கோச்சார கிரக ஸ்தான பலன்கள் - செவ்வாய் 7 முதல் 12 இராசியில்…

கோச்சார கிரக ஸ்தான பலன்கள் - செவ்வாய் 1 முதல் 6 இராசியில்…

கோச்சாரம் என்பதை அறியாதவர்கள் கோச்சார கிரக ஸ்தான பலன்கள் - அறிமுகம்இந்த பதிவை படித்துவிட்டு வர கீழ் உள்ளது புரியும் இது நமது லக்னத்தில் இருந்து கிரகங்கள் உள்ள ஸ்தான பலன் அல்ல இது ஒருவரின் பிறந்த அதாவது ஜென்ம இராசியில் இருந்து நவகிரகங்கள் தற்காலத்தில் சஞ்சரிக்கும் ஸ்தான பலன் ஆகும்.

அப்படி ஒருவரின் பிறந்த அதாவது ஜென்ம இராசியில் இருந்து நவகிரகத்தில் முதல் ராசியின் கிரகமாக விளங்கும் செவ்வாய் பகவான் ஜென்ம இராசி தொட்டு முதல் 6 இராசியில் வரும்போது என்ன என்ன பலன்களை பொதுவாக தருவார் என்பதற்கான விவரங்களை பார்ப்போம்

பிறந்த இராசிக்கு 7 ஆம் இராசியில் செவ்வாய் கோச்சார ரீதியாக வரும்போது - கோபம் உண்டாக்கும் படியான செயல்கள் அல்லது தவறுகள் நடப்பது, வயிற்றில் உஷ்ணம் அதிகமாக இருக்கும் அல்லது வலி உண்டாக்கும், கணவன் மனைவிக்கு இடையே பேச்சை அதிகரிக்கும், அதிக வேலைபளு.

பிறந்த இராசிக்கு 8 ஆம் இராசியில் செவ்வாய் கோச்சார ரீதியாக வரும்போது - விரக்தி, செய்யும் செயலுக்கு பலன்கள் முன்னுக்கு பின் முரணாக வருவது, அதிக ஓய்வு, சந்திரன் செவ்வாயின் நிலையை பொருத்து எதிர்பாராத பணவரவு அல்லது எதிர்பாராத செலவு, இரகசியங்கள் கசிவு, பழைய அனுபவ நிலைமைகளுக்கு தக்கவாறு மாறிக்கொள்ளல்.

பிறந்த இராசிக்கு 9 ஆம் இராசியில் செவ்வாய் கோச்சார ரீதியாக வரும்போது - புதிய அல்லது தேவையில்லாத பிரயாணங்கள், அதிகாரம் அல்லது பொருளாதார முன்னேற்றம் அடைய நல்ல வழிகாட்டுதல்கள் கிடைக்கும், ஒருவித பயத்துடன் காரியங்கள் நடத்தாலும் சுபமாக முடியும் வாய்ப்பு உண்டாகும்.

பிறந்த இராசிக்கு 10 ஆம் இராசியில் செவ்வாய் கோச்சார ரீதியாக வரும்போது - காரியங்களில் போராட்ட வெற்றி, கல்வி அல்லது தொழில் பயிற்சிகளில் தைரியமான அணுகுமுறை கொடுக்கும், ஒரே சமயத்தில் பலவிதமான காரியங்கள் நடத்தே வேண்டி வரும்.

பிறந்த இராசிக்கு 11 ஆம் இராசியில் செவ்வாய் கோச்சார ரீதியாக வரும்போது - பண இருப்பு மற்றும் சேமிப்புக்கள் மெல்ல கரையும், வளர்ச்சியும் தீடீர் என்று வந்து அதை தக்கவைக்க போராட வைக்கும், ஆனாலும் அதே சமயம் மிகவும் நல்ல பெயர் மற்றும் அதிகாரம் சுற்றத்தாரின் பாராட்டு கிடைக்க வைக்கும், புதிய பதவி உயர்வு அல்லது பொறுப்பு கிடைக்க வைக்கும்.

பிறந்த இராசிக்கு 12 ஆம் இராசியில் செவ்வாய் கோச்சார ரீதியாக வரும்போது - ஆரோக்கிய மற்றும் பொருளாதார முன்னேற்றம் பாதிக்க படலாம், தேவையில்லாத செலவுகள் தேடி வரலாம், நிம்மதியான தூக்கமின்மை, போலிகளால் ஏமாறுதல், சற்று தாழ்வுமனபான்மை மேலோங்கும் சூழல்.


0 Response to "கோச்சார கிரக ஸ்தான பலன்கள் - செவ்வாய் 7 முதல் 12 இராசியில்…"

கருத்துரையிடுக

Powered by Blogger