ரிஷபம் & தனுசு, ரிஷபம் vs தனுசு - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…

ரிஷபம் & தனுசு, ரிஷபம் vs தனுசு - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்

ஜோதிடத்திற்கு என்று வலைபதிவு தொடங்கி காலத்தில் இருந்து நான் ஜோதிடத்தை பற்றிய கல்வி குறைவாக உள்ளவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஆழமாகவோ அல்லது முக்கிய குறிப்புகளை மட்டும் வாசிக்க விரும்புபவர்களுக்கும் சரி என அனைவருக்குமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன், சில ஆய்வு ஜோதிட கட்டுரைகள் ஜோதிடத்தை ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்கள் மட்டும் அதாவது குறைவான பேர்கள் வாசித்தாலும் அதை எழுதுவதையும் விடாமல் அதே நேரத்தில் அதிகமான பேர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்க்காக பொதுவான  ஜோதிட விஷயங்களை மட்டும் எழுதிக்கொண்டு இருக்காமல் என்னால் முடிந்த அளவு அனைத்து விஷயங்களும் வருவிதமாக வலைதளத்தை கொண்டு சென்று உள்ளேன் அது தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இப்போது நாம் பார்க்க உள்ள தொடர்

பாரம்பரிய திருமணம் என்ற உடன் தான் பொருத்தம் என்ற விஷயங்கள் வரும் ஆனால் மனம் ஒத்த காதலர்கள்  அல்லது காதலாக பழகி கொண்டிருப்பவர்கள், வெவ்வெறு பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி மற்றும் ஒரே பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி இந்த நட்பு, காதல் 12 இராசிக்கு இடையே ஏற்படும் போது அது எவ்வாறு அமையும் அதன் பலம் பலவீனம் என்ன என்று விளக்குவதே இந்த தொடர் பதிவு ஆகும்.

உதாரணமாக ஒருவர் ரிஷபம் இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது காதலரோ தனுசு இராசியாக இருந்தால் அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல் பலம் பலவீனம் என்ன என்று பார்க்க உள்ளோம்.

ரிஷபம் & தனுசு, ரிஷபம் vs தனுசு -
இந்த ரிஷப தனுசு ராசிக்காரகளுக்குமிடையே ஒரு நட்போ அல்லது காதலோ அமையும் போது அவர்கள் இருவரின் நட்பு மற்றும் காதல் வித்தியாசமானதாக அமைந்திருக்கும் அதாவது இவரின் இராசிநாதர்கள் சுக்கிரன், குருவும். இனிமை மற்றும் புதுமை பண்புகளை கொண்ட ரிஷபத்திற்கும் மற்றும் பாதுகாப்பு மற்றும் பாரம்பரியம் பண்புகளை கொண்ட தனுசுவிற்கும் ஆன இணைப்பாக இது அமையும். தனுசு வாழ்க்கை சார்ந்து விட்டுகொடுக்க அல்லது முடிவெடுக்க தயாராக இருக்கும் ஆனால் காலம் தாழ்த்தும் அது வரை ரிஷபம் பொறுமையாக இருக்க வேண்டி வரும். தனுசு தங்கள் நண்பனிடம் அல்லது காதலரிடம் உள்ள சவுகரியங்களை பாராட்ட கற்று கொள் வேண்டி வரும்.

ரிஷப மற்றும் தனுசு இரண்டு ராசிக்காரர்களும் வாழ்க்கையில் வெவ்வேறு அணுகுமுறைகள் கொண்டவர்கள், ரிஷபம் சாந்தமான மற்றும் எதார்த்த நடைமுறை தனுசு ஆராய்ச்சி மற்றும் வேட்கையான நடைமுறை உடையவர். தனுசின் ஓய்வில்லாத ஓட்டத்தை பொறுத்து கொள்ள ரிஷப ராசிக்காரர்களுக்கு கடினமாக இருக்கலாம். இருவரும் தங்களின் கனவுகளை மற்றும் குறிக்கோள்களை தங்களது பாதையில் இருந்து விலகி விடாமல் வைத்திருக்க அடிக்கடி முயல வேண்டும். தனுசு நண்பர் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தூண்டுதலையும், பல்வேறு மகிழ்ச்சி ஊட்டும் சம்பவங்களையும் அளித்து வர நட்பு பலப்படும்.

ரிஷப ராசிக்காரர் இராசிநாதன் சுக்கிரன் ஆகும் தனுசு ராசிக்காரர் இராசிநாதன் குரு பகவான் ஆகும் இந்த இருகிரகங்களும் தங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் சமதன்மையான உறவும் பகைதன்மையான உறவும் கொண்ட கிரகங்கள். அதாவது சுக்கிர சந்திரன் என்றால் காதல், அழகு, கலை மற்றும் ஆடம்பரம். குரு சந்திரன் என்றால் தத்துவம், உயர்கல்வி, ஆன்மீகம், நம்பிக்கை, அதிர்ஷ்டம் மற்றும் பயணம் ஆக அமையும் இதில் ஒருவரை ஒருவர் நன்கு பாராட்டி மற்றும் ஆதரவு தந்து நடந்து கொள்ளும் பட்சத்தில் சுக்கிரனின் அழகு ஆனந்தம் மற்றும் குருவின் சான்றாண்மை இரண்டும் இருவருக்கும் இணைந்து கிடைக்கும். ரிஷப ராசிக்காருக்கு அடிக்கடி பாராட்டுகளை தனுசு வழங்கி கொண்டு இருக்க வேண்டும் பாராட்ட தவறினால் இருவருக்கும் உள்ள பிணைப்பு பாதிக்கபடும்.

ரிஷபம் ஒரு பூமித்தன்மை கொண்ட இராசியாகும் மற்றும் தனுசு ஒரு நெருப்புத்தன்மை இராசியாகும் அதனால் இந்த இருவரும் நட்பால் அல்லது காதலால் இணையும் போது எப்போதும் மேம்பட்ட எண்ணங்களால் சூழந்திருக்கும் தனுசு ராசிக்காரர் கொஞ்சம் எதார்த்த எண்ணங்களுக்கும் முக்கியத்துவம் தந்த கலந்து ரிஷப நண்பர் அல்லது காதலருடன் பழக வேண்டும். ரிஷப நண்பர் அல்லது காதலரின் நோக்கங்களுக்கு தனுசு உயர்ந்த உத்வேகமாக இருந்து அவர்களின் திட்டங்களுக்கு மெருகேற்றும். இந்த நண்பர்கள் ஒவ்வொருவரும் தன் நண்பரின் தனித்தன்மையை புரிந்து சிரமப்படுவார்கள் என்றாலும் அவர்கள் தங்கள் இடையே அடிக்கடி குறைதீர்ப்பு செய்து கொண்டார்கள் என்றால் சிறந்த ஜோடி ஆவார்கள். இருவரும் அறிவு வளத்திற்கு பேர் போன இராசிகள் என்பது இருவரும் தங்களுக்கும் விவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும் அப்படி விவாதம் செய்ய வேண்டி வந்தால் இருவரின் கருத்துக்கும் புரிந்து பொதுவாக தீர்த்து வைக்கும் ஆலோசகர்களை அணுக வேண்டும். தனுசு இராசிகாரர் கோபத்தை குறைத்து ரிஷபத்துடன் பழக சிறப்பு உண்டாகும். அதே போல அறியாமையான விஷயங்களை செய்ய சொல்லி தனுசு இராசிகாரரை ரிஷபம் நிர்பந்திக்க கூடாது.

ரிஷபம் ஸ்திரத்தன்மை கொண்ட இராசியாகும் தனுசு ஒரு உபய இராசியாகும் அதனால் இந்த இருவரும் நட்பால் அல்லது காதலால் இணையும் போது ரிஷப ராசிக்காரர் ஒரு விஷயத்தில் மேம்பட்ட அல்லது கலைநயத்துடன் சற்று சுயநலத்துடன் செயல்படக்கூடியவர்கள் அதே நேரத்தில் தனுசு மேம்பட்ட அதே நேரத்தில் நேர்த்தியாக ஒழுங்குணர்வுடன் சற்று பொதுநலத்துடன் செயல்படக்கூடியவர்கள் இவர்களை இணையும் போது இந்த ஜோடியின் சுயநலமான விஷயங்களை ரிஷப ராசிக்காரர் நல்லபடி பார்த்து கொள்வார் அதே நேரத்தில் தனுசு இந்த ஜோடியின் செயல்பாடுகளை நேர்த்தியாக ஒழுங்குணர்வுடன் முடித்துக்காட்ட உதவும். பொதுவாக இருவரின் அடிப்படை இயல்பு வேறுவேறு என்பதால் இந்த ஜோடிக்கு அடிக்கடி பொது ஆலோசனை தரும் ஆலோசகர்கள் தேவைப்படுவர். இருவருக்கும் பல்வேறு நோக்கங்கள் இருந்தாலும் ரிஷபம் ஒவ்வொன்றாகவே நிறைவேற்ற பார்க்கும் என்பதை தனுசு புரிந்து கொள்ள வேண்டி வரும். காதலர்கள் ஆக அடிக்கடி விரும்பத்தை மாற்றி பேசுவதை ரிஷபம் விரும்பாது என்பதை தனுசு புரிந்து கொள்ள வேண்டி வரும். தனுசின் அறிவு பலமும் ரிஷபத்தின் எதார்த்த அணுகுமுறை பலமும் ஒற்றுமையுடன் ஒன்றுசேர இரு நண்பர்களுக்கும் மற்றும் காதலர்களுக்கும் வெற்றி தான்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ரிஷபம் & தனுசு, ரிஷபம் vs தனுசு - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger