சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜாதகம் கணிப்பு (Rajinikanth) - பணம் புகழ் பணம் புகழ்….

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜாதகம் கணிப்பு - பணம் புகழ் பணம் புகழ் பணம் புகழ்….
Rajinikanth Horoscope in Tamil Study

நிறைய பேர்களால் பார்க்கபட்டதும் ஆராய்ச்சி செய்ததுமான ஜாதகம் இவரின் வாழ்க்கை வரலாற்றை சொல்ல வேண்டாம் அனைவரும் அறிந்ததே எனவே ஆங்காங்கே மட்டும் வரலாற்றை சுட்டிக்காட்டினால் போதும் என்று நினைக்கிறேன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாதனைகளை சொல்ல வேண்டியதில்லை எனவே அதை ஆங்காங்கே சுட்டிகாட்டுகிறேன் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நபராகவும் அதைவிட அதிக புகழுமாக வலவருகிறார், தனது நடை உடை பாவனையினால் பலரை ஈர்த்தவர் திரைபடத்துக்கு வெளி தனது எளிமையான பண்புகளால் ஈர்த்தவர்,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜாதகம் - பிரபலங்கள் ஜாதகம்

மேலே அனைத்து சிறப்பான பண்புகளும் பின் வயதாக வயதாக அனுபவ அறிவாலும் ஞானத்தொடர்புகளாலுமே கிடைத்தது பொதுத்தளத்தில் எழுதுவதால் பெரும்பாலும் அவரின் ஜாதக சிறப்புகளை மட்டும் அதிகமாக பதிவு செய்கிறேன், திரைபடத்துறையை பொருத்தமட்டில் வாரிசு யோகம், தனித்திறமையில்லாமல் இருந்தாலும் கூட்டுத் திறமையால் ஜெயிப்பது மற்றும் பாரம்பரிய பலத்தால் ஜெயிப்பது என்பதெல்லாம் மிகமிக கொஞ்சம் தான் நடக்கும் திரைபடத்துறையை பொருத்தமட்டில் சரியான வாய்ப்பு + தனித்திறமை + கூட்டு உழைப்பு + புதுமை + அதிர்ஷடம் இவைகள் பொருந்திவர வேண்டும்,அதிர்ஷடமா அப்படியென்று ஒன்றுமில்லை என்று சொல்கிறவர்களுக்கு நான் தாழ்மையாக சொல்லிக் கொள்வது ஒரு இசையமைப்பாளர் புதிதாக திரைபடத்துறைக்கு வந்து வெற்றி மேல் வெற்றி பெறுகிறார் அவர் வருடம் செல்ல செல்ல அதிகமான இசை சார்ந்த அனுபவ அறிவையும் அந்த துறையில் பெற்றிருப்பார் ஆனால் அவர் தொடங்கிய காலத்தில் கொடுத்த வெற்றியைப் போல் பிற்காலங்களில் பெரும்பாலும் தர இயலுவதில்லை சரி இவர் ஜோதிடர் அப்படித்தான் சொல்வார் என்று நினைக்க வேண்டாம் இதன் மூலமாக நான் சொல்வது வெற்றிக்கான கூட்டணிகளில் அதிர்ஷ்டத்திற்கும் ஒரு பங்கு உண்டு என்று தான் என்று கூறுகிறேன் அதனால் உழைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.இங்கு தான் சூட்சமம் உள்ளது இறைவன் தான் ஒருவரின் கர்ம வினைக்கு தக்கவாறு ஒவ்வொருவரையும் ஏற்றுவதும் இறக்குவதும் ஆனால் மனிதர்களாகிய நாம் நான் எனது தனித்திறமையால் ஏறினேன் என்கிறான். சூட்சமாகவும் ஆழமாகவும் சொல்கிறேன் படைபாற்றல் மட்டும் கற்றுகொள்வதனால் வருவதல்ல அது அந்த பிறவி படைக்கபடும் போதே தரபட்டிருக்க வேண்டும் பிறகு அதை லேசாக கொளுத்தினால் போதும் பற்றிக் கொள்ளும் இதை அனுபவசாலிகள் அறிவார்கள். படைபாற்றல் பெரும்பங்கு வகிக்கும் திரைபடத்துறைக்கு இது இன்னும் பொருந்தும் சரி விஷயத்திற்கு வருவோம்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிம்ம லக்னத்தில் பிறந்துள்ளார் (கமல்ஹாசன், கண்ணதாசன் சிம்ம லக்னமே) சிம்ம லக்னம் என்றால் தனித்துவம் நிறைந்தவர்கள், தன்னை முன்னிறுத்தியும் மற்றும் தக்கசமயத்தில் காரியங்களை நகர்த்தவும் படைக்கவும் தெரிந்தவர்கள், ரஜினியின் லக்னாதிபதி சூரியன் 4ல் நட்பு வீட்டில் அமர்ந்துள்ளது இராசிகட்டதில் நேரடியாக பலமில்லை தசாம்சத்தில் தான் சூரியன் உச்சம் அதாவது தொழிலில் தான் சூரியனின் சிறப்பு அதிகமாக தெரியும் சரி மேலும் ரஜினி காலசர்ப்ப யோக ஜாதகம் அதனால் சிறுவயது முதல் சிரமம் தான்,தாய் ஸ்தானபதியான செவ்வாய் உச்சம் ஆனாலும் அவர் பாதகாதிபதியாக இருந்து உச்ச பெற்று பொது தாய்காரகனான சந்திரனையும் நெருக்கமாக சேர்த்து கொண்டதாலும் மேலும் குடும்ப ஸ்தானத்தில் சனி, கேது இருவருமே பகை நட்சத்திரமான சூரியனின் உத்திர நட்சத்திரத்தில் இருப்பதாலும் சிறுவயதிலேயே அந்த ஸ்தானத்திற்கு உரிய குடும்ப உறுப்பினர்களின் உறவை இழக்க வேண்டிவரும் ஆம் ரஜினிக்கு ஐந்து வயதான போது தன் தாயை இழந்தார்,ரஜினியின் ஜாதகம் காலசர்ப்ப யோக ஜாதகம் ஆகும் காலசர்ப்ப யோகம் மற்றும் தோஷம் பற்றி பின்னர் விரிவான தனி பதிவுகளை இடுகிறேன் இப்போது அதை சுருக்கமாக சொன்னால் இராகு, கேதுவுக்குள் அனைத்து கிரகங்களும் அடங்கினால் அது காலசர்ப்ப பிடி என்று அர்த்தம் அதாவது இராகு, கேது கிரகங்கள் ஒருவரது வாழ்க்கையில் 33 வயதுவரை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள் அதாவது அவர்களுக்கு பெரிய முன்னேற்றம் எதையும் வரவிடமாட்டார்கள் ஆனால் ரஜினியின் ஜாதகத்தில் லக்னம் இராகு, கேதுக்குள் அடங்காததால் இவர்க்கு 30 வயதுவரை தான் இராகு, கேது தங்களின் கட்டுப்பாட்டில் இவரது வாழ்க்கை வைத்திருந்தார்கள் அதன் பிறகு தான் விடுவிக்கபட்டது, அதனால் ரஜினியின் வாழ்க்கையில் 1980 தொடங்கியே தனி கதாநாயகனாக வலவர ஆரம்பித்தார்,

நான் ஏற்கெனவே டாம் குரூஸ் (Tom Cruise)  ஜாதகம் கணிப்பில் எழுதியதன் படி பிரபல திரைப்பட நடிகராக திகழ்வதற்கும், திரைப்படகலைகள் சம்பந்தப்பட்ட நடிப்புதுறையில் சிறந்து விளங்க சுக்கிரன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்களும் அதுபோக லக்னத்திற்கு லக்னம் 2,5,7,9 ஆம் ஸ்தானாதிபதிகளும் மிகவும் முக்கியமாகும் இதை சற்று விளக்கமாக கூறுவதானால்

லக்னம் = முகப்பொலிவு, தோற்றம்

2 ஆம் ஸ்தானம் = கண் அழகு, வசனங்களை சொல்லும் விதம்

5 ஆம் ஸ்தானம் = நடிப்பு ஆளுமை திறன்

7 ஆம் ஸ்தானம் = திரைப்படம் ஒரு கூட்டுக்கலை அதனால் இதில் மற்றவர்களிடமிருந்து வரும் ஒத்துழைப்பு

