ஜாக்கி சான் (Jackie Chan) ஜாதகம் கணிப்பு - நகைச்சுவை சண்டையால் உலக புகழ்பெற்ற திரை நாயகன்…

ஜாக்கி சான் (Jackie Chan) ஜாதகம் கணிப்பு - நகைச்சுவை கலந்த சண்டைப்பாணியால் உலகின் புகழ்பெற்ற திரை நாயகன்
Jackie Chan Horoscope in Tamil Study
திரைப்படத் தயாரிப்பாளர், நகைச்சுவையாளர், தயாரிப்பாளர், தற்காப்புக் கலைஞர், திரைக்கதையாசிரியர், சுயதொழில் நடத்துபவர், பாடகர் மற்றும் சண்டைக் கலைஞர் என பலத்திறன்களை கொண்ட திரைக்கதை நாயகன் தனது நகைச்சுவை கலந்த சண்டைப்பாணியால் உலக புகழ்பெற்றவர், புகழ் என்றால் சிறிதல்ல ஆசியாவில் இவர் பெயரை சொன்னால் புரிந்துவிடும், 1960 ஆம் ஆண்டிலிருந்து நடித்து வருகிற ஜாக்கி சான் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஹாங் காங் அவென்யூ, ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் போன்றவற்றில் இடம் பெற்ற நட்சத்திர அந்தஸ்த்தை பெற்றவர்,  ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள கோடீஸ்வர பட்டியல் $ 350 மில்லியன் சொத்து மதிப்பு பெற்று இடம்பிடித்தவர், அது மட்டுமல்லாமல் தனது சம்பாத்தியத்தின் மூலம் பிரசித்திபெற்ற கொடைவள்ளலாக சிறந்த உதவிகளை செய்துவருகிறவர் அதாவது ஜாக்கி சான் தான் இறந்த பின் தனது சொத்துக்களில் அரைபங்கு தொண்டு நிறுவனங்களுக்கு சேருமாறு நன்கொடை அளித்துள்ளார், இவரின் கடுமையான போராட்டம் பின் வெற்றி அதற்க்கான ஜோதிட சிறப்புக்களை காண உள்ளோம்.

ஜாக்கி சான் (Jackie Chan) ஜாதகம்முதலில் ஜாக்கி சான் ஆகட்டும் அல்லது உலகின் எந்த பெரிய நடிகரோ அல்லது தொழிலதிபர் ஆகட்டும் எவராக இருந்தாலும் தான் ஒரு பெரிய நடிகராவோம் அல்லது தொழிலதிபர் ஆவோம் என்று நினைத்து கொண்டெல்லாம் தங்களின் ஆரம்பகாலங்களில் முயற்சித்திருக்க மாட்டார்கள் அவர்களுக்கு உள்ளே வெளியே எதிர்வரும் எண்ணங்களையும் வாய்ப்புகளை நிறைவேற்றி கொண்டு போனார்கள் அது சிறிய வாய்ப்புகளாக ஆரம்பித்து அது வெற்றி பெற்று பின் அது சற்று பெரிய வாய்ப்புகளை தந்து அதுவும் வெற்றி பெற்று பின் அது மிகப்பெரிய வாய்ப்புகளை தந்து அதையும் வெற்றி பெற்று கொண்டுவருவார் இது தான் அனைவருக்கும் நடந்து வருகிறது சிலர் இதை பெரும் தன்மையாக ஒத்துக்கொள்வார் ஆனால் சிலர் நான் தான் எல்லாம் செய்தேன் என்னால் தான் வெற்றி எல்லாம் என்று பேசிக்கொள்வார், வாய்ப்புகள் சரியாக அமைவதற்கும் சரியான திறமைகள் வாய்க்க பெற்றதும் அந்த திறமைகள் சரியான இடத்தில் வெளிப்பட்டதற்கும்ஆண்டவனின் துணை தான் உதவியது என்று மறந்து விடுவார் சரி சிலர் ஆண்டவன் இருக்கான் அவன் என்னை எந்த துன்பமும் வராமல் பார்த்துக்கொள்வான் என்று எண்ணி இருப்பர் ஆனால் வாழ்வில் கடும்துன்பம் எதாவது வந்துவிட்டால் உடனே ஆண்டவனை கேள்வி கேட்டுக்கொண்டு இருப்பார் ஆனால் ஆண்டவன் எப்போதும் சமமாகவே அனைவருக்கும் நலம்புரிபவர் ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அதாவது உயர்வு தாழ்வு கொண்டிருக்கிறார்கள் இதை நாம் அனுபவத்தில் பார்க்கிறோம் அப்படியனால் இறைவன் மனிதர்களிடம் வேறுபாடு காண்கிறாரா என்று தோன்றலாம் ஆனால் அப்படி அல்ல இறைவன் ஒவ்வொருவரும் அவர்கள் செய்த நல்ல தீய கர்மங்களுக்கு தக்கவாறு ஒவ்வொரு மனிதர்களையும் வினைகளை அனுபவிக்க வைக்கிறார் அவ்வளவே, அதனால் அவர் அவர்களின் கர்ம பலத்தை பலவீனத்தை காட்டும் கலை தான் ஜோதிடக்கலை. சரி இப்போது ஏன் இந்த தத்துவமெல்லாம் என்று கேட்க தோன்றினால் தொடர்ந்து ஜாக்கி சானின் வாழ்க்கையை படிக்கும் போது நீங்களே உணர்வீர்கள்,விஷயத்திற்கு வருவோம் ஜாக்கி சான் ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரன் 12ல் கேது சாரம் பெற்று மறைந்ததாலும், 2ல் கேது அமைந்ததாலும், 8 க்குடைய குரு லக்னத்தில் இருப்பதாலும் ஜாக்கி சான் சாதாரண அதாவது சீனாவின் உள்நாட்டுப்போரால் பாதிக்கபட்டு புலம்பெயர்ந்து ஹாங்காங்கில் குடியேறிய தாய்தந்தையருக்கு பிறந்தவர், அவரது தந்தை தலைமை சமையல்காரராக பணிபுரிந்துவந்தவர், ஜாக்கி சானுக்கு பள்ளி படிப்பு என்பது தோல்வியில் தான் முடிந்து, சிறுவயதிலேயே நாடகக் குழுவில் சேர்த்துவிடப்பட்டார் அதாவது குழந்தை நட்சத்திரமாக ஐந்து வயதில் நாடகங்களில் சிறிய வேடங்களில் தோன்றி தனது வாழ்க்கையை தொடங்கினார், சுக்கிரனின் வீட்டில் இருக்கும் தொழில் ஸ்தானாதிபதியான 10க்குடைய சனியும் லக்னாதிபதியான சுக்கிரனும் சப்தம பார்வையாக பார்த்துக்கொள்வதால் நடிப்பு கலையிலேயே தனது வாழ்க்கையை தொடங்கினார்.