பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...


பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள்...

நட்சத்திரம் - பரணி
நட்சத்திர ஆதிபத்ய கிரகம் - சுக்கிரன்
நட்சத்திர அதிதேவதைகள்  - துர்கை, எமன், காளி
நட்சத்திர யோனி - பெண் யானை
நட்சத்திர கணம் - மனுஷகணம்
நட்சத்திர பூதம் - நிலம்-காற்று
இராசி இருப்பு - மேஷம்
இராசி நாதன் - செவ்வாய்

சந்திரன் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் பிறந்தவர்களுக்கு அஸ்வினி நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும் ஜென்ம இராசி மேஷ இராசியாகும்.
ஏன் சந்திரன் - சந்திரனே மனசுக்கு காரன் மற்றும் உடல்காரகனும் இந்த கிரகம் தான் அதனால் தான் ஒவ்வொரு மனிதனின் மன குண இயக்கத்தை பார்க்க ஜோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது.

 
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள் -
வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை அனுபவிக்க ஆர்வமும் அவசரமும் காட்டக்கூடியவர்கள், படைப்பு திறன்கள் அதிகம் இருக்கும், மிக சுயநலவாதிகளாக இருப்பார்கள் அதனால் இவர்களிடம் நியாயம் தர்ம தீர்ப்புகள் கேட்பது அவ்வளவு பொருந்தாது, இனிப்பு சுவையூட்டி உணவுப் பதார்த்தங்களில் அதிக நாட்டம் உடையவர்கள், பிடித்ததை செய்தால் பாராட்டுவர் பரிசளிப்பர் பிடிக்காததை செய்தால் திட்டுவார் தண்டனையும் தருவார், எளிதில் யாரையும் நேசிக்க கூடியவர், தெற்கு திசை இவருக்கும் சாதகமான திசையாக இருக்கும், அன்றாட நடவடிக்கைகளுக்கு செயல்திறனும் மற்றும் வேகமும் காட்டக்கூடியவர், தைரியம் அதிகம் அதனால் எந்த உயரத்திற்கும் தன்னை வளர்த்துக்கொள்ள எதையும் கற்றுக்கொள்ளவோ அல்லது முயற்சி செய்யவோ இவர்களுக்கு எண்ணமிருக்கும் மற்ற கிரகங்கள் ஒத்துழைத்தால் அதனால் உயர்வான இடத்தை அடைவார்கள், பொதுவாக இவர்களுக்கு மற்றவர்களை பாதுகாக்கும் குணம் அதிகம் அதனால் மற்றவர்களை அல்லது பொருட்களை பாதுகாக்கும் பணிகள் நன்றாக வரும், காதல் உணர்வுகள் மற்றும் பாச உணர்வுகள் அதிகம் உள்ளவர்கள், அவசர குணம் தான் இவர்களுக்கு முக்கிய பலவீனம், ஆசைகளை அடக்கி கொள்ளும் திறனும் குறைவு.


பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவான உணவு நாட்டங்கள் மற்றும் சுவை விருப்பங்கள் -
காரம், சுவை கூட்டபட்ட உணவுகள், இனிப்பு நிறைந்த உணவுகள், சூடான உணவுகள், பழங்கள் அதன் சாறுகள் சேர்த்த உணவுகள், முட்டை, இறைச்சி, மீன், இனிப்பு நீர் கலந்த உணவுகள், எண்ணெயில் வேக வைத்த உணவுகள்,  குளிர் ஊட்டியே பாதுகாத்த உணவுகள், ரஜோ+ தமோ குண உணவுகள், மசாலாக்கள் பயன்படுத்தபட்ட உணவுகள், நீர் நிறைந்த பழங்கள் காய்கறிகள், ஊட்டமளிக்கும் உணவுப் பதார்த்தங்கள், ஆவியில் வேக வைத்த உணவுகள், பாலில் செய்யும் உணவுகள் ஆகியவை பொதுவான உணவு நாட்டங்கள் மற்றும் சுவை விருப்பங்களாக இருக்கும்.


பரணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணுக்கு வரும் பாடல் -
பரணி உதித்தோள் அங்கங்களால் அழகுள்ள மேனியாம்

வரம் தரும் வித்தகி புது ஆடை ஆபரண பிரியை படைப்பு

பாரங்களை சுமத்தல் நெஞ்சார நேசித்தல் உண்டாம் மதி

திரள் கெடில் வைதல் வசவுகள் கட்டுப்பாடு இழப்பாம்
- சோதிட அங்க சாரம்

பரணி நட்சத்திரத்தில் பிறந்த அடியார்கள் & மகான்கள் -
கழற்சிங்கர்
சிறுதொண்டர்
நின்றசீர் நெடுமாறன்
சுவாமி சிவானந்த சரஸ்வதி


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்... "

கருத்துரையிடுக

Powered by Blogger