லக்னம் தொட்டு 12 வீடுகளின் சுருக்க காரகத்துவங்கள்…

இந்த பெரும் பாரத நாட்டின் பெரும்பாலான மக்கள் கடும் சிரமமான பணபரிவர்த்தனை காலத்தில் இருப்பதால் அவர்களின் சங்கடமான இந்த காலத்தில் எனக்கும் சகமனிதர்களின் இந்த சிரமமான கால நிலை கண்டு இந்த சிரமமான காலத்தில் பெரிதாக எந்த ஜோதிட பதிவையும் இட மனமில்லை இருந்தாலும் தொடர்ச்சி விடக்கூடாது என்பதற்காக சில நாட்களுக்கு ஒரு முறை பதிவுகளை இடு கிறேன்.


லக்னம் தொட்டு 12 வீடுகளின் சுருக்க காரகத்துவங்கள்

ஒவ்வொருவரின் பிறப்பின் அடிப்படையில் லக்னம் இராசி சக்கரத்தின் இயல்பான 12 பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் ஒருவருக்கு லக்னம் அமையும் அந்த லக்னம் தொட்டு இராசி சக்கரத்தின் இயல்பான 12 பிரிவுகளையும் 12 வீடுகளாக பிரித்து அதற்கு காரகத்துவங்கள் வகுத்து பலன் காண்பது பழம் பெரும் முறை இதன் 12 வீடுகளின் சுருக்க காரகத்துவங்கள் கீழே கொடுத்துள்ளேன்.

லக்னம் - 1 ஆம் வீடு
இருப்பு பலம் (Existence)
2 ஆம் வீடு
வளங்கள் (Resources)
3 ஆம் வீடு
புதிய தொடக்கங்கள் (Initiatives)
4 ஆம் வீடு
வசதிகள் (Comforts)
5 ஆம் வீடு
திறன்கள், புகழ் மற்றும் அங்கீகாரம் (Abilities, Popularity and Recognition)
6 ஆம் வீடு
தடைகளும் அதன் மீட்சியும் (Obstacles and overcoming)
7 ஆம் வீடு
வழக்கமான தொடர்பில் உள்ள மக்கள் (Regular interacting people)
8 ஆம் வீடு
அழுத்தங்கள், பின்னடைவுகள், திடீர் மாற்றங்கள் (Tensions, Setbacks, Sudden changes)
9 ஆம் வீடு
தர்மம், அருள் பாதுகாப்பு (Truth, Religious blessed)
10 ஆம் வீடு
கர்மம், தொழில் பலம் (Activity, Work blessed)
11 ஆம் வீடு
ஆதாயங்கள் (Gains)
12 ஆம் வீடு
இழப்புகள் (Losses)

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


0 Response to "லக்னம் தொட்டு 12 வீடுகளின் சுருக்க காரகத்துவங்கள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger