ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 46 - அம்சவத்ரா யோகம்…

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 46 - அம்சவத்ரா யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.

அம்சவத்ரா யோகம்
ஜென்ம லக்னத்திற்கு கேந்திர ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் இருந்து, ஜென்ம லக்னம் சர ராசியாக இருந்து,  சனி ஜென்ம லக்னத்திற்கு கேந்திர ஸ்தானத்தில் ஆட்சி (சொந்த வீட்டில்), உச்சம் பெற்று இருக்க இந்த அம்சவத்ரா யோகம் ஏற்படும்.

இதன் பலன்கள் -
பல்வேறு துறைகளில் அல்லது கலைகளில் சற்று கற்று தேர்ந்தவராக இருப்பார், நல்ல கீர்த்தி உண்டு, பாலியல் இச்சையில் நாட்டம் அதிகம் உண்டு அதே நேரத்தில் தத்துவ விஷயங்களிலும் ஆர்வம் ஏற்படும், சென்ற இடங்களில் நல்ல மரியாதை கிடைக்கும், ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை தரக்கூடியவராக இருப்பார், மக்கள் ஆதரவும் ஏற்படும், செல்வந்தர்.

0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 46 - அம்சவத்ரா யோகம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger