ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 8 & 9...


ஜீவபோத சுத்தி என்றால் உயிரின் உண்மை நிலையை விசாரணையின் மூலம் சுத்தம் செய்து உணர்தல் என்று பொருள், ஒவ்வொரு உயிரானதும் தனது உண்மை நிலையை உணர்வதன் மூலம் ஆன்மீக பக்குவம் அடையும் அப்படி ஆன்மீக பக்குவம் அடைந்தால் வாழ்வில் விடை தெரியாத பல்வேறு துன்பங்களும் இலையுதிர் கால மரத்தின் இலைகளை போல் கழண்டு விழும், இது ஒரு சிலருக்கு பயன்தரலாம் அதனால் ஜோதிடம் மட்டும் விரும்பம் உள்ளவர்கள் அதை எப்போது போல படித்து வரலாம்  இது நேரடியாக ஜோதிடத்தை சுட்டிக்காட்டாது ஆனால் ஜோதிடத்தின் அடிப்படை ஆன்ம தத்துவத்தில் தான் உள்ளது.

(8)
யார் உடலில் மின்சாரமனார், மின்காந்தமனார்
யார் உடலில் இவை இரண்டை தயார் செய்தார்
யார்! உடல் என்றால், ஏன் பிணத்தில் செயலில்லை
சார் உள்ளத்துள்ளே சிவமே அது! சிவமே அது!

Who body's electricity? Who body's electromagnet?
Who made to body's electricity and electromagnet?
Who? If the body, even why dead body can't make that
Blend within the heart It Sivam! It Sivam!

பாடலின் விளக்கம் -
யார் உடலின் மின்சார சக்தியாய் இருப்பது, யார் உடலின் மின்காந்த சக்தியாய் இருப்பது, யார் உண்ட உணவில் இருந்து ஆற்றல் தரும் மூல தாதுகளை பிரித்து உடலில் இந்த இரண்டு சக்திகளையும் உற்பத்தி செய்வது, அவ்வாறு அவைகளை செய்வது ஒருவரது உடல் தான் என்றால் அவரின் இறந்த உடலில் இவ்வாறான செயல்கள் நிகழவில்லை அதனால் உடலியக்கத்தை தூண்டும் பொருள் உண்டு அந்த மெய்பொருளை ஒருவர் அவரது உள்ளத்தின் உள்ளே சார்ந்து நின்றால் உணர்வார் அது சிவமே அது சிவமே என்று.

(9)
யார் மூச்சை இழுத்தார், மூச்சை விட்டு விட்டார்
யார் மூச்சை கட்டுப்படுத்தினார், உயிர்காற்றானார்
யார்! உடல் என்றால், ஏன் பிணத்தில் செயலில்லை
சார் உள்ளத்துள்ளே சிவமே அது! சிவமே அது!

Who pull of the breath? Who stop of the breathing?
Who control to breath? Who is existence of the air?
Who? If the body, even why dead body can't make that?
Blend within the heart It Sivam! It Sivam!
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
பாடலின் விளக்கம் -
யார் மூச்சு காற்றை நுரையீரல் வலிந்து இழுக்க செய்தது, யார் மூச்சு காற்றை நுரையீரல் அழுத்தி தள்ளச் செய்தது, யார் மூச்சு காற்றை கட்டுப்படுத்தி வைத்திருந்தது, காற்றில் உள்ள அந்த உயிர்தன்மையை தக்க வைக்க உதவும் ஆற்றலாய் இருப்பதுவும் அதை கிரகித்துக் கொள்வதும் யார், அவ்வாறு அவைகளை செய்வது ஒருவரது உடல் தான் என்றால் அவரின் இறந்த உடலில் இவ்வாறான செயல்கள் நிகழவில்லை அதனால் உடலியக்கத்தை தூண்டும் பொருள் உண்டு அந்த மெய்பொருளை ஒருவர் அவரது உள்ளத்தின் உள்ளே சார்ந்து நின்றால் உணர்வார் அது சிவமே அது சிவமே என்று.

சிவன் என்பதும் சிவம் என்பதும் ஒரு கடவுளை குறிக்கும் பெயர்ச்சொல் மட்டும் அல்ல சிவம் என்றால் எப்போதும் எங்கும் வேண்டுதல் வேண்டாமை இன்றி உள்ள ஆளுமை என்று பொருள் இதற்கு சமஸ்கிருதத்தில் ஈஸ்வரன் என்று சொல்லப்படும் ईश्वर Izvara என்றால் Supreme Being , Supreme ruling என்று பொருள்.

Heart என்பது பொதுவாக உடலில் உள்ள இதயம் என்ற உறுப்பை குறிப்பதாக இருப்பது ஆனால் ஆன்மீகத்தில் இருதயம் என்பது ஆத்மாவின் மையம், அதை தமிழ் உள்ளம் என்று பொருள் கொள்ளலாம், உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று திருமூலர் விளக்கி இருப்பார், அந்த உள்ளத்தின் உள்ளே இறைவன் எப்போதும் தோன்றாதே எழுந்தருளி உள்ளான்.

0 Response to "ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 8 & 9..."

கருத்துரையிடுக

Powered by Blogger