செவ்வாய் தோஷம் விளக்கமும் அதன் தீர்வுகளும் பகுதி - 4…

செவ்வாய் தோஷம் விளக்கமும் அதன் தீர்வுகளும் பகுதி - 4…
செவ்வாய் தோஷம் விளக்கமும் அதன் தீர்வுகளும் என தொடர் பதிவுகளாக பார்த்து வருகிறோம் முந்தை பகுதிகளில் செவ்வாய் தோஷம் எவ்வாறு எற்படுகிறது என்பதை தெரிந்து கொண்டோம் அதாவது ஜென்ம லக்கனித்தில் இருந்து செவ்வாய் இரண்டு நான்கு ஏழு எட்டு பன்னிரண்டு ஆகிய ஸ்தானங்களில் இருந்தால் தோஷம் அடைவார், லக்னத்தில் செவ்வாய் இருந்தால் அங்கு அவர் பகைதன்மையை அடைந்தால் பாதி தோஷம் உண்டு என்றும் தெரிந்துகொண்டோம் பின் பகுதியில் செவ்வாய் தோஷம் அது தரும் தீய தன்மைகள் என்ன என்ன என்று தெரிந்து கொண்டோம், போன பகுதியில் செவ்வாய் அந்த இரண்டு நான்கு ஏழு எட்டு பன்னிரண்டு ஆகிய ஸ்தானங்களில் பாதிக்கபட்ட நிலையில் தனித்தனியாக செவ்வாய் தரும் பாதிப்பு என்ன என்று கண்டோம். இந்த பகுதியில் கோள்முனியார் கூறும் செவ்வாய் தோஷ விதிவிலக்குக் ஆன பாட்டை பார்ப்போம்.

12 லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் செவ்வாய் 2,4,7,8,12 ஆட்சி, உச்ச, நீச ஸ்தானங்கள் பின்வருமாறு -

மேஷம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 8 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி அடைவார் - 4 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் நீசம் அடைவார்.

ரிஷபம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7,12 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி அடைவார்.

மிதுனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 8 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம் அடைவார் - 2 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் நீசம் அடைவார்.

கடகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம் அடைவார்.

சிம்மம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 4 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி அடைவார் - 12 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் நீசம் அடைவார்.

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  8 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி அடைவார்.

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2, 7 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி அடைவார் - 4 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம் அடைவார்.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 12 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி அடைவார் - 2 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம் அடைவார் - 8 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் நீசம் அடைவார்.

மகரம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 4 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி அடைவார் - 7 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் நீசம் அடைவார்.

கும்பம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 12 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம் அடைவார்.

மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி அடைவார்.

மேலும் சில ஜாதகங்களில் சுப கிரகங்கள் என்று சொல்லப்படுகின்ற குரு, சுக்கிரன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்கள் செவ்வாயை விட அதிகமாக பாதிப்பை தரும் திருமண தோஷங்களை தருவதையும் அனுபவத்தில் பார்க்கிறோம், அதனால் இனி இரண்டு நான்கு ஏழு எட்டு பன்னிரண்டு ஆகிய ஸ்தானங்களில் செவ்வாய் இருக்க கண்டாலே யாரும் பயம் கொள்ள வேண்டாம்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "செவ்வாய் தோஷம் விளக்கமும் அதன் தீர்வுகளும் பகுதி - 4…"

கருத்துரையிடுக

Powered by Blogger