ஜோதிட துணுக்குகள் பகுதி 5 - அபிஜித் நட்சத்திரம்…

ஜோதிட துணுக்குகள் பகுதி 5 - அபிஜித் நட்சத்திரம்

பொதுவாக 27 நட்சத்திரங்கள் என்று அனைவருக்கும் அறிமுகம் ஆகி இருந்தாலும் வேதஜோதிடத்தில் அபிஜித் நடசத்திர மண்டல அமைப்பு சேர்த்து மொத்தம் 28 நட்சத்திரங்கள் ஆக கொள்ளப்படுகிறது இந்த நட்சத்திரம் வழக்கத்தில் கொள்ள படுவதில்லை என்றாலும் மிகசிறந்த சுப முகூர்த்த நட்சத்திரமாக கொள்ள படுகிறது. வேதஜோதிடத்தின் படி இது 22 வது நட்சத்திரமாக கொள்ளபட்டுள்ளது இது மிக பிரதானமான நட்சத்திரம் ஆகும் காலசக்கரத்தை சுழற்றி விடும் முக்கிய நட்சத்திரம் ஆகும்.

அபிஜித் நட்சத்திரம் சமஸ்கிருத பெயர். அபிஜித் என்றால் "வெற்றிகரமான" அல்லது "தோற்கடிக்கப்பட முடியாத" அல்லது "முற்றிலும் கைப்பற்றும்" "பயத்தை வென்றவன்"என்று பொருள்கள் படும். ஹரிவம்சம் நூல் கிருஷ்ணர் இந்த நட்சத்திரத்தன்று கீழ் பிறந்தார் என்று சொல்லும், இது விஷ்ணுவின் ஆதிக்க நட்சத்திரமும் ஆகும்.

இந்த நட்சத்திரத்திற்கு என்று தனித்த பாகை அளவுகள் இல்லை அதாவது உத்திராடம் நட்சத்திரத்தின் கடைசி 4 ஆம் பாதம் முதல் திருவோணம் 1 பாதத்தில் ஒரு பாகை அளவு பிரித்து வகுக்கபட்டுள்ளது இதை இராசி சக்ரத்தில் 276:40:00 முதல் 280:53:20 பாகை அளவுகள் வரை அபிஜித் நட்சத்திரத்தின் காலம் ஆகும்.

அபிஜித் நட்சத்திரத்தில் ஒருவர் பிறந்தால் அது சிறப்பானதாக கொள்ளப்படுகிறது அபிஜித் நட்சத்திரத்தில் உள்ள அந்த ஜாதகத்தில் சந்திரன் மற்ற தீங்கு அமைப்புகள் இல்லாமல் இருந்தால் அவர்கள் மிகவும் கற்றுத்தேர்ந்தவர்களாக மற்றும் சமூகத்தின் மதிப்பு கொண்டவர்களாக, செயல்களை வெற்றிகரமாக முடிக்க கூடியவர்களாக, சுதந்திரமாக யாரையும் சாராது யோசிக்க கூடியவர்கள் அல்லது வாழக்கூடியவர்கள், பெரும் பலம் உடைய, ஆன்மீகத்தில் நாட்டமும் அதில் உயர்வும் வாய்க்க பெற்றவர்கள் ஆனால் குழந்தை வளர்இளம் பருவம் மட்டும் சற்று சோதனை மிகுந்து இருக்கும், (யுத்த) காயங்களும் இருக்கும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


0 Response to "ஜோதிட துணுக்குகள் பகுதி 5 - அபிஜித் நட்சத்திரம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger