2016 குரு பெயர்ச்சியும் சுப மங்கள பார்வை பெறும் மூன்று இராசிக்காரர்களும்…

2016 குரு பெயர்ச்சியும் சுப மங்கள பார்வை பெறும் மூன்று இராசிக்காரர்களும்

குரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியிலிருந்து கன்னி இராசிக்கு மாறுவதை ஒட்டி கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் யாகம் பரிகாரங்களால் மக்கள் குருவை சாந்திபடுத்தி குளிர்விக்க போகிறார்கள். இந்த கன்னி இராசிக்கு போகும் குருவால் கோச்சார ரீதியாக மங்களகரமான பலனை பெற போகிறவர்கள் எந்த எந்த ராசிக்காரர்கள் என்று பார்ப்போம்.

குரு பெயர்ச்சி மற்றும் பார்வை செய்யும் இராசியின் வரைபடம் -
 
 கு + ரு = குரு ஆனது இதில் குஎன்றால் உயர்ந்த மேம்பட்ட என்று பொருள் ருஎன்றால் வழிகாட்டி என்று பொருள் அதாவது அஞ்ஞானத்தை ஒழித்து உயர்ந்த நிலையை அடைய வழிகாட்டுபவர் என்று பொருள் அப்படிபட்ட குரு பகவான் தான் இருக்கும் இராசியில் இருந்து 5,7,9 ஆம் இராசிகளை பார்வை செய்வார் அவர் பார்வை என்பது ஜோதிடத்தில் அருள் பார்வை என்றே சொல்ல படுகிறது அது ஒருவரின் தோஷங்களை குறைக்கும், துன்பங்களை குறைக்கும், நன்மைகளை அதிகரிக்கும், சமயத்தில் வந்து காப்பாற்றும் மிக உன்னத பார்வையாக கருதப்படுகிறது.

ஒரு இராசியில் இருந்து மற்றொரு இராசிக்கு மாற குரு (வியாழன்) ஒரு வருட காலம் எடுக்கும் எனவே இந்த குரு பெயர்ச்சியால் அப்பேர்பட்ட அருள் பார்வையை ஒரு வருட காலம் பெறப் போகும் இராசிகள் மகரம், மீனம், ரிஷபம் ஆகிய மூன்று இராசிக்காரர்களும் அந்த மங்கள அருள் பார்வை உதவப் போகிறது எவ்வாறு என்று பாருங்கள்

மகர இராசிகாரர்களுக்கு மற்றும் மகர லக்னம் - தீமைகள் குறைந்து நன்மைக்கு வழி ஏற்படும், தொழல் சார்ந்த அன்றாட பயணங்கள் சாதகமாக கைகொடுக்கும், தள்ளிப் போட்டு வைத்துள்ள காரியங்களை எடுத்து நல்லமுறையில் முடிக்க காரிய வெற்றிக்கு குரு பார்வை உதவும், உறவுகளுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் கசப்பை மறந்து இணைய உதவும், முக்கியமாக திருமண தடை மற்றும் குழந்தைப் பேறு கிடைக்க உதவியாக அமையும், பாதிக்கு மேல் பதவி சம்பள உயர்வு தரும், பிரச்சினை உள்ளவர்களுக்கு அதை பிரச்சினைகளை எதிர்கொள்ளல் தைரியம் தர உதவும், விடுமுறை நாட்களில் நல்ல மகிழ்ச்சியான சுற்றுலா அல்லது நிகழ்ச்சிகளை ஏற்படுத்தும். ஜாதகத்தில் சுப குருவாக இருந்து வலிமை அடைந்திருந்தால் மேலே சொன்ன பலன்கள் மிகவும் நன்மையாக அமையும்.

மீனம் இராசிகாரர்களுக்கு மற்றும் மீன லக்னம் - தள்ளி போகும் திருமண முயற்சிகள் சாதகமாக கைகூடும், வியாபாரம் தொழில் செழிக்கும், நண்பர்கள் சுற்றத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்க உதவியாக இருக்கும், மனதின் துக்கங்களுக்கு நிவர்த்தி கிடைக்கும், பங்குசந்தை பொருள் வணிக வர்த்தகர்களுக்கு சாதகம் உண்டு. அரசாங்க ஒத்துழைப்பு. வணிகர்களுக்கு நிகர லாபம் மிகும். புதிய புதிய வீட்டு உபயோக பொருட்களை வாங்க உதவும். இசைத்துறையில் இருப்பவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் அமையும். அதிகாரம் வாய்ந்த நபர்களுடன் தொடர்பு ஏற்பட உதவும், நல்ல முயற்சிகள் அதில் நல்லபலன்கள், புதிய வருமான வாய்ப்புகள், வேலை தேடுபவர்களுக்கு வேலைவாய்ப்பு அமைய உதவும், புதிய குடியிருப்பு மாற்றங்கள் சாதகமாக அமையும், கௌரவம் பொது மரியாதை உயரும். ஜாதகத்தில் சுப குருவாக இருந்து வலிமை அடைந்திருந்தால் மேலே சொன்ன பலன்கள் மிகவும் நன்மையாக அமையும்.

ரிஷப இராசிகாரர்களுக்கு மற்றும் ரிஷப லக்னம் - நல்ல சிறப்பான புதிய யோசனைகள் உருவாக உதவும், பூர்வீகச்சொத்துகளில் இருக்கும் சிக்கல்கள் தீர உதவும், திருமண தடைகள் நீங்க உதவும், கணவன் மனைவியின் தொழில் வசதி நிலைகள் உயர உதவும், தெய்வீக காரியங்களில் ஈடுபாடு, கொடுக்கல் வாங்கலில் சிறப்பான ஆதாயங்கள். தனது லட்சியங்களுக்கு புத்துயிர் கிடைக்கும், பிற்பாதிக்கு மேல் பதவி சம்பள உயர்வு தரும், கால்நடை வளர்ப்பு விவசாய துறைகளில் உள்ளவர்களுக்கு நன்மை உண்டு, திருமணம் சார்ந்த தொழில்களில் உள்ளவர்களுக்கு வருமான வாய்ப்புகள் புதிதாக கிடைக்க உதவும். வேலையில் இருக்கும் முரண்பாடுகள் அகன்று புதிய நல்ல மாற்றங்கள் காண உதவும். ஆசிரியர்கள் கல்வியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க உதவும். உறுதியான முனைப்புடன் இழந்தவற்றை மீட்கவும் உதவியாக இருக்கும், வீடு வாகன கடன்கள் அடைக்க உதவியாக இந்த காலங்கள் இருக்கும். ஜாதகத்தில் சுப குருவாக இருந்து வலிமை அடைந்திருந்தால் மேலே சொன்ன பலன்கள் மிகவும் நன்மையாக அமையும்.

குருவால் கிடைத்துக்கொண்டிருந்த உதவிகள் அகன்று போன இராசிகள் - மேஷம், துலாம், கும்பம், தனுசு

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

 

0 Response to "2016 குரு பெயர்ச்சியும் சுப மங்கள பார்வை பெறும் மூன்று இராசிக்காரர்களும்…"

கருத்துரையிடுக

Powered by Blogger