ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 41 - புகழ் யோகம்…

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 41 - புகழ் யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


புகழ் யோகம்
மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதி செவ்வாய் 10ல் உச்சம் ஆனால் சிறந்த புகழ் யோகம் ஆக வர்ணிக்கபடுகிறது, அதாவது செவ்வாயிக்கு 10 ஆம் கேந்திர ஸ்தானம் திக்பலம் பெறும் ஸ்தானமாகும் அதனால் செவ்வாய் வலிமை அடைவார், மேலும் 10ஆம் ஸ்தானத்தில் பாபகிரகம் வலுவடைவதை சில நூல்கள் சிறப்பித்துள்ளன இதனால் மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதி செவ்வாய் 10ல் உச்சம் அடையும் போது புகழ் யோகம் தரும், இது முழமையான உச்சம் ஆக வேண்டும் மேலும் இராகு, கேது சேராமல் இருப்பதுவும் சூரிய அஸ்தங்க தோஷம் போன்ற வலுவிழக்கும் அவஸ்தைகள் அடையாமல் இருக்க வேண்டும்

இதன் பலன்கள் -
பழைய நூலில் வர்ணித்துள்ளது படி கீர்த்தி (புகழ்) நிரம்ப உடையவன், போர்த்திறமை வாய்ந்தவன், மல்யுத்த திறன்களை உடையவன், சிறந்த சேனாதிபதி (தளபதி), அதிகாரம் செல்வாக்கு, அரசாளும் யோகம், பிறரால் வெல்ல முடியாதவன் என்று வர்ணித்துள்ளன. தற்காலத்தில் அதிகாரி, விளையாட்டு வீரரை உருவாக்கும் அமைப்பும் ஆகும்.


உதாரண படம்


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 41 - புகழ் யோகம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger