நவகிரக நிலை - 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பும்…

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பும் நவகிரக நிலையும்

பிரதமர் மோடி கூறியதாவது:
ஏழை மக்களுக்காவே அர்ப்பணிக்கப்பட்டது இந்த அரசு. ஏழை மக்களின் நலனுக்காக செயல்படும். நாட்டில் உள்ள ஏழை மக்கள் மற்றும் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த அரசாங்கம் ஏழை மக்களுக்கான அரசாக செயல்படுகிறது. நாட்டில் கருப்பு பணமும் ஊழலும் தான் ஏழ்மைக்கு காரணமாக உள்ளது. ஊழலுக்காக அரசு மட்டுமின்றி நாட்டு மக்களும் பாடுபட வேண்டும். அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காகவே இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அண்டை  நாடு இந்தியாவிற்குள் கள்ளநோட்டு புழக்கத்தை விட்டு இருப்பது உலகம் அறியும். ஊழலுக்கு எதிராகவும்,கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தால் இது தான் சரியான தருணம். மத்திய அரசின் கொள்கைகள் அனைத்தும் சமூகத்திற்கான  வறுமை ஒழிப்புக்காக இந்த அரசு தொடர்ந்து போராடும். 
இன்றிரவு 12 மணி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது 
இன்றிரவு 12 மணி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இதனால் நாட்டு மக்களுக்கும் ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துகிறோம் பிரதமர் மோடி
ரூ.500 ரூ.1000 நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கியில் ஒப்படைக்க வேண்டும். நவம்பர் 10 முதல் வங்கி அல்லது தபால் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் பிரதமர் மோடி ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை காண்பித்து ரூ.500,ரூ1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிகொள்லாம்.
மருத்துவமனைகளில் ரூ.500 ரூ.1000 நோட்டுகள் குறிப்பிட்ட காலம் வரை செல்லுபடியாகும். நவம்பர் 11-ம் தேதி இரவு வரை விமானம்,ரெயில் டிக்கெட் வாங்க மற்றும் மருந்தகங்களில் ரூ.500,ரூ.1000 நோட்டுகள் செல்லும். நவம்பர் 9-ம் தேதி 10ம் தேதிதிகளில் ஏடிஎம் மையங்கள் இயங்காது. டெபிட் கார்டு,கிரெடிட் கார்டு,காசோலை மற்றும் டிடி பரிவர்த்தனையில் எந்த மாற்றமும் இல்லை. ரூ.2000 ரூபாய் நோட்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. - http://www.pmindia.gov.in/en/news_updates/historic-announcements-on-ending-corruption-and-black-money-by-pm/?comment=disable

இந்த அறிவிப்பின் போது இருந்த நவகிரக நிலை - நவம்பர் 08 இரவு 8:15


1991 உலகமயமாக்கலுக்கு பிறகு தற்போது நடந்துள்ள இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியபடுத்தியது மட்டுமல்லாமல் அல்லாமல் துணிச்சல் ஆன முடிவாகவும் பார்க்க படுகிறது. நிதி சார்ந்த சீர்திருத்தம் செய்யும் போது அதில் மக்களுக்கு சற்று பாதகங்கள் வரத்தான் செய்யும் இது இயல்பு. நான் பொருளாதார வல்லுநர் இல்லை ஆனாலும் பொருளாதாரத்தை சற்று கூர்ந்து நோக்குபவன் அந்த வகையில் பார்க்கும் போது வளர்ந்த பொருளாதார நாடுகளுடன் நாமும் சேர்ந்து இணைந்து போராட வேண்டுமானால் வளர்ந்த பொருளாதார நாடுகள் அவர்களின் வளர்ச்சிக்கு பயன்பட்ட சில தொழில் கொள்கை மற்றும் நிதி சார்ந்த சட்டங்களை பார்த்து அதை வளர விரும்பும் நாடுகளும் பின்பற்றுவது என்பது பொதுவான இயல்பு.

அதாவது நாமே நம்மை சுற்றி உள்ள மனிதர்களில் தொழிலில் சிறந்த வெற்றி கண்டு முன்னேற்றம் கண்ட ஒரு மனிதரின் தொழில் சார்ந்த திறமைகளை மற்றும் கொள்கைகளை நாமும் பின்பற்றி முன்னேறப்பார்ப்போம் அது போலத்தான் வளர்ந்த பொருளாதார நாடுகள் அவர்களின் வளர்ச்சிக்கு பயன்பட்ட தொழில் கொள்கை மற்றும் நிதி சார்ந்த சட்டங்களையும் வளர விரும்பும் நாடுகளும் பின்பற்ற நினைக்கும். அதே நேரத்தில் ஒவ்வொரு நாட்டின் இயல்பு கலாச்சாரத்திற்கு தக்கவாறு அதில் சில வளர்ந்த பொருளாதார நாடுகளின் சட்டங்களில் திருந்தங்களை கொண்டு வந்து தங்களின் நாட்டுக்கு தக்கவாறு கொண்டு வர முயல்வார்கள்.

VAT, GST, Import Export Laws, Special Economic Zones (SEZs) போன்றவை எல்லாம் வளர்ந்த பொருளாதார நாடுகளில் பின்பற்றிய கொள்கைகளை நாமும் பின்னாளில் நமது தொழில் மற்றும் நிதி சார்ந்த சட்டங்களில் இணைத்து கொண்டோம். அது போல வளர்ந்த பொருளாதார நாடுகள் பணம் தாளாக புழங்குவதை பெரும் அளவு தடுத்து நிறுத்தி உள்ளன ஏனென்றால் பணம் தாளாக புழங்கும் போது கள்ள பணம் மற்றும் கருப்பு பணம் போன்றவைகளின் புழக்கம் அதிகமாக இருக்கும் அதனால் தான் அதற்க்காக அந்த நாடுகளில் ஊழலும் கருப்பு பணமும் இல்லை என்று அர்த்தமல்ல குறைவாகவும் அல்லது வேறு வழிகளிலும் இருக்கும்.

அரசாங்கம் இயங்குவது வரி பணத்தால் வரி வருவாய் என்பது முறையாக பதிவு செய்த தொழில் நிறுவனங்களுக்குள் நடக்கும் பண பரிவர்த்தனையால் கிடைப்பது அல்லது வசூலிப்பது எனவே வரி வருவாயை அதிகரிக்க வேண்டுமானால் முறையாக பதிவு செய்த தொழில் நிறுவனங்களுக்குள் வர்த்தகத்தை உயர்த்த வேண்டும் அதற்கு தொழில் நிறுவனங்களை முறைபடுத்தவே இது போன்ற நடவடிக்கைகள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

சரி இப்போது விஷயத்திற்கு வருவோம் அன்று சப்த கிரகங்கள் அதாவது சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி இவையாவும் சர்ப்ப கிரகங்கள் ஆன இராகு மற்றும் கேதுவின் பிடிக்குள் இருக்கிறது இதை காலசர்ப்பம் என்பார்கள் அதாவது காலம் சர்ப்ப கிரகங்களில் பிடிக்குள் சிக்கி உள்ளது என்று கொள்ளலாம். அதே சமயம் சனிக்கு 12ல் சூரியன் நீசம் அதாவது பொதுவாகவே சனிக்கு 12ல் சூரியன் வரும் காலம் நாட்டில் பொருளாதாரத்தில் முக்கிய மாற்றங்கள் அல்லது நடவடிக்கைகள் காணும் அதுவும் இது நீச சூரியன் என்பதால் சற்று அதிக பாதகங்களையும் கடுமையான சோதனைகளையும் தொழில் துறையினருக்கும் மேலும் ஆளுங்கட்சியான சூரியன் நீசமாகி அவரின் சிம்ம வீட்டை சந்திரன், செவ்வாய், சனி பார்ப்பதால் சற்று கெட்ட அபிப்ராயத்தை ஆளும் அரசின் மேலும் விழ வைக்கும் ஆனால் இது ஆளும் அரசின் அடுத்த அடுத்த திறமையான நடவடிக்கைகள் எடுத்து சரி செய்யுமானால் கெட்ட அபிப்ராயம் போய் ஆளும் அரசின் மீது மதிப்பு கூடும் இல்லையென்றால் நிலைமை மோசம் தான்.

அதே சமயம் சந்திர பகவானும் கேதுவின் பிடியில் இருக்கிறார் மனக்காரகன் ஆன சந்திரனின் இந்த நிலையால் மக்களும் மற்றும் கருப்பு பணம் வைத்து இருப்பவர்களும் வெவ்வேறு விதத்தில் பெரிய மனக்கலக்கத்தை தந்து விடும். அதேசமயம் சனி விட்டில் செவ்வாய் உச்சம் பெற்று சனியால் பார்க்க பட்டு பரிவர்த்தனை யோகமும் பெற்றுள்ளதால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் இருந்து புதிய மாற்றத்திற்கு மாற துணிச்சலும் தொழில் துறையினருக்கு கட்டாய தேவையாக கொண்டு வந்துவிடும்.

பணத்திற்கு காரகனும் வங்கி காரகனும் ஆன குரு பகவானின் நிலையை பார்க்கும் போது தனியாக அவருடன் போர் புரிந்த சந்திரனின் நட்சத்திரத்தில் புதனின் வீட்டில் உள்ளார் அதாவது வங்கியாளர்களின் நிலை என்பது இருதலை கொள்ளி எறும்பு போல் ஆகிவிடும் அரசாங்கத்தின் நடைமுறை சிக்கலுக்கும் மக்களின் அதீத தேவைக்கும் இடையில் சிக்கி எப்போது இந்த மாதம் எப்படியோ சீக்கிரம் முடிந்தால் போதும் என்று நினைக்கும் நிலைக்கு தள்ளும்.

கடைசியாக தனுசு சுக்கிரனுக்கும் பங்குசந்தைக்கும் ஆகாது என்பது நான் அறிந்த உண்மை அதனால் பங்குசந்தையில் தற்சமயத்திற்கு பெரிய இறங்கங்கள் வரலாம் ஆனால் வரும் மாத காலங்களில் பழைய முன்னேற்றம் தொடரும். தொழில் துறையினருக்கும் வரும் காலங்களில் முன்னேற்றம் தொடங்கும்.

தற்காலத்தில் இந்த பிரச்சினைகள் பெருமளவு எப்போது தீரும் என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும் அது குரு ஹஸ்தம் நட்சத்திரத்தை கடந்து போக வேண்டும் அதே சமயம் சூரியன் சனி தொட்டு பின் சனியை கடந்து செல்லும் போது இந்த நிதி நிர்வாக மற்றும் பணபரிவர்த்தனை பிரச்சினைகள் தீரும் அது டிசம்பர் 8,9,10,11 தேதிகளுக்கு பிறகு பெருமளவு  தீரும் வாய்ப்பு ஏற்படும் என்று நினைக்கிறேன்.


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "நவகிரக நிலை - 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பும்…"

கருத்துரையிடுக

Powered by Blogger