ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 35 - இந்திராம்ச யோகம்…

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 35 - இந்திராம்ச யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


இந்திராம்ச யோகம்
ஜென்ம லக்னம் ஸ்திர லக்னம் (ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்) ஆகி லக்னாதிபதியும் 11 ஆம் ஸ்தானாதிபதியும் ஒருவர் ஸ்தானத்தில் இன்னொருவரும் அவர் ஸ்தானத்தில் இவருமாக மாறி அமையும் பரிவர்த்தனையோகம் பெற்று, 2 ஆம் ஸ்தானாதிபதி 2 ஆம் ஸ்தானத்தில் இருக்க வேண்டும் அல்லது 10 ஆம் ஸ்தானாதிபதி 10 ஆம் ஸ்தானத்தில் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் இந்த இந்திராம்ச யோகம் ஏற்படும்.
இதில் பாப கிரகங்களாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் பகை கிரகங்களிலின் தொடர்பு மற்றும் பார்வை கேதுவின் அதிக தொடர்பு யோகத்தை பங்க படுத்தும்.

இதன் பலன்கள் -
அழகான தோற்றம், கவர்ந்து இழுக்க கூடிய தேஜஸ், ஆண் \ பெண் ஈர்ப்பு, புகழ், ஆடம்பர கட்டடம், எதையும் எதிர்த்து போராடும் திறமை, நல்ல வாழ்நாள், வலுவான பண பலம் அல்லது செல்வாக்கு பலம் ஏற்படும், அரசு அரசியல் செல்வாக்கு பலம், பலமான கூட்டமும் அல்லது ஆதரவும் வாழ்க்கையில் ஏற்படும்.

0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 35 - இந்திராம்ச யோகம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger