சாதாரண இராகு சுபயோக இராகுவாக...

சாதாரண இராகு சுபயோக இராகுவாக...
ஜோதிடத்தை ஆழமில்லாமல் பொதுவாக அறிந்து வைத்திருக்கும் அனைவரைக்கும் சனியை கண்டால் சற்று வெளிப்படையாகவே பயப்படுவார்கள் ஆனால் பலருக்கு சனி யோகாதிபதியாக பெரிய தொழில் அதிபதி, தொழிற்சாலை அதிபதி மற்றும் அரசியல் பொது ஸ்தாபன உயர்வு போன்ற விஷயங்களை தரும் தன்மையும் சனிக்கு இருப்பதால் சனீஸ்வர கிரகம் பலருக்கு யோக கிரகமாகவும் இருக்கிறது அதுவும் குறிப்பாக ரிஷபம், துலாம், மகரம், கும்பம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி சுபயோக காரனாகவே பெரும்பாலும் செயல்படுவதை பார்க்கிறோம், ஆனால் வெளிப்படையாக தெரியாமாலும் அதே நேரத்தில் வெளியில் சொல்ல ஒன்னா துன்பங்களை வேதனைகளையும் தருபவனாக இருப்பது இராகு என்ற சந்திரநிழல் கிரகமே,

இவரின் திசாபுத்திகளை கண்டு பலரும் முன்னெச்சரிக்கை ஆவார் ஏன் இவரின் அந்தர காலங்கள் கூட பயப்படுவார் முன்னெச்சரிக்கை ஆவார் ஏன் தினசரி ஒன்றரை மணி நேரம் வரும் இராகு காலத்தில் சுப விஷயங்களை தவிர்ப்பவரும் உண்டு இதெல்லாம் பொதுவாக மக்களிடம் காணப்படும் பழக்கங்கள் இப்படிபட்ட இவரை சுபயோக இராகுவாக பார்ப்பது மிகவும் கடினம் சுபயோக இராகுவாக இவரை பார்ப்பதற்கு ஒருவரின் ஜாதக ஜோதிடத்தில் பல விதிகள் காட்டப்பட்டுள்ளன அதில் ஒரு பாடலை மட்டும் இங்கே காட்ட உள்ளேன்
இதுவும் பொது ஒரு பாடலே இதில் கூறப்பட்டுள்ள தெம்பு அதாவது பலம் என்பதை உள்வாங்கவும் மற்றும் இராகுவின் நின்ற இராசிநாதன் பலத்தை காணவும் மேலும் பொதுவாக இராகுவை சரியாக கணிக்க சிறந்த அனுபவ அறிவு அல்லது உடன் கடவுளின் அருளும் ஒரு ஜோதிடருக்கோ அல்லது ஜோதிடத்தை ஆர்வத்தால் படிக்கும் படிப்பாளனுக்கும் வேண்டும்.
 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "சாதாரண இராகு சுபயோக இராகுவாக..."

கருத்துரையிடுக

Powered by Blogger