மார்கரெட் தாட்சர் (Margaret Thatcher) ஜாதகம் கணிப்பு - பிரித்தானியாவின் முதல் பெண் பிரதமர்…

மார்கரெட் தாட்சர் (Margaret Thatcher) ஜாதகம் கணிப்பு - பிரித்தானியாவின் முதல் பெண் பிரதமர்

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி.
                                                        - மகாகவி பாரதியார்

நீங்கள் எழுதிய பிரபலங்களின் ஜாதக கணிப்புகளில் ஒன்று கூட பெண்கள் இல்லையென்று ஒரு பெண் வாசகர் வருத்தப்பட்டார், இப்போது ஒன்றை சொல்ல வேண்டும் எனக்கு ஆண் தன்மையைவிட (வீரம், வீரியம், தைரியம், சுதந்திரம், பெருந்தன்மை, அதிகாரம் மற்றும் தன்முனைப்பு) பெண் தன்மை (கலை, அரவணைப்பு, பாசம், பொறுமை, கனிவு, இரக்கம் மற்றும் கூருணர்வு திறன்) தான் அதிகமாக பிடிக்கும் ஏன் என்றால் அவர்களிடம் தான் கலை, பொறுமை, கனிவு, இரக்கம் போன்ற பண்புகள் மிகுந்திருப்பதால் மனிதநேய மாண்புகளை அவர்களால் தான் அதிகமாக வெளிபடுத்த முடியும் என்பதால், இறைவனின் படைப்பை பொறுத்தமட்டில் சமாசம தேவைக்குதக்க பிரிவு தான் இந்த ஆண் பெண் எல்லாம் சரி விஷயத்திற்கு வருவோம்.

சட்டங்கள் செய்வதும் மற்றும் சட்டங்கள் ஆள்வதுமான திறமை பெண்ணுக்கும் உண்டு அவர்களிலும் எப்போதும் அரிய மற்றும் உயர்ந்த ஆளுமை அம்சங்களோடு பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள், அதில் அரசியல் துறையிலும் சாதித்தவர்கள் உண்டு இந்த வரிசையில் பிரித்தானியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் என்று இதுவரை இருந்து வந்தவர் தற்போது ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாவது பெண் பிரதமராக தெரசா மே நியமிக்கபட்டுள்ளதால் பிரித்தானியாவின் ஒரே பெண் பிரதமர் நிலை மாறிவிட்டது இருந்தாலும் அரசியல் ஆளுமை பெற்ற இந்த இரும்பு பெண்மணியின் சிறப்பு ஜாதகப் பலாபலனகளை பார்ப்போம்.


மார்கரெட் தாட்சர் (Margaret Thatcher) ஜாதகம்

மார்கரெட் தாட்சர் அக்டோபர் 13, 1925 இல் கிரான்தம் நகரில் இங்கிலாந்தில்,  பிறந்தார், கிரான்தம் நகரில் பலசரக்கு மளிகை கடையை நடத்திய தொழிலதிபரின் மகள் ஆவார்.  தந்தை காரகன் ஆன புதன் இவரது லக்ன கேந்திரத்தில் ஏறி இருப்பதால் ஆரம்ப காலங்களில் கன்சர்வேடிவ் அரசியல் நகர கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்தவரான அவரது தந்தையின் மூலம் அரசியல் இவருக்கு அறிமுகமானது. சூரியன் சாரம் பெற்ற 4ல் அமர்ந்த கேதுவால் பட்டபடிப்பை வேதியல் துறையில் தான் முடித்தார்.

அரசு அரசியல் அரசாங்க கிரகமான சூரியன், சந்திரன், செவ்வாய், சனி ஆகும். இவரின் ஜாதகத்தில் துலா லக்னத்தின் யோகாதிபதியான சனி லக்னத்தில் உச்சம் அதுவும் ஆட்சி அடைந்த குருவின் சார நட்சத்திரத்தில். சூரியன் செவ்வாயின் சார நட்சத்திரத்தில் செவ்வாயுடனே அமர்ந்துள்ளார். செவ்வாய் சந்திரனின் சார நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். சந்திரன் மகம் நட்சத்திரத்தில் சிம்ம ராசியில் அமர்ந்துள்ளது மகம் என்றாலே ஒரு ஜோதிட முதுமொழி நமக்கு ஞாபகம் வரும் அது மகம் ஜெகத்தை ஆளும்” என்பது அதிலும் ஆண் மகத்தைவிட பெண் மகம் இன்னும் வலிமையானது எப்படி என்றால் சிங்க இனத்தில் ஆண் சிங்கத்தைவிட பெண் சிங்கங்களின் முக்கியத்துவம் அதிகம் இதை சிங்க இனத்தின் மரபு பண்புகள் அறிந்த விலங்கியலாளர்களுக்கு நன்கு தெரியும், சிங்க தன்மை அதிகமாக உள்ள ராசி என்பதால் தான் அதற்கு சிம்மம் என்று பெயர் சூட்டபட்டுள்ளது. தமிழக முதலமைச்சராக பணியாற்றி வரும் ஜெயலலிதா அவர்கள் பிறந்ததும் மகம் நட்சத்திரமே.

அரசு அரசியல் அரசாங்க கிரகமான சூரியன், சந்திரன், செவ்வாய், சனி வலுப்பெற்றதுடன் தொழில் ஸ்தானமான 10 ஆம் ஸ்தானத்தில் அமர்ந்துள்ள இராகு சனியின் சார நட்சத்திரத்தில் அமர்ந்து அந்த சனி லக்னத்தில் உச்சமானதாலும் மற்றும் சனி உச்சமாகி 3ஆம் பார்வையாக மூன்றாம் ஸ்தானத்தை, சனி 10ஆம் பார்வையாக பத்தாம் ஸ்தானத்தையும் பார்ப்பதாலும் மேலும் 10 தொழில் ஸ்தானத்தின் அதிபதி சந்திரன் 4ல் உள்ள கேதுவின் சாரம் பெற்றதாலும் இவர் தனது இளவயதில் அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் நுழைந்து விட்டார், தாட்சர் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கையில் கன்சர்வேடிவ் மாணவ சங்கத்தின் தலைவராக பணியாற்றினார்.
சனி யோகாதிபதியாகி இராசிகட்டத்தில் வலுத்துவிட்டால் அவரின் பார்வை குருவின் பார்வையை விட பலமான நன்மைகளை ஜாதகருக்கு தரமுடியும் எனவே சனி பார்வை எப்போதுமே தீங்கானது என்று சொல்லி விடக்கூடாது.

இவரின் ஜாதகத்தில் முக்கிமான சிறப்பு அம்சமாக இருப்பது 4,5,9 கேந்திர திரிகோண ஸ்தானாதிபதிகள் லக்ன கேந்திரத்தில் அமைந்திருப்பது மற்றும் லக்னாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்ற சனியின் சாரத்தில் அமர்ந்திருப்பது, பத்தாம் ஸ்தானாதிபதியான சந்திரன் நாவாம்சத்தில் உச்சம் அடைந்திருப்பது மேலும் அரசியலுக்கு மிக முக்கியமானது தைரிய வீரிய ஸ்தானமான 3 ஆம் ஸ்தானத்தில் குரு ஆட்சி பெற்று அமர்ந்துள்ள அமைப்பால் மிகவும் தைரியசாலியாக அறியபட்டவர் அதனால் தான் பட்டப்பெயராக "இரும்பு பெண்மணி," தாட்சர் என்று அழைக்கபட்டார் இவரின் அதீத தைரியத்தால் பல விமர்ச்சனங்களையும் சந்தித்தார் அதாவது தேவகுரு அசுரகுருவின் சாரத்தில் ஆட்சி ஆவாதால் பொதுவுடைமை வாதத்தின் மீது வெறுப்பு மற்றும் தொழிற்சங்கங்கள் மீதான அவரின் அடக்குமுறைகள் காரணமாக பல எதிர்மறையான விமர்ச்சனங்களையும் சந்தித்தார்.

தாட்சர் பாரிஸ்டர் வழக்கறிஞர் தகுதியை பெற்றவர். வாதம் விவாதம் வழக்குரைக்கும் தகுதி போன்றவையில்லாமல் எப்படி அரசியலில் நுழைந்து உயர்ந்த இடங்களை அடைய முடியும். திட்டங்களை எதிர்க்கும் எதிர்கட்சி மற்றும் பத்திரிக்கை பொதுமக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க பேச்சுத்திறன் வேண்டுமல்லவா. வாதம் விவாதம் வழக்குரைக்கும் அடிப்படை தகுதிக்கு வாக்கு ஸ்தானமான செவ்வாயின் வலிமை இருக்க வேண்டுமல்லவா, இவரின் செவ்வாய் இராசிகட்டத்தில் வலிமையான தொழில் ஸ்தானாதிபதியான சந்திரனின் சாரம் பெற்று நாவாம்சத்தில் உச்சம் அடைந்திருக்கும் சந்திரனுடனேயே சேர்ந்திருப்பது அதுவும் நாவாம்ச வாக்கு ஸ்தானத்தில் சேர்ந்திருப்பது மிகவும் சிறப்பாகும் இதனால் ஆற்றல் மிக்க பேச்சுத்திறனால் மெல்ல மெல்ல அரசியலில் உயர்ந்த இடத்தை அடைந்தார் அதன் உச்சமாக இங்கிலாந்து பிரதமராக 1979 முதல் 1990 வரை இருந்தார்.

நான் ஏற்கெனவே சொன்ன படி தொழில் ஸ்தானமான 10 ஆம் ஸ்தானத்தில் உச்சமான சனியின் சாரத்தில் அமர்ந்து 10ஆம் பார்வையாக சனியால் பார்க்கபடும் இராகுவின் திசையில் தான் இங்கிலாந்து பிரதமராக 1979 முதல் 1990 வரை இருந்தார், உயர்வு இருந்தாலும் 10ல் இராகு இருப்பதாலும் 10 ஆம் ஸ்தானத்தின் அதிபதி பாதக ஸ்தானத்தில் இருப்பதாலும் இவர் ஐக்கிய இராச்சியத்தில் முதலாவதாக பெண் பிரதமராக இருந்த போது ஐக்கிய இராச்சியத்தில் பொருளாதார மந்தநிலை நிலவியது அதனால் நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்துவது மற்றும் சமூக வீட்டு வசதி மற்றும் பொதுப் போக்குவரத்து பெருமளவில் தனியார்மயக்கல் போன்ற ஆதரவு விமர்ச்சனமும் கலந்த கட்டாய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிவந்தது,

இரண்டாவது பிரதம பதவிக்காலத்தில் தாட்சர் அவர்களின் சில அரசியல் நடவடிக்கை காரணமாக இவருக்கு எதிரான படுகொலை முயற்சி வரை நடந்தது, முன்றாவது பிரதம பதவிக்காலத்தில் சில மக்கள் விரோத வரி விதிப்பின் காரணமாக மக்கள் செல்வாக்கை இழந்து எதிர்ப்புக்கும் ஆளானார் அதனால் கட்சியில் செல்வாக்கை இழந்து தானாக முன்வந்து இராஜினாமா செய்ய வேண்டிய நிர்பந்தந்திற்கு ஆளானார் இராகுவின் திசையில் பிரதமராகி இராகுவின் திசையிலேயே பிரதமர் பதவியை இழந்தார்.

புகழ் ஸ்தானாதிபதியான புதன் 4,5 கேந்திர திரிகோண ஸ்தானாதிபதியுடன் சேர்ந்து லக்ன கேந்திரத்தில் வலிமை அடைந்திருப்பதால் தாட்சர் தனது 80 வது பிறந்த நாளை கொண்டாடிய போது கூட அது பெரிய நிகழ்ச்சியாக ராணி இரண்டாம் எலிசபெத், பிரதமர் டோனி பிளேயர் என கிட்டத்தட்ட 600 நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், முன்னாள் உயர் சகாக்கள் கலந்து கொண்டு சிறப்பாக நடந்தது. இருதய பலகீனம் காரணமாக தனது 87 வயதில் இறந்தார்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


0 Response to "மார்கரெட் தாட்சர் (Margaret Thatcher) ஜாதகம் கணிப்பு - பிரித்தானியாவின் முதல் பெண் பிரதமர்…"

கருத்துரையிடுக

Powered by Blogger