ஜோதிட பலன் அறிய உதவும் - திசா கணிதமுறையின் அடிப்படை பகுதி - 1 …

ஜோதிட பலன் அறிய உதவும் - திசா கணிதமுறையின் அடிப்படை பகுதி - 1 …

இந்திய ஜோதிட கணித சாஸ்திரத்திற்கு சிறப்பு சேர்க்கும் ஜோதிட கணித முறைகளில் இந்த திசா கணிதமுறை ஒரு மகுடத்தில் உள்ள வைரக்கல் ஆகும். இந்திய ஜோதிட கணிதத்தில் பல திசா கணிதமுறைகள் உள்ளன அவைகள் விம்சோத்தரி முறை, அஷ்ட்டோத்தரி முறை, ஷோடசோத்தரி முறை என பல உள்ளன இதில் பரவலாக அனைவராலும் பயன்படுத்தபட்டு வரும் முறை தென்னிந்தியாவில் அதிகமாக பயன்படுத்தபட்டு வரும் முறையாக உள்ளது விம்சோத்திரி முறை திசா கணிதமுறையாகும்.

இதை ஒருவரின் ஜாதகத்தில் உடுமகா திசைகள் என்ற பெயர் காலக்கட்டப்படி அதாவது இராசி சக்கரம் அமைக்கபட்டுள்ள அஸ்வினி முதலாக ரேவதி வரை நட்சத்திரங்களுக்கு உரிய திசைகள் வழங்கபட்டுள்ளன ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் தொட்டு அந்த திசாபுத்திகளின் வரிசைகள் தொடங்கும். இது ஒரு பெரிய கணிதமுறை அதனால் அடிப்படையான விஷயங்களை மட்டும் தெரிந்து வைத்திருந்தால் போதும் கலியுகத்தில் ஒரு மனிதனின் ஆயுளை அதிகபட்சமாக 120 வயது என கணக்கிட்டு அதற்கு அந்த 120 ஆண்டு வயதை ஒவ்வொரு நட்சத்திரம் வழியாக ஒவ்வொரு கிரகங்களுக்கும் பங்கிட்டு அளித்து அதன் படி வரிசைப்படியாக அந்த அந்த திசைகள் ஒருவரின் பிறப்பில் இருந்து தொடங்கும் படி அமைத்துள்ளனர் இது தான் அதன் சுருக்கம்

இது போன்ற ஆழமான கணிதமுறைகள் முழுமையாக கற்க வேண்டுமென்றால் அதற்கு உரிய ஆசான்களிடமும் ஜோதிட கல்வி நிலையங்களில் தான் மேலும் கற்க வேண்டும், அடியேனின் நோக்கம் எமது பணிகளுக்கிடையே ஜோதிடத்தின் அடிப்படையான விஷயங்களை கொஞ்சம் தெரிய வைக்க உதவினால் போதும் எனபது தான்.

நவகிரகங்களுக்கும் கொடுக்கபட்டுள்ள திசா ஆண்டுகள் -

இது முறையான வரிசை முறை -

கோள்கள்
ஆண்டுகள்
கேது
7
சுக்கிரன்
20
சூரியன்
6
சந்திரன்
10
செவ்வாய்
7
ராகு
18
குரு
16
சனி
19
புதன்
17

இதை அதன் இறங்கு வரிசைப்படி காட்டி உள்ளேன் -

கோள்கள்
ஆண்டுகள்
சுக்கிரன்
20
சனி
19
ராகு
18
புதன்
17
குரு
16
சந்திரன்
10
கேது
7
செவ்வாய்
7
சூரியன்
6

நட்சத்திரத்திற்கு உரிய கிரகங்கள் அந்த கிரக திசையின் ஆண்டுகள் -

நட்சத்திரங்கள்
நட்சத்திரத்திற்கு உரிய
கிரக திசைகள்
கிரக திசையின்
ஆண்டுகள்
அசுவினி
கேது திசை
7 ஆண்டுகள்
பரணி
சுக்கிரன் திசை
20 ஆண்டுகள்
கார்த்திகை
சூரியன் திசை
6 ஆண்டுகள்
ரோஹிணி
சந்திரன் திசை
10 ஆண்டுகள்
மிருகசீரிடம்
செவ்வாய் திசை
7 ஆண்டுகள்
திருவாதிரை
ராகு திசை
18 ஆண்டுகள்
புனர்பூசம்
குரு திசை
16 ஆண்டுகள்
பூசம்
சனி திசை
19 ஆண்டுகள்
ஆயில்யம்
புதன் திசை
17 ஆண்டுகள்
மகம்
கேது திசை
7 ஆண்டுகள்
பூரம்
சுக்கிரன் திசை
20 ஆண்டுகள்
உத்திரம்
சூரியன் திசை
6 ஆண்டுகள்
ஹஸ்தம்
சந்திரன் திசை
10 ஆண்டுகள்
சித்திரை
செவ்வாய் திசை
7 ஆண்டுகள்
சுவாதி
ராகு திசை
18 ஆண்டுகள்
விசாகம்
குரு திசை
16 ஆண்டுகள்
அனுஷம்
சனி திசை
19 ஆண்டுகள்
கேட்டை
புதன் திசை
17 ஆண்டுகள்
மூலம்
கேது திசை
7 ஆண்டுகள்
பூராடம்
சுக்கிரன் திசை
20 ஆண்டுகள்
உத்திராடம்
சூரியன் திசை
6 ஆண்டுகள்
திருவோணம்
சந்திரன் திசை
10 ஆண்டுகள்
அவிட்டம்
செவ்வாய் திசை
7 ஆண்டுகள்
சதயம்
ராகு திசை
18 ஆண்டுகள்
பூரட்டாதி
குரு திசை
16 ஆண்டுகள்
உத்திரட்டாதி
சனி திசை
19 ஆண்டுகள்
ரேவதி
புதன் திசை
17 ஆண்டுகள்

ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் தொட்டு ஒருவரின் திசாபுத்திகள் தொடங்கும் உதாரணமாக ஒருவர் ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தால் அவருக்கு சந்திரன் திசை முதலாவதாக கொண்டு திசாபுத்தி வயது காலகட்டங்கள் தொடங்கும்.

0 Response to "ஜோதிட பலன் அறிய உதவும் - திசா கணிதமுறையின் அடிப்படை பகுதி - 1 …"

கருத்துரையிடுக

Powered by Blogger