இருதயத்தின் பிரதிபலிப்பு கண்கள் - அழகான கண்கள்…

இருதயத்தின் பிரதிபலிப்பு கண்கள் - அழகான கண்கள்

"ஒருவரின் கண்களை பார்த்தால் அவரின் இதயத்தை உணர்வாய்"

"ஒளியான அழகான கண்கள் பேசாமலே ஒருவரை கவர்ந்து விடும்"

இதுபோன்ற பல முதுமொழிகள் கண்களின் சிறப்பை உணர்த்துவதாக இருக்கிறது, காதல் ஆனாலும் சரி மற்ற அன்பு உறவுகள் ஆனாலும் சரி நமது கண்களை கண்டே நமது அப்போதைக்கான உணர்வை உணர்ந்து விடுவார்கள் இது நமக்கெல்லாம் அனுபவம். இப்படிபட்ட கண்கள் இல்லறத்தில் மட்டும் அல்லாமல் ஆன்மீகத்திலும் குருவின் கண்களின் கடாச்சம் சீடன் மேல் விழுந்தால் சீடனின் கருமங்களை அழித்தொழிக்க உதவும் நயன தீட்சையாக கொண்டாப்படுகிறது. இதை மெய்பிக்கும் வகையில் சாட்சியாக கள்ளம் கபடம் இல்லாத சிறுகுழந்தைகளின் கண்களில் இந்த உண்மையை காணலாம். ஜோதிடத்திலும் வியாழன் கிரகத்தின் 5,7,9 ஸ்தான பார்வையை சிறப்பாக சொல்லுவதை நீங்கள் அறிவீர்கள். இப்படியாக ஒருவரது கண்கள் அவரை பற்றி அப்பிராயங்களுக்கும் அழகுக்கும் முதல் அறிக்கை தருவாதாக உள்ளது இப்படிபட்ட கண்கள் ஆதர்ஸனமாகவும் (ஈர்ப்பு) அழகாகவும் அமைய உள்ள சில ஜோதிட அமைப்புகளை பார்ப்போம்.

இரண்டாம் வீட்டின் அதிபதி இரண்டாம் வீட்டில் ஆட்சி, உச்சம் அடைந்திருந்தால் அழகான கண்கள் அமைந்திருக்கும்.

இரண்டாம் வீட்டின் அதிபதி இரண்டாம் வீட்டில் நவாம்சத்தில் ஆட்சி, உச்சம் அடைந்திருந்தால் அழகான கண்கள் அமைந்திருக்கும்.

இரண்டாம் வீட்டின் அதிபதி இரண்டாம் வீட்டை பார்த்தாலும் அழகான கண்கள் அமைந்திருக்கும்.

அழகு கிரகங்கள் ஆன சந்திரன், சுக்கிரன் இரண்டாம் வீட்டின் அதிபதி உடன் சேர்ந்து பலம் அடைந்திருந்தாலும் அழகான கண்கள் அமைந்திருக்கும். ஆனால் இதில் சந்திரன் வளர்பிறை சந்திரனாக இருக்க வேண்டும்.

பூரண சந்திரனாக இருந்து இரண்டாம் வீட்டில் சூரியன் நட்பு பெற்று அமைந்தாலும் அழகான பிரகாசமான கண்கள் அமைந்திருக்கும்.

சூரியன், குரு (வியாழன்) இரண்டாம் வீட்டை பார்த்தாலும் அழகான கண்கள் அமைந்திருக்கும்.

சூரியன், குரு (வியாழன்) 1,2,5,9 வீட்டின் அதிபதியாக இருந்து இரண்டாம் வீட்டை பார்த்தால் ஈர்ப்பான (ஆதர்ஸனமான) கண்கள் அமைந்திருக்கும்.

சூரியன், குரு (வியாழன்) 1,2,5,8, 9 வீட்டின் அதிபதியாக இருந்து இரண்டாம் வீட்டில் ஆட்சி, உச்சம் அடைந்திருந்தாலும் அழகு + ஈர்ப்பான (ஆதர்ஸனமான) கண்கள் அமைந்திருக்கும்.

1,2,5,8,9 வீட்டின் அதிபதிகளாக இருக்கும் கிரகங்கள் இரண்டாம் வீட்டில் ஆட்சி, உச்சம் அடைந்திருந்தாலும் மற்றும் இரண்டாம் வீட்டை பார்த்தாலும் அழகு + ஈர்ப்பான (ஆதர்ஸனமான) கண்கள் அமைந்திருக்கும்.

லக்னத்திற்கு 3,4 ஆவது உடு அதிபதிகள் ஆட்சி, உச்சம் அடைந்திருந்தாலும் மற்றும் பார்த்தாலும் அழகான கண்கள் அமைந்திருக்கும்.

இதுபோன்ற அமைப்புகள் பல நடிகர் நடிகைகள், சொற்பொழிவாளர்கள், கலைத்துறை கலைஞர்கள், நாட்டிய மேதைகள், தூய அரசியல் அறிஞர்கள், ஞானிகள் போன்றோரின் ஜாதகத்திலும் பார்க்க கிடைக்கும்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "இருதயத்தின் பிரதிபலிப்பு கண்கள் - அழகான கண்கள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger