சார்லி சாப்ளின் ஜாதகம் கணிப்பு - உலக நகைச்சுவை திலகம், நகைச்சுவை தத்துவன்…

சார்லி சாப்ளின் ஜாதகம் கணிப்பு - உலக நகைச்சுவை திலகம், நகைச்சுவை தத்துவன்


உலகத்தின் தலை சிறந்த நகைச்சுவை நடிகர்களின் வரிசை எப்போதும் முதன்மையான இடம் பிடித்துள்ளவர் சார்லி சாப்ளின், குழந்தைகளுக்கு எப்போது சிரிப்பை கொண்டு வந்து கொடுக்கும் தோற்றம் நடிப்பு, பெரியவர்களை பொருத்த அளவில் பெரிய பெரிய தத்துவ கருத்துகளை நகைசுவையாக வெளிப்படுத்தும் தத்துவன் சார்லி சாப்ளின், அப்படிபட்ட நகைச்சுவை முறைக்கு வழிகாட்டியவரும் அவரே, நகைச்சுவை மேதையின் தன்னம்பிக்கையான வாழ்க்கை நகைச்சுவை திறன்கள் பற்றி பார்ப்போம்.

சார்லி சாப்ளின் ஜாதகம்  - பிரபலங்கள் ஜாதகம்அசுரகுரு (சுக்கிரன்) கேந்திரம் திரிகோணம் ஏறி ஆட்சி, உச்சம், சுய சாரம், நட்புவீடு ஆகிய ஸ்தான பலம் பெற்று அவரை தேவகுரு (வியாழன்) திரிகோணம் ஏறி ஆட்சி, உச்சம், சுய சாரம் பெற்று பார்த்தால் பிறவிக் கலைஞன் ஜெனனமாவான் என்பது ஜோதிட விதி இதை ஏற்கெனவே எனது முந்தைய பிறவிக் கலைஞன் ஜெனனமாகும் ஒரு ஜோதிட விதி பதிவில் விளக்கி உள்ளேன்,  சார்லி சாப்ளின் இந்த சிறந்த அமைப்பில் பிறந்துள்ளார் ஏன் சார் அதில் குரு (வியாழன்) திரிகோணம் ஏறி ஆட்சி பெற்று கேந்திரம் ஏறிய சுக்கிரனை பார்த்தால் தானே அந்த ஜோதிட விதி பொருந்தும் என்று உங்களுக்கு தோன்றலாம் இங்கு தான் ஒரு ஜோதிடரின் கடமையும் பங்களிப்பும் உள்ளது அந்த ஜோதிட விதிக்கு சற்று மாறுபட்டாலும் மற்ற கூடுதலான பலம் ஏதும் சுக்கிரனுக்கு கிடைக்கிறதா என்று ஆராய்ந்து அறிய வேண்டும் அப்படி சார்லி சாப்ளினின் ஜாதகத்தில் குரு 3 ஆம் ஸ்தானத்தில் இருந்து ஆட்சி பெற்று சுக்கிரனை பார்ப்பதுவும் மற்றும் கலைகளுக்கு காரகத்துவம் பெறும் சந்திரன் 7 ஆம் பார்வையாக பார்ப்பதுவும் மற்றும் துலா லக்ன யோகாதிபதியான சனி பகவான் 10 ஆம் பார்வையாக பார்ப்பதுவும் மேலும் அந்த சுக்கிரன் தனது சுய பரணி நட்சத்திரத்தில் இருப்பதுவும் தேவகுரு சுக்கிரன் சாரத்தில் இருப்பதுவும் பிறவிக் கலைஞன் உதயமாகும் விதிக்கு மிகவும் உதவும், ஆம் சார்லி சாப்ளினின் தனது ஐந்து வயதிலேயே நடிக்கத் தொடங்கி விட்டார், சார்லி சாப்ளினின் பத்து வயது முதல் பல்வேறு பல்சுவை நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து நகைச்சுவை வேடத்தில் நடித்தார் அப்போது அவருக்கு இந்த சுக்கிரனின் சாரம் பெற்ற குருவின் திசையாகும்.நகைச்சுவை திறன்

நகைசுவை தன்மை என்றாலே புதன், சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் முக்கிய காரகத்துவம் பெறுவார்கள் இதில் புதன், சந்திரன் வலுவாக இருந்து குருவுடன் தொடர்பு பெற்றால் நகைச்சுவையின் மூலமாக நல்ல நல்ல அரிய மனிதநேய தத்துவ கருத்துக்களையும் நகைச்சுவையில் கையாள்பவராக இருப்பார், அதில் புதன், சந்திரன் வலுவாக இருந்து சுக்கிரனுடன் தொடர்பு பெற்றால் வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு தன்மைகள் நிறைவாக அமைந்த முறையில் நகைச்சுவை ஆற்றல் பெற்றிருப்பார். என்ன சார் நகைச்சுவை திரைப்படத்திற்கு தானே முக்கியம் நமக்கு எப்படி பயன்படும் அதனால் என்ன பயன் என்று கேட்டால் இந்த வரிகளை படியுங்கள்"நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாவிட்டால் நான் எப்போதோ தற்கொலை செய்து இருப்பேன்"

- மகாத்மா காந்தியடிகள்


"கடுமையான வாழ்க்கை பாதையில் ஆனமீகமும் நல்ல நகைச்சுவையும் தான் நமக்கு ஒரே ஆறுதல்"

- சுவாமி சிவானந்தாசார்லி சாப்ளினின் ஜாதகத்தில் புதன் நீசம் ஆனால் புதன் ரேவதி சுய சார நட்சத்திரமும் பெற்று அந்த மீன ராசியின் ராசிநாதன் ஆட்சி அடையும் அடைந்தால் மற்றும் நவாம்சத்தில் குருவால் பார்க்கபட்டு அமைந்ததால் புதனுக்கு நீசத்தன்மை போய் நீசபங்க ராஜ யோகத்தை அடைகிறார் இது மிகச்சிறப்பான அமைப்பாகும் அதனால் ஆரம்பகாலங்களில் பல்வேறு உடல், மொழி, நடத்தைகளில் கஷ்டப்பட்டார் பின் தனக்காகவே அந்த தனித்துவமான கோமாளி வேடத்தை பிடித்துக்கொண்டார்,லக்னாதிபதியும் ராசியாதிபதியும் சுக்கிரனாகவே இருந்து அந்த சுக்கிரனால் லக்னம் பார்க்கபடுவது மிகச்சிறந்த கலை யோகம் ஆகும், லக்னம் சந்திரனும் ஒரு ராசியானதால் கண் போன போக்கில் கால் போகும் என்பது போல் இவரின் விதி போன போக்கி மதியும் ஒத்துழைத்து போகும் ஆனால் அது அசுபமாக அமையக்கூடாது சார்லி சாப்ளினிக்கு கலைத்துறை வாழ்க்கையில் அது உதவியது ஆனால் இவரின் வசீகரிக்கும் ஆற்றலால் பல பெண்களின் காதலுக்கு உள்ளானார் உள்ளாக்கினார் மேலும் 7ஆம் ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை நவாம்சத்திலும் 7ல் செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை யின் காரணமாக திருமணங்கள் மட்டும் நான்கு பண்ணிக் கொண்டார் குழந்தைகள் எண்ணிக்கை 11,தொழில் ஸ்தானாதிபதியான சந்திரன் நகைச்சுவை, கலைத்துறைக்கு காரகன் லக்னத்திலேயே அமர்ந்து உச்சம் பெற்ற சூரியன், சுக்கிரன், ஆட்சி பெற்ற செவ்வாய் பார்வை செய்வாதால் திரைத்துறையில் நுழைந்தார் இந்த சூரியன் செவ்வாய் காரணமாக இவருக்கு அரசியல் சிந்தனை கருத்துகளை தனது திரைப்படம் வழியாக பதிவாக்கினார் சூரியன் செவ்வாய் அதிகார முதலாளித்துவ கிரகமாகும் ஆனால் சார்லி சாப்ளினுக்கு பத்தில் சனி இது ஒரு முரண்பட்ட அமைப்பாகும் அதனால் சாப்ளினின் அரசியல் சிந்தனைகள் கம்யூனிச சார்புடையதாக இருந்தது ஆனால் அவர் முதலாளித்துவ நாட்டில் வசித்தார்அதனால் முதலாளித்துவ பொதுவுடைமை சித்தாந்தங்களுக்கிடையே போராட வேண்டி வந்தது அதனால் அரசின் கண்டன நடவடிக்கைக்கு ஆளானார் ஆனால் இப்போதும் அவரது நகைச்சுவையில் மிஞ்சி தெரிவது அவரின் மனிதநேயம் பொதுவுடைமை சித்தாந்திகளால் பாராட்டபடுவது பாட்டாளிகள் மற்றும் ஏழைகளின் கவலைக்கிடமான நிலைமையை சித்தரித்தது தான் இதற்கு லக்னத்தில் சந்திரனும் 10ல் சனி புதனின் சாரமும் அந்த சனி நவாம்சத்தில் 10ல் ஆட்சி பெற்று அமைந்ததும் பகிர்ந்து அளிக்கும் பொதுவுடைமையை தனது தொழில் மூலம் வெளிப்படுத்தினார்.பலமான ஆட்சி பெற்ற குரு சுக்கிரன் சாரத்தில் அமைந்து உடன் கேதுவையும் சேர்ந்து கொண்டுள்ளார் இது சிறப்பான குருசண்டாள யோகம் ஆகும் மேலும் நவாம்சத்திலும் குரு சிம்ம வீட்டுக்கு போய் புதன், சந்திரனுடன் தொடர்பாகிறார் மற்ற வர்க்கங்களில் பஞ்சாம்சம், சப்தாம்சம், திரிம்சாம்சம் ஆட்சியாகிறார், இதனால் பலமான குருசண்டாள யோகம் ஒரு கோடீஸ்வர யோகம் ஆகும் இதை பின்னர் பார்ப்போம் இதனால் சார்லி சாப்ளின் தமது 26 ஆம் வயதில் ஒரு சூப்பர் ஸ்டார் ஆனார் அந்த சமய அவர் ஒரு வருடத்துக்கு $ 670,000 சம்பளம் பெற்றார் அதனால் சாப்ளின் ஒரு பெரிய பணக்கார மனிதன் ஆனார் இதற்கு இவரின் அஷ்டவர்க்க பரலின் பலமும் கூடுதல் வலுசேர்த்து

அஷ்டவர்க்க பரல் அட்டவனைதுலாம் லக்ன யோகாதிபதியான சனியின் ஸ்தானங்களான 4, 5 ஆம் ஸ்தானம் 30 பரலுக்கு மேல் மற்றும் தொழில் லாப ஸ்தானங்களான 10, 11 ஆம் ஸ்தானம் 30 பரலுக்கு மேல்.என்ன சார் கொஞ்சம் முன்னாடி தான் பொதுவுடைமைவாதி என்று சொன்னீர்களே அந்த காலத்திலேயே இவ்வளவு சம்பளமா என்று நீங்கள் கேட்டீர்கள் ஆனால் ஒரு உண்மை எப்போதும் மாறாது ஒவ்வொரு மனிதரின் சித்தாந்தங்களுக்கும் சுயநலத்திற்கும் போராட்டம் நடக்கும் அதாவது இதில் பலபேருக்கு சுயநலம் தான் ஜெயிக்கும்.9 ஆம் ஸ்தானாதிபதி புதன் நீசபங்க ராஜ யோகத்தை அடைந்ததும் மற்றும் 10 ஆம் ஸ்தானாதிபதி சந்திரன் லக்னத்தில் இருந்து உச்சம் பெற்ற சூரியனால் பார்க்க பட்டுள்ளதால் தன் காலத்திலேயே பெரும் புகழையும் ஈட்டினார் மற்றும் ஏற்கெனவே நான் சொன்ன பலமான புதனின் சாரம் பெற்ற சனியின் திசையில் 43 வயது வரைக்கும் மற்றும் சுய சாரம் பெற்ற புதன் திசையில் 60 வயது வரைக்கும் நடந்தது இதற்குள்ளாகவே தனது வாழ்நாளில் தமக்கான இடத்தை அடைந்து பின் சில தோல்விகள் மற்றும் தொழில்நுட்ப மாற்றம் ஆகிய காரணத்தால் மெல்ல மெல்ல திரைத்துறையில் இருந்து விலகினார்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


0 Response to "சார்லி சாப்ளின் ஜாதகம் கணிப்பு - உலக நகைச்சுவை திலகம், நகைச்சுவை தத்துவன்…"

கருத்துரையிடுக

Powered by Blogger