ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 43 - யுக்தி யோகம்…

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 43 - யுக்தி யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


யுக்தி யோகம்
ஜென்ம லக்னத்திற்கு இரண்டாம் ஸ்தானத்தின் அதிபதி குரு (வியாழன்) உடன் சேர்ந்து கேந்திர திரிகோண ஸ்தானங்களில் இருந்து இவர்களில் யாரேனும் ஒருவர் ஆட்சி, உச்சம் அடைந்து வர்க்க சக்கரங்களிலும் வலுவடைய இந்த யுக்தி யோகம் ஏற்படும், இந்த அமைப்பு கும்பம், விருச்சிக லக்னங்களுக்கு சற்று அதிக பலனையும் தரும் ஏன்னென்றால் இந்த லக்னத்திற்கு இரண்டாம் ஸ்தானத்தின் அதிபதி குருவே வருவதால், இந்த அமைப்பில் சுக்கிரனும் வலுவடைந்தால் இன்னும் உயர்வான பலன்கள் தரும்.

இதன் பலன்கள் -
யுக்தி என்றால் வடமொழியில் பேச்சு என்ற பொருளும் உண்டு இந்த யோகம் உள்ளவர் பேசும் கலையில் திறன் மிக்கவர் மற்றும் புத்திக்கூர்மையான பேச்சாளர், எதிர்பார்ப்பு சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு தக்கவாறு தனது உரைகள் நிகழ்த்தவல்ல சொல்வன்மை பெற்றவர்கள், ஆன்மீக மற்றும் உயர்ந்த வாழ்வியல் கருத்துக்கள் மற்றும் தத்துவங்களை அறிந்து வைத்திருப்பவர். இராகு கேது குருவுடன் சேர்ந்தாலும் புதன் பாதிக்க பட்டாலும் இந்த யோகம் பயன்தராது.

0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 43 - யுக்தி யோகம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger