கோச்சார கிரக ஸ்தான பலன்கள் - சந்திரன் 7 முதல் 12 இராசியில்…

கோச்சார கிரக ஸ்தான பலன்கள் - சந்திரன் 7 முதல் 12 இராசியில்

கோச்சாரம் என்பதை அறியாதவர்கள் கோச்சார கிரக ஸ்தான பலன்கள் - அறிமுகம்இந்த பதிவை படித்துவிட்டு வர கீழ் உள்ளது புரியும் இது நமது லக்னத்தில் இருந்து கிரகங்கள் உள்ள ஸ்தான பலன் அல்ல இது ஒருவரின் பிறந்த அதாவது ஜென்ம இராசியில் இருந்து நவகிரகங்கள் தற்காலத்தில் சஞ்சரிக்கும் ஸ்தான பலன் ஆகும்.

அப்படி ஒருவரின் பிறந்த அதாவது ஜென்ம இராசியில் இருந்து நவகிரகத்தில் தலைமை கிரகமாக விளங்கும் சந்திர பகவான் ஜென்ம இராசி தொட்டு முதல் 6 இராசியில் வரும்போது என்ன என்ன பலன்களை பொதுவாக தருவார் என்பதற்கான விவரங்களை பார்ப்போம் -

பிறந்த இராசிக்கு 7 ஆம் இராசியில் சந்திரன் கோச்சார ரீதியாக வரும்போது - திருப்தியான உணவு வசதிகள். துணை அல்லது நண்பர் உடன் சுக பயணம். வாகன பலம். உணர்ச்சி அல்லது புத்துணரச்சி மயமான நாட்களாக அமையும். செய்த உதவிக்கு நல்ல மரியாதை கிடைக்கும், பொழுதுபோக்கு நன்கு அமையும்.

பிறந்த இராசிக்கு 8 ஆம் இராசியில் சந்திரன் கோச்சார ரீதியாக வரும்போது - சந்திராஷ்டம காலமாக இருப்பதால் மனதில் சோர்வு. எதிர்பாராதவாறு தீடீர் என சில பிரச்சினைகள் எழுந்து அதை தீர்பதற்க்கே அதிக காலம் கழியும். மனக்கவலை தரக்கூடிய சந்திப்புகள் அல்லது சிறு நிகழ்வுகள் நிகழலாம்.

பிறந்த இராசிக்கு 9 ஆம் இராசியில் சந்திரன் கோச்சார ரீதியாக வரும்போது - வளர்பிறை காலமாக இருந்தால் தர்ம , புண்ணிய அல்லது கல்வி கேள்வி போன்ற உபயோகமான செயல்களில் ஈடுபட விடும் மற்றும் அன்றைய வேலையில் நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். தேய்பிறை காலமாக இருந்தால் தேவையில்லாத செயல்களில் ஈடுபட விடும்.  

பிறந்த இராசிக்கு 10 ஆம் இராசியில் சந்திரன் கோச்சார ரீதியாக வரும்போது - வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும் நாட்களாக அமையும். தொழிலில் கல்வியில் மூத்தோர்களின் ஒத்துழைப்பு. புதிய பொறுப்புகள் அல்லது தொழிலுக்காக வழக்கமான போக்குவரவுகள் அதில் சாதகமான முடிவுகள்.

பிறந்த இராசிக்கு 11 ஆம் இராசியில் சந்திரன் கோச்சார ரீதியாக வரும்போது - புதிய நட்பு அல்லது பழக்கவழக்கங்கள். மகிழ்ச்சி அல்லது லாபம் தரக்கூடிய யோசனைகள் அல்லது செயல்கள் நடத்தல். பொதுவான ஒரு மன மகிழ்ச்சி. துரிதமான செயல்கள் மற்றும் பலன்கள்.

பிறந்த இராசிக்கு 12 ஆம் இராசியில் சந்திரன் கோச்சார ரீதியாக வரும்போது - சாதாரணமான அல்லது சலிப்பு உண்டாக்கும் நிகழ்வுகள் நிகழலாம். வீணான முயற்சிகள் அதிகமாக இருக்கும் நாட்களாக அமையலாம். ஓய்வெடுக்க மனம் அதிகமாக ஆசை படும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 
 
 

0 Response to "கோச்சார கிரக ஸ்தான பலன்கள் - சந்திரன் 7 முதல் 12 இராசியில்…"

கருத்துரையிடுக

Powered by Blogger