9 ஆம் ஸ்தானம் = திரைப்பட புகழ் அதிர்ஷடம் வெற்றிசுக்கிரன் = வசீகரம், சந்திரன் = கதையை உள்வாங்கல், கதை தேர்ந்தெடுத்தல் மற்றும் முக்கியமாக வெற்றி திரைகதைகள் அமைவது, புதன் = நடிப்பு திறமை மற்றும் சாதுர்யமான தேர்வு.ரஜினியின் ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியன் 4ல் நட்பு வீட்டில் சிம்ம லக்கினத்திற்கு 2,11 ஸ்தானத்திற்கு அதிபதியான புதனின் சாரத்தில் அமர்ந்துள்ளது மற்றும் தொழில் யோகத்தை காட்டும் தசாம்சத்தில் சூரியன் உச்சம் உடன் குருவும் அதற்கு எதிரில் செவ்வாயும் இவைகள் இவரை இளமைகாலம் தொட்டே தனித்துவமானவராகவும் தனக்கு பிடித்த விஷயத்தை துணிந்து செய்பவராகவும் வைத்தது, புகழ்காரகன் ஆன சூரியன் தசாம்சத்தில் உச்சமானது தொழிலுக்கு மிகமுக்கிய பலம் ஆகும்,ரஜினியின் ஜாதகத்தில் மிகமுக்கிய பலமாக இருப்பது சுக்கிரனின் பலம் அதாவது

ரஜினியின் இராசி கட்டத்தில் = சிம்மத்திற்கு தொழில்காரகன் சுக்கிரன்

ரஜினியின் நவாம்ச கட்டத்தில் = லக்னாதிபதி சுக்கிரன்

ரஜினியின் தசாம்ச கட்டத்தில் = கும்ப லக்ன யோகாதிபதிரஜினியின் இராசி கட்டத்தில் = 2,11 அதிபதியும் அவரின் நண்பரான 3,10 க்குடைய சுக்கிரன் சேர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தாமான 5ல் அமர்ந்துள்ளது மேலும் இதில் புதன் சுக்கிரனின் சாரம்.

ரஜினியின் நவாம்ச கட்டத்தில் = துலாம் லக்ன லக்னாதிபதியான சுக்கிரன் துலாம் லக்ன தொழில் ஸ்தானாதிபதியான சந்திரன் உடன் சேர்ந்து அமைந்து அதில் சந்திரன் உச்சமும் சுக்கிரன் ஆட்சியும் அடைந்து உள்ளது மிகமிக வசீகரமான புகழ் மற்றும் கோடி கோடி செல்வங்களை சேர்க்கவும், நீடிக்கும் செல்வாக்கை தந்த யோகம் இதனால் வசீகரம் + வெற்றி திரைகதைகள் அமைவது என இரண்டும் மிகஅதிர்ஷ்டமாக கைகூடியது அதனால் பணம் + புகழ் பின் தொடர்ந்து வந்து குவிந்தது.

ரஜினியின் தசாம்ச கட்டத்தில் = இங்கும் சுக்கிரன், சந்திரன் உடன் சேர்ந்து அமைந்து அதை அந்த வீட்டிற்கு உரிய சனியால் பார்க்கபடுவதும் 10க்குடைய செவ்வாய் 9ல் அமர்ந்து சுக்கிரன், சந்திரனை பார்ப்பதுவும் மேலும் பலம் சேர்த்துள்ளது. இப்படியாக பொழுதுபோக்குத்துறைக்கு காரகனான சுக்கிரன் மிகபலமான அமைப்பை பெற்றுள்ளார்.2,5,7,9 ஆம் ஸ்தானாதிபதிகளுக்குள் பலமான தொடர்பு -

2க்குடைய புதன் 5ல் அமர்ந்து, 7க்குடைய சனி 2ல் அமர்ந்து, 5 க்குடைய குரு 7ல் அமர்ந்து ஒருவருக்கொருவர் இல்லங்கள் மாறி மாறி ஒருவித பரிவர்த்தனை அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர் மேலும் புதன் நவாம்சம், சதுர்த்தாம்சம், துவாதம்சம் ஆகிய மூன்று வர்க்கங்களிலும் ஆட்சி, உச்சம் அடைகிறார் மற்றும் சந்திரன் நவாம்சம், திரேக்காணம், அஷ்டாம்சம் ஆகிய மூன்று வர்க்கங்களிலும் ஆட்சி, உச்சம் அடைகிறார், சிம்ம லக்ன யோகாதிபதியான 9 ஆம் ஸ்தானாதிபதி செவ்வாய் இராசி சக்கரம், திரேக்காணம், சதுர்த்தாம்சம் ஆகிய மூன்று வர்க்கங்களிலும் ஆட்சி, உச்சம் அடைகிறார்.சிம்ம யோகாதிபதியான 9 ஆம் ஸ்தானாதிபதி செவ்வாய் 6ல் உச்சம் அடைந்தால் எதிரிகளை வீழ்த்தும் திறன், மற்றவர்களிடம் முழுமையாக வேலை வாங்கும் ஆற்றல், புதிய வேலை தொழில்நுட்ப முறைகளில் ஆர்வம், தன் சார்ந்தவர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் குணம், உழைப்பால் உயர்வு ஸ்திர சொத்துக்கள், செல்வாக்கு, புதிய சிந்தனைகள், துறைசார்ந்த லட்சிய வேட்க்கை உண்டுபண்ணுவர். குரு ராகு சாரமும் ராகு குருவின் சாரமும் பெற்று சாரபரிவர்த்தனை பெற்று அமைந்து இதுவும் குரு சண்டாள யோகத்தையும் கொடுத்துள்ளது கோடீஸ்வர யோகத்தையும் கொடுத்துள்ளது.ரஜினிகாந்த் அவர்களுக்கு விரும்பியோ விரும்பாலேயோ சிறுவயது தொட்டு அவரை ஆன்மீக தெய்வ அருள் தொடர்ந்துள்ளது சிறுவயதில் ராமகிருஷ்ணா மிஷன் தொடங்கி பின் நடந்த விஷயங்களை நான் சொல்ல வேண்டாம் அனைவரும் அறிவர் அவரின் சச்சிதானந்தா சுவாமி, ராகவேந்திரா சுவாமி, பாபாஜி வரையான அவரின் ஆன்மீக நாட்டங்களை அதற்கு 5,9 க்குடைய குருவும் செவ்வாயும் லக்னத்தை பார்ப்பதுவும், மற்றும் மோட்ச ஸ்தானாதிபதியான சந்திரன் 9 க்குடைய செவ்வாயுடன் சேர்ந்து மோட்ச ஸ்தானத்தை பார்ப்பதும் காரணம் மேலும் சனி, கேது வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால் சூழலுக்கு தக்கவாறு பேசுவதில் பிரச்சினைகள் உள்ளது இருந்தாலும் ஆன்மீக உபதேசம் சொல்வதில் பலமாகவே உள்ளது, நான் யார்? ஏன் பிறந்தேன்? உண்மையில் உள்ளது எது? எது நிரந்தர சுகம் தரும்? அதை அடைய குரு யார்? போன்ற சிந்தனைகள் உள்ளவர்களுக்கு அரசியல் பொருந்தாத துறை மேலும் கர்மயோகத்தை பூரணமாக செய்தால் ஞான யோகம் தானாக கைகூடும் அதுதான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் போதனையும் கூட.இதுவரை வந்த திசைகளை விட்டுவிட்டு பார்த்தால் 6க்குடைய சனியின் திசையில் 12க்குடைய சந்திரனின் புத்தியில் உடல்நலக்குறைவால் பாதிக்கபட்டார், புதன் திசை சுக்கிரன் புத்தி உடல்நலக்குறைவை கொடுக்கலாம், புதன் திசை இராகு, குரு புத்தியில் வாழ்வில் முக்கியமான புத்தியாக இருக்கும் அப்போது அவரின் வயது 75 முதல் 80 வயது இருக்கும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜாதகம் கணிப்பு (Rajinikanth) - பணம் புகழ் பணம் புகழ்…."

கருத்துரையிடுக

Powered by Blogger