ஜாக்கி சான் சிறு சிறு வேடங்களில் தொடர்ந்து நடித்து வந்தவர் இதனிடையே செவ்வாய் பலமாக 2, 3 ஆம் ஸ்தானத்தை பார்ப்பதால் தசாம்சம் செவ்வாய் உச்சம் மற்றும் நாடியம்சத்தில் செவ்வாய் பலம் பெறுவதால் தற்காப்புக் கலையிலும் சிறுவயதிலேயே கடுமையான பயிற்சி பெற்றுவந்தார், பின்னர் திரைப்படங்களுக்கு சண்டைக் கலைஞராகப் பணிபுரிய தொடங்கினார், புரூஸ் லீயின் ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி மற்றும் எண்ட்டெர் த ட்ரேகன் ஆகிய திரைப்படங்களிலும் சண்டைக் கலைஞராகப் பணியாற்றி உள்ளார்,இராகு சுக்கிரனின் சாரம் பெற்று 8ல் அமைந்த இராகுவின் ஆரம்பகால திசாபுத்திகளால் அவரது தொடக்க கால முயற்சிகளில் வந்த திரைபடங்கள் வணிக ரீதியான தோல்வியடைந்தது சிக்கல் நிறைந்த சண்டைக் கலைஞர் பணியினாலும் நொந்தார், 1975 ஆம் ஆண்டு ஜாக்கி சான் ஒரே ஒரு ஆல் இன் த ஃபேமிலி என்னும் வயது வந்தோருக்கான நகைச்சுவை ஆபாச திரைப்படத்தில் நடிக்கவும் நேர்ந்தது அப்போது அவருக்கு ராகு திசையில் சனி புத்தி நடந்தது தான் ஒரு ஆபாச திரைப்படத்தில் நடிக்க நேர்ந்ததை பற்றி பின்னாளில் ஜாக்கி சான் இவ்வாறு உரைத்தார் "எனக்கு அது பெரிய வாய்ப்பாக இருக்கும் என்றெல்லாம் கருதவில்லை, ஆனால் 31 ஆண்டுகளுக்கு முன்பு நான் வாழ்வதற்க்காக எதையும் செய்யவேண்டிய நிலையில் இருந்தேன்".பின்னர் அதுவும் வெறுப்புண்டாக்கி ஜாக்கி சான் தனது பெற்றோருடன் வந்து சேர்ந்தார், அப்போது சிறுது காலம் கட்டுமானப் பணியாளராகவும் பணிபுரிந்து வந்துள்ளார், மீண்டும் பழைய இயக்குநரின் அழைப்பில் மீண்டும் தனிபட்ட சண்டைக் கலைஞராகப் பணியாற்றி வந்தார், சுக்கிரனின் சாரம் பெற்ற இராகுவின் சுக்கிர புத்தியில் இருந்து தான் அவரின் தனிபட்ட நகைச்சுவை குங் ஃபூ ஸ்டைலினால் ஆன வித்தை கண்டுபிடித்து படங்களில் பயன்படுத்த தொடங்கினார், இராசி சக்கரத்தில் மூன்றுக்குடைய சந்திரன் லக்னத்தில் சந்திரனின் சுய நட்சத்திர சாரம் பெற்று உச்சம் அடைந்தால் நகைசுவை மென்மைகலந்த கேலிகள் கலந்த சண்டைக் காட்சிகளை தந்து ஹாங்காங் திரைபடத்துறையில் வலுவான கால்பதித்தார், இராசி சக்கரத்தில் சந்திரன் உச்சம் மற்றும் நவாம்சத்திலும் உச்சம் மற்றும் நாடியம்சம் பார்க்கும் போது அதிலும் உச்சம் மற்றும் தசாம்சத்திலும் சந்திரன் உச்சம் இப்படி உயர்பெற்றுள்ள சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்திலேயே இவரின் இராசியும் லக்னமும் அமைந்து இருப்பது உயர்வான யோகபலத்தை காட்டும்.இப்படி உயர்வான சந்திரனின் உடன் சேர்ந்து குருசந்திர யோகம் பெற்றுள்ள குருவின் திசையில் மேலும் தசாம்சத்தில் உச்சம் பெற்ற செவ்வாயின் சாரம் பெற்ற குருவின் திசாபுத்தியில் தான் உலக திரைபடத்துறையாக திகழ்ந்து வரும் ஹாலிவுட் நுழைந்து வெற்றி பெறும் வாய்ப்பை பெற்றார் அதாவது அவரின் வெற்றிப்படமான போலிஸ் ஸ்டோரி 1 முதல் 2 வரை இந்த காலகட்டகளில் தான் வெளிவந்தது, நாம் ஏற்கெனவே கண்டவற்றை பார்ப்போம்சுக்கிரன் = வசீகரம், சந்திரன் = கதையை உள்வாங்கல், கதை தேர்ந்தெடுத்தல் மற்றும் முக்கியமாக வெற்றி திரைகதைகள் அமைவது, புதன் = நடிப்பு திறமை மற்றும் சாதுர்யமான தேர்வு.நடிப்புத்துறையில் உயர்வுக்கு லக்னம் 2,5,7,9 ஆம் ஸ்தானாதிபதிகளும் மிகவும் முக்கியமாகும் ஜாக்கி சானின் ஜாதகத்தில் விளக்கமாக கூறுவதானால்

லக்னம் = சுக்கிரன் கேதுவின் நட்சத்திரத்தில் அமர்ந்தாலும் லக்னத்தில் சந்திரன் வர்கோத்தம உச்சம் அடைந்து இருப்பது.

2 ஆம் ஸ்தானம் மற்றும் 5 ஆம் ஸ்தானம் = பூரட்டாதி 3 ஆம் பாதம் பெற்று புதன் நவாம்சத்தில் நாடியம்சத்தில் ஆட்சி அடைந்து இருப்பது.

7 ஆம் ஸ்தானம் = நவாம்சத்தில் உச்சமடைந்த சந்திரனுடன் இருப்பதுவும் முக்கியமாக தசாம்சத்தில் உச்சம் பெற்ற செவ்வாயாக இருப்பது.

9 ஆம் ஸ்தானம் = 9, 10 ஆம் ஸ்தானாதிபதி சனி 6ல் உச்சம் மற்றும் நவாம்சத்தில் ஆட்சி மற்றும் தசாம்சத்திலும் ஆட்சி வீடு.
தசாம்சத்தில் செவ்வாய் 6ல் உச்சம் அடைந்து இருப்பதால் தற்காப்புகலை மற்றும் சண்டை காட்சிகளால் நடிப்பு திரைதுறைக்கு காரக கிரகங்கள் ஆன சந்திரன், சுக்கிரன் 10,12க்கு இடையே பரிவர்த்தனையாகி அதனுடன் சந்திரன் உச்சமடைந்து புதன் 10 ஆம் ஸ்தானத்தை பார்த்தும் அமைந்ததால் நகைசுவை கலந்த சண்டை காட்சிகளால் திரைதுறையில் பெரிய நடிகர் ஆகி உலக அளவில் செல்லக்கூடிய அளவுக்கு 9க்குடைய செவ்வாய் 6ல் உச்சம் ஆனதும் யோக பூர்ணமாக அமைந்துள்ளது.இவரின் வாழ்க்கை பற்றி சொல்லுவதானால் நிறைய விஷயங்கள் இருக்கிறது ஜாக்கி சானின் ரசிகர்கள் நிறைய எதிர்பார்க்கலாம் ஆனால் நேரம் கருதி முக்கியமானவற்றை மட்டுமே எம்மால் சொல்ல முடிகிறது, மிகப்பெரிய பணத்தை குவிக்க கூடிய வாய்ப்பை தந்தவர் சனி பகவான் அதாவது ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திரிகோண, கேந்திர ஸ்தானங்கள் என அழைக்கபடும் ஒன்பதாம் வீடு  -  தர்ம ஸ்தானம், பாக்ய ஸ்தானம் பத்தாவது வீடு -   கர்ம, காரிய, ராஜ்ய ஸ்தானத்திற்கும் அதிபதி சனி பகவான் அவர் ரிஷப லக்ன ஜாதகருக்கு இவர் தொழில் வெற்றி, புகழ், அதிர்ஷ்டங்கள், முன்னேற்றத்தையும் தரக்கூடியவர் இப்படிபட்ட சனி அம்ஸ கட்டம், தசாம்சம், திரேக்காணம், சதுர்த்தாம்சம், சப்தாம்சம் ஆகிய அனைத்து வர்க்கத்திலும் ஆட்சி உச்சம் அடைந்து மிகபலம் அடைகிறார்இராசி நவாம்சத்தின் சுருக்க வடிவமான நாடியம்சத்திலும் ரிஷப லக்னத்தில் அமைந்து அதில் சந்திரன் உச்சம், சுக்கிரன் ஆட்சி, ரிஷப லக்னத்திற்கு 5ல் புதன் உச்சம். அதாவது எந்த வர்க்க கட்டத்தை எடுத்தாலும் அதில் குறைந்தது இரண்டு மூன்று கிரகங்கள் ஆட்சி உச்சம் அடைய கூடிய நிலையில் ஜாக்கி சானின் ஜாதகம் இருந்தாலும் 12ல் உள்ள சுக்கிரன் லக்னாதிபதியாலும் 12க்குடைய செவ்வாயுடன் சேர்ந்து 8ல் உள்ள சுக்கிரன் சாரம் பெற்ற இராகுவின்  திசை 3ஆவதாக வந்தாலும் இராகுவின்  திசை முற்பாதியும், குரு சந்திரன் லக்ன ஸ்தானபலம் சற்று பாதிக்கபட்டதால் வாழ்க்கையில் ஆரம்பகாலங்களில் சிரமமும் சந்திக்க வேண்டி வந்தது, அது மட்டுமல்லாமல் மாரகாதிபதி குரு லக்னம் வந்ததாலும் இன்னொரு மாரகாதிபதி புதன் கர்ம ஸ்தானத்தில் இருப்பதால் வாழ்வில் அதிக விபத்து காயம் படும்படியான சண்டைகாட்சிகளே அவரின் தொழிலாகி உடலில் அதிக காயங்களை தொடந்து தந்தது,ஆனாலும்  மேலே சொன்ன படி சனி பலத்தாலும் மேலும் பணபர ஸ்தானமான 2,5,8,11 க்குடைய புதன், குரு சிறப்பாக அமைந்தாலும் மிகப்பெரிய பணத்தை சம்பாதிக்க கூடிய வாய்ப்பை பெற்றார் ஆனாலும் லக்னத்தில் அமைந்த குரு 5,9 வீட்டை பார்ப்பதும். 5க்குடைய புதன் 10ல் அமைந்ததும். தான, தர்ம குணங்கள் காட்டக்கூடிய 9க்குடைய சனி அறக்கொடை நன்கொடை காட்டும் 12 ஆம் ஸ்தானத்தை பார்ப்பதும் மற்றும் 12ல் இருக்கும் லக்னாதிபதி சுக்கிரனை உச்சம் பெற்று பார்ப்பதும். லக்னம் சந்திரன் ரிஷபத்தில் ரோஹிணி சாரம் வாங்கி அமைந்தது என எல்லாம் சேர்ந்து ஜாக்கி சான் தனது காலத்திற்கு பின் தனது சொத்துக்களில் அரைபங்கு தொண்டு நிறுவனங்களுக்கு சேருமாறு நன்கொடை அளிக்கும் அளவுக்கு தானதர்ம குணத்தை கொடுத்துள்ளது.


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

 

0 Response to "ஜாக்கி சான் (Jackie Chan) ஜாதகம் கணிப்பு - நகைச்சுவை சண்டையால் உலக புகழ்பெற்ற திரை நாயகன்…"

கருத்துரையிடுக

Powered by Blogger