பஞ்ச மஹா புருஷ யோகங்களின் தொகுப்பு….


பஞ்ச மஹா புருஷ யோகங்களின் தொகுப்பு….

பழமையான ஜோதிட நூல்களான சராவளி, பலதீபிகா போன்ற நூல்களும் மற்றும் நவீன ஜோதிட நூல்களும் எடுத்துரைக்கும் யோகங்கள் முக்கிய யோகங்களாக இருப்பது இந்த பஞ்ச மஹா புருஷ யோகங்கள் ஆகும், ஜோதிடத்தில் தலைமையான கிரகங்களாக இருப்பது சூரியனும், சந்திரனும் இந்த இரு கிரகங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் பழங்காலத்தில் கொடுக்கபட்டது உதாரணமாக பஞ்சாங்க கணிதத்தில் ஐந்து அங்கங்களில் வாரம், திதி, கரணம், நட்சத்திரம், நாமயோகம் என ஐந்து பிரிவு கணித்தத்திற்கும் முதன்மையான முக்கியத்துவம் தரப்படுவது சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஏனென்றால் சூரியன் ஜீவாத்தம காரகன், சந்திரன் மனோகாரகன்,

இதற்கு அடுத்து அதாவது சில ஜோதிட நூல்கள் சொல்கின்றன முதல் சூரியன், சந்திரன் தான் கண்டுகொள்ளபட்டது பின் தான் குருவும் அதற்கு அடுத்து சுக்கிரன் என வரிசையாக இணைத்து கொள்ளபட்டது எனகிறது, அப்படி சேர்க்கபட்ட அடுத்த தலையாய கிரகங்களாக இருப்பது குரு, சுக்கிரன், சனி, செவ்வாய், புதன் இந்த கிரகங்கள் பழைய நூல்களின் கூற்றின் படி ஒருவர் பிறந்த ஜென்ம லக்னத்திற்கு கேந்திர ஸ்தானங்களான லக்னம், 4, 7, 10 ஆம் ஸ்தானங்களில் இந்த ஐந்து கிரகங்களும் அவர் அவர்களின் ஆட்சி, உச்ச வீடுகளில் இருந்தால் மஹா புருஷ யோகம் ஆக வர்ணிக்கபடுகிறது இதன் தொகுப்பு வார்த்தை தான் பஞ்ச மஹா புருஷ யோகங்கள்.

எந்த விதத்திலும் பெரிதாக பாதிக்கபடாமல் இந்த யோகங்களில் மூன்று யோகங்களுக்கு மேல் ஒருவர் பெற்றிருந்தால் அவர் தன் சார்ந்த துறையில் தலைமையானவராகவும் மற்றும் பலருக்கு வழிகாட்டியாகவும், ராஜாங்கத்தை நிர்வகிப்பார்கள் அல்லது ராஜாங்க பிரதிநிதிகள், உயர்ந்த செல்வங்களை அடைபவராகவும், புகழால் தனக்கு பிறகு நிலைத்து நிற்பார்கள் என்று அந்த நூல்கள் வர்ணிக்க்கின்றன.

வியாழன் (குரு)  பகவான் தரும் யோகம் - ஹம்ச யோகம்
ப்ரஹஸ்பதி (குரு) அக்னியை விட ஒளிமிக்க முகம் உடையவர் என்று வர்ணிப்பர் எனவே இந்த யோகம் அமையப்பெற்றவர் ஒளிமிக்க முகம், மரியாதையான தோற்றம், அழகான உடல், மற்றவர்களுக்கு பிடிக்கும் குணங்கள் நிறைந்தவர், நடத்தையில் நீதியும் ஒழுக்கமும் மனதில் தூயவராகவும் வாழ விரும்புவர் அவ்வாறு வாழ்பவராக இருப்பார், கல்வி கேள்விகளில் வல்லவர், பெரிய அறிவாளி.

சுக்கிரன் பகவான் தரும் யோகம் - மாளவியா யோகம்
சுக்கராச்சாரியார் அசுர குலகுரு என வர்ணிக்க படும் மேலும் சுக்ரனிடம் எல்லா செல்வங்களும் உண்டு என்றும் குபேரனே இவரிடம் கால் பங்கு கடன் வாங்கி வாழ்பவன் என்று ஜோதிட கதைகள் சிறப்பிக்கும் எனவே இந்த யோகம் அமையப்பெற்றவர் கவர்ந்திழுக்கும் முகம், நன்கு வளர்ந்த உடலமைப்பு,  வலுவான எண்ணங்கள் மற்றும் பாசவுணர்வு உள்ளவர்கள், வாழ்க்கையை சுகமாக ஜீவிக்க தேவையான செல்வங்களை பெற்றவர்கள்,  குழந்தைகள் மற்றும் மனைவியால் மகிழ்ச்சி இருக்கும், தனித்துவமான திறமைகள் மற்றும் கல்வி ஞானம், கலைகள் கைவர பெற்றவர்கள்.
 
சனி பகவான் தரும் யோகம் - சச யோகம்
உழைப்பு தொழிலின் காரகனாக சனி நல்ல ஊழியர்கள், கிராம நகரத்தில் தலைமை பொறுப்புகளில் உயர்வது, பொது மரியாதையை, கடும் உழைப்பினால் உயர்ந்த இடத்திற்கும் புகழுக்கும் வருபவர், நிலையான சொத்துக்கள், நிலம், வாகனம், வீடு ஆகியவற்றை சேர்ப்பவர், தீர்க்காயுள் உள்ளவர், சட்டத்திற்கு உட்டபட்டும் சட்டத்திற்கு புறம்பாகவும் இருவழிகளிலும் வருமானம் ஈட்டத் தெரிந்தவர்.

செவ்வாய் பகவான் தரும் யோகம் - ருசக யோகம்
தைரிய காரகன் ஆன செவ்வாயின் யோகத்தில் பிறந்த நபர் பிரபலமானராக,  வலுவான உடலமைப்பு உள்ளவராக, தகவல் விஷயங்களில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக, திறமையான போட்டியாளர், விடா முயற்சி உடையவராக, ஸ்தபன தந்திரங்கள் அறிந்தவராக, விவேகி, செல்வந்தர், தலைவர் ஆக இருப்பார்.

புதன் பகவான் தரும் யோகம் - புதாத் யோகம் (பத்ர யோகம்)
புத்தி காரகன் ஆன புதனின் யோகத்தில் பிறந்த நபர் அரச குமாரனைப் போல் நடத்தை, நண்பர்கள் உறவினர்கள் உதவியை பெறுதல் மற்றும் அவர்களுக்கும் உதவும் குணம், வேகம் விவேகமான நடத்தை, கல்விச் செல்வத்தில் சிறந்து இருத்தல், அறிவு புகட்டுவதில் வல்லவர், தனக்கென ஏதேனும் தனித்திறமைகளை வளர்த்து கொள்ளுதல், தன் திறமையினால் செல்வ செல்வாக்குகளை பெறுதல்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


0 Response to "பஞ்ச மஹா புருஷ யோகங்களின் தொகுப்பு…."

கருத்துரையிடுக

Powered by Blogger