கைரேகையும் ஜோதிடமும் பகுதி 1 - சூரிய மேடு…


கைரேகையும் ஜோதிடமும் பகுதி 1 - சூரிய மேடு

மனித வாழ்வை காலந்தொட்டு கணிக்க உதவும் வேத ஜோதிடத்திற்கு பிறகு அடியேனால் மிக மதிக்கபடும் கணிதங்கள் கைரேகை ஜோதிடம் மற்றும் நாடிஜோதிடம் ஆகும். இதில் கைரேகை ஜோதிடத்தில் மற்றும் நாடிஜோதிடத்தில் எனக்கு பெரிய படிப்பும் மற்றும் அனுபவமும் இல்லையேன்றாலும் வேத ஜோதிடத்தை ஒட்டிய ஒப்பீடு ஆன சில கருத்துகளை படித்துள்ளேன்  அதில் வேத ஜோதிடத்தில் எப்படி நவகிரகங்கள் இருக்கின்றனவோ அது போல கைரேகையிலும் இராகு கேது தவிர சப்தகிரகங்களின் தொடர்பு இருக்கிறது அதை கைரேகையில் கிரக ஆதிக்க மேடுகள் என்று அழைக்கப்படுகிறது அந்த சப்தகிரக மேடுகளுடன் நமது  வேத ஜோதிட கிரக மற்றும் ஸ்தான காரகத்துவங்களையும் சேர்த்து ஒப்பிட்டு இந்த பதிவை படித்த மற்றும் அனுபவ அறிவையும் இணைத்து எழுதுகிறேன்.

சூரிய மேடு -
கைரேகையில் மோதிர விரலுக்குக்  கீழ் உள்ள வளைய பகுதி சூரிய மேடு என்று அழைக்கப்படுகிறது. இது நமது ஜாதகத்தில் சூரியனின் காரக பலத்தை காட்டும் அமைப்பாக உள்ளது. அதாவது வாழ்க்கை தரம், சம்பாத்திய திறமை, தந்தையாருடன் உறவுநிலை, அதிகாரம், பதவி, அரசு அரசாங்க அரசியல் தொடர்புகள், கம்பீரம், அறிவு சதுர்யம், இருதயம், கண், புகழ், சமூக சேவை, கண்டிப்பு, கட்டளை ஆகிய  சூரியனின் காரக பலம் ஜாதக மற்றும் கைரேகையோடு ஒப்பிட்டு அமைத்து பார்க்கும் போது ஜாதகத்திலும் மற்றும் கைரேகையிலும் இந்த சூரிய இருப்பு நன்றாக அமைந்தால் மேலே சொன்ன பலன்கள் சிறப்பான முறையில் அமையும். அதாவது கைரேகையில் இந்த சூரிய மேடு பருத்து பரந்து நல்ல மேல் நோக்கிய சுருள் உடன் மேலும் நல்ல குறிகளுடனும் (நட்சத்திரம், சதுரம்...) அமைந்தால் நல்லது. அதே போல ஜாதகத்தில் சூரியனும் மற்றும் 12 ஸ்தானங்களில் முக்கியமாக 5 ஆம் ஸ்தானமும் மற்றும் அதற்கு அடுத்து 1, 2, 6, 9, 10 ஆம் ஸ்தானமும் சூரியனின் பலத்தை பிரதிபளிக்கும் ஸ்தானங்கள் ஆகும். இவ்வாறு உள்ள அமைப்புகள் நல்லவிதமாக அமைய சூரியனின் காரக பலம் பலப்படும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "கைரேகையும் ஜோதிடமும் பகுதி 1 - சூரிய மேடு…"

கருத்துரையிடுக

Powered by Blogger