 ஆம் ஸ்தானத்தில் சந்திரன், சனி, புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய ஐந்து கிரகங்களும் 8ல் இருந்து அந்த 8 ஆம் ஸ்தானாதிபதி ஆன குரு பகவான் உச்ச பெற்று அமைந்து சுப அசுப தன்மை கலந்த மிக மிக பலமான குரு பகவான் ஆகி அவர் பார்க்கும் ஸ்தானங்களான ஜென்ம லக்னித்திற்கு 7 ஆம் ஸ்தானத்தை பார்ப்பதால் மக்கள் தொடர்பு இவருக்கு மிக அதிகம் மற்றும் செக்ஸ் குரு என்றெல்லாம் பேசப்பட்டவர் (https://en.wikipedia.org/wiki/Rajneesh), 

9 ஆம் ஸ்தானத்தை பார்ப்பதால் பொதுவாக குரு 9 ஆம் ஸ்தானத்தை பார்த்தால் மத மற்றும் தத்துவ சிந்தனைகள், தியானம், தமது உள்ளுணர்வுக்கு மதிப்பு மற்றும் இதை பற்றியெல்லாம் மற்றவருக்கு குரு உபதேஷம் செய்வது என்பது தானாக வரும் இதில் குரு பகவான் உச்ச பெற்றதால் இந்த விஷயங்களில் மிக உயர்ந்த இடத்தை அடைந்தார்

கிரக பார்வை விதி - கிரகங்கள் தனது சுய இராசிகளை பார்வை செய்யும் போது அதிக அளவு பார்வை பலத்தை அந்த ஸ்தானங்களுக்கு தரும். 

11 ஆம் ஸ்தானத்தை பார்க்கிறார் 11 ஆம் ஸ்தானம் குருவின் சொந்த வீடு ஆவதால் இன்னும் பலமான பார்வை பலத்தை தருவார் அதனால் புதுவித சந்நியாச தத்துவத்தை பிரகடன படுத்திய இவர் தன்னை பணக்காரர்களுக்கு மட்டுமான குரு என்று தன்னை அறிவித்து கொண்டார் அதன் மூலம் இவரது பணக்கார சீடர்களின் செல்வங்கள் இவருக்கு உழைக்காமலேயே பரிசாக தரபட்டு அனுபவித்தார். இந்த சிறப்பை சுருக்கமாக சொல்வதானால் இவருக்கு பரிசாகவே பல ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் தரப்பட்டன அது கோடீஸ்வர்களுக்கான கார் ஆகும் இதனால் அமெரிக்காவில் இருந்த போது இவர் தினமும் ரோல்ஸ் ராய்ஸ் காரில் தான் ஆசிரமத்திற்கு வருவார்.

கிரக பார்வை விதி - அதிக கிரகங்கள் ஒரு இராசிகளை பார்வை செய்யும் போது அதிக அளவு பார்வையால் பலமுனைபோட்டி பலம் அந்த ஸ்தானங்களுக்கு கிடைக்கும்.
ஓஷோவின் இராசிகட்டத்தில் பார்வை பலத்தை காட்டக்கூடிய முக்கிய ஸ்தானமாக இருப்பது 2 ஆம் ஸ்தானம் ஆகும், ஆம் 8 ஆம் ஸ்தானத்தில் சந்திரன், சனி, புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய ஐந்து கிரகங்களும் அமர்ந்து அவை அனைத்தும் 7 ஆம் பார்வையாக (100%) 2 ஆம் ஸ்தானத்தை பார்க்கும், 2 ஆம் ஸ்தானம் என்பது வாக்கு ஸ்தானம் அதாவது பேச்சு, பேசும் விதம், பேசப்படு பொருள், அதன் எழுத்து வடிவம், விஷயங்களை புரிந்து கொண்ட கோணம் இவைகளின் பலத்தை காட்டக்கூடிய ஸ்தானம் ஆகும், 

நான் முதலிலேயே சொன்னவாறு இவரது பேச்சின் மூலமாக வெளிபட்ட தத்தவங்களும் சிந்தனைகளும் உலகில் உள்ள 200 க்கும் மேற்பட்ட புத்தக வெளியீட்டாளர்கள் மூலமாக 60 மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது அதன் மூலம் நீடிக்கும் புகழ் வெளிச்சத்தை இறந்த பிறகும் பெற்றவராகிரார், எதையும் மறுபட்ட புதிய கோணத்தை கவனிப்பதும் அதை அதே கோணத்தில் யாருக்கும் அச்சப்படாமல் பேசுவதும் மற்றும் கவர்ந்து இழுக்க கூடிய வார்த்தை நயம், நகைசுவை, கிண்டல் சலிப்புதாராத பேச்சு, அதே போல எதிரான கருத்து கொண்டவர்களை கொதித்து எழ வைக்க கூடிய பேச்சாகவும் அமைந்தது இவரின் பேச்சுக்கள், இப்படி சந்திரன், சனி, புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய ஐந்து கிரகங்களும் 2 ஆம் ஸ்தானத்தை பார்த்து அந்த பார்வை பலத்தின் காரணமாகவே தனது பேச்சால் எழுந்தார் உயர்ந்தார் கவனிக்க பட்டார் மேலும் தன் பேச்சால் பழிவாங்கவும் பட்டார்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "நவகிரகங்களின் பார்வை எடுத்துக்காட்டு விளக்கம் பகுதி 2 - ஓஷோ ஜாதகம்..."

கருத்துரையிடுக

Powered by Blogger