கோச்சார கிரக ஸ்தான பலன்கள் - சந்திரன் 1 முதல் 6 இராசியில்…

கோச்சார கிரக ஸ்தான பலன்கள் - சந்திரன் 1 முதல் 6 இராசியில்

கோச்சாரம் என்பதை அறியாதவர்கள் கோச்சார கிரக ஸ்தான பலன்கள் - அறிமுகம் இந்த பதிவை படித்துவிட்டு வர கீழ் உள்ளது புரியும் இது நமது லக்னத்தில் இருந்து கிரகங்கள் உள்ள ஸ்தான பலன் அல்ல இது ஒருவரின் பிறந்த அதாவது ஜென்ம இராசியில் இருந்து நவகிரகங்கள் தற்காலத்தில் சஞ்சரிக்கும் ஸ்தான பலன் ஆகும்.

அப்படி ஒருவரின் பிறந்த அதாவது ஜென்ம இராசியில் இருந்து நவகிரகத்தில் தலைமை கிரகமாக விளங்கும் சந்திர பகவான் ஜென்ம இராசி தொட்டு முதல் 6 இராசியில் வரும்போது என்ன என்ன பலன்களை பொதுவாக தருவார் என்பதற்கான விவரங்களை பார்ப்போம்


பிறந்த இராசிக்கு 1 ஆம் இராசியில் சந்திரன் கோச்சார ரீதியாக வரும்போது - திருப்தியான உணவு வசதிகள், கௌரவம், சுப நிகழ்ச்சிகள், மனநிலையில் உற்சாகம், பாராட்டு சுற்றத்து மக்களின் மதிப்பு கிடைக்கும், மனோதிடம் சித்திக்கும்.

பிறந்த இராசிக்கு 2 ஆம் இராசியில் சந்திரன் கோச்சார ரீதியாக வரும்போது - குடும்பத்தில் சுப அல்லது அசுப செலவுகள், குடும்ப காரியங்களில் மனப்போராட்டம், சமயோசிதமாக நடந்து கொள்ள வேண்டிய நிலை, பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடக்கும்.

பிறந்த இராசிக்கு 3 ஆம் இராசியில் சந்திரன் கோச்சார ரீதியாக வரும்போது - மனோதிடம் மிகும், காரியங்களில் கவனக்கு குறைவு ஏற்பட்ட பின் வெற்றி, பொருள் வரவு, சுக பயணங்கள், குளிர்ச்சியான சூழல், அதிக பேச்சுகள், பணம் விஷயங்கள் ஒரளவு ஒத்துழைப்பு.

பிறந்த இராசிக்கு 4 ஆம் இராசியில் சந்திரன் கோச்சார ரீதியாக வரும்போது - நல்ல ஆரோக்கியம் உண்டு பண்ணும் ஆனால் நீராகாரம் அதிக குளிர்ச்சியில் குடிக்க கூடாது, வீட்டுச் சுழல் இனிமையாக இருக்கும், வேலையில் அல்லது கல்வியில் புதிய அனுபவம் கொடுக்கும் .

பிறந்த இராசிக்கு 5 ஆம் இராசியில் சந்திரன் கோச்சார ரீதியாக வரும்போது - தேவையில்லாத போட்டி பொறாமைகள் சந்தித்தல், அதிக பொறுப்புகள், சற்று சௌகரியங்கள் கிடைக்கும் இருந்து பதட்டமும் சிறுசிறு பயங்கள் இருக்கும்.

பிறந்த இராசிக்கு 6 ஆம் இராசியில் சந்திரன் கோச்சார ரீதியாக வரும்போது - சந்தேகத்துடன் சற்று தயங்கி தயங்கி செயலில் ஈடுபடுதல், வேலை வரவுகள் சற்று நல்ல பயன் தரும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் உடம்பு சௌகரிய குறைவு, புதிய கடன்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 
 

0 Response to "கோச்சார கிரக ஸ்தான பலன்கள் - சந்திரன் 1 முதல் 6 இராசியில்…"

கருத்துரையிடுக

Powered by Blogger