கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள்...
நட்சத்திரம் - கார்த்திகை
நட்சத்திர ஆதிபத்ய கிரகம் -சூரியன்
நட்சத்திர அதிதேவதைகள்  - அக்னி தேவன், கார்த்திகேயன்
நட்சத்திர யோனி - பெண் ஆடு
நட்சத்திர கணம் - ராக்ஷச கணம்
நட்சத்திர பூதம் - நெருப்பு
இராசி இருப்பு - கார்த்திகை 1 ஆம் பாதம் = மேஷம், கார்த்திகை 2,3,4 ஆம் பாதம் = ரிஷபம்
இராசி நாதன் - கார்த்திகை 1 ஆம் பாதம் = செவ்வாய், கார்த்திகை 2,3,4 ஆம் பாதம் = சுக்கிரன்

சந்திரன் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் பிறந்தவர்களுக்கு அஸ்வினி நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும் ஜென்ம இராசி மேஷ இராசியாகும்.
ஏன் சந்திரன் - சந்திரனே மனசுக்கு காரன் மற்றும் உடல்காரகனும் இந்த கிரகம் தான் அதனால் தான் ஒவ்வொரு மனிதனின் மன குண இயக்கத்தை பார்க்க ஜோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது.

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள் -

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவான உணவு நாட்டங்கள் மற்றும் சுவை விருப்பங்கள் -
காரம், சூடான உணவுகள், முட்டை, இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவுவகைகளில் அதிக பிரியம், புளிப்பான ரசம், புளிக்குழம்பு, உப்பு நிறைந்த எண்ணெயில் பொரித்த உணவுகள், உலர்ந்த மற்றும் எரிகின்ற உணவுப் பொருள்கள், அப்பள வகைகள், எலுமிச்சை மற்றும் அன்னாச்சி பழம் போன்ற பழவகைகள், வடை பஜ்ஜீ போன்ற வகைகள், இனிப்பு நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த இனிப்பு உணவுகள், துரித உணவுகள், பூண்டினால் உருவாக்கிய உணவுகள், கிழங்கு வகைகளை மசாலாக்கள் பயன்படுத்தி வேக வைத்த உணவுகள் ஆகியவை பொதுவான உணவு நாட்டங்கள் மற்றும் சுவை விருப்பங்களாக இருக்கும்.

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணுக்கு வரும் பாடல் -
கார்த்திகை உதித்தோள் சிடுமுகம் கோபி சுத்தமேனி உண்டு
கீர்த்தி சுறுசுறுப்பு பசிதேகம் பந்துவிரோதம் போதாத குணம்
பார்க்க நோக்கமுண்டு பயமும் உண்டு தியாகம் சத்பிரியம்
நேர்படும் பேச்சறிவு இத்தையலிர் குணமாகும் கேளீர் - சோதிட அங்க சாரம்

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த அடியார்கள் & மகான்கள் -
இடங்கழி நாயனார்
கணம்புல்லர்
புகழ்சோழன்
மூர்த்தி நாயனார்
திருப்பாணாழ்வார்

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...


0 Response to "கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்... "

கருத்துரையிடுக

Powered by Blogger