கைரேகையும் ஜோதிடமும் பகுதி 3 - செவ்வாய் மேடு…

கைரேகையும் ஜோதிடமும் பகுதி 3 - செவ்வாய் மேடு

மனித வாழ்வை காலந்தொட்டு கணிக்க உதவும் வேத ஜோதிடத்திற்கு பிறகு அடியேனால் மிக மதிக்கபடும் கணிதங்கள் கைரேகை ஜோதிடம் மற்றும் நாடிஜோதிடம் ஆகும். இதில் கைரேகை ஜோதிடத்தில் மற்றும் நாடிஜோதிடத்தில் எனக்கு பெரிய படிப்பும் மற்றும் அனுபவமும் இல்லையேன்றாலும் வேத ஜோதிடத்தை ஒட்டிய ஒப்பீடு ஆன சில கருத்துகளை படித்துள்ளேன்  அதில் வேத ஜோதிடத்தில் எப்படி நவகிரகங்கள் இருக்கின்றனவோ அது போல கைரேகையிலும் இராகு கேது தவிர சப்தகிரகங்களின் தொடர்பு இருக்கிறது அதை கைரேகையில் கிரக ஆதிக்க மேடுகள் என்று அழைக்கப்படுகிறது அந்த சப்தகிரக மேடுகளுடன் நமது  வேத ஜோதிட கிரக மற்றும் ஸ்தான காரகத்துவங்களையும் சேர்த்து ஒப்பிட்டு இந்த பதிவை படித்த மற்றும் அனுபவ அறிவையும் இணைத்து எழுதுகிறேன்


செவ்வாய் மேடு -
கைரேகையில் செவ்வாய் மேடு இரண்டு பக்கங்களில் இருக்கும் முதலாவது மேல் செவ்வாய் மேடு கட்டை விரலுக்கும் (thump finger) ஆயள்ரேகைக்கும் நடுவில் இருக்கும் படத்தில் அது காட்டப்பட்டுள்ளது. அடுத்த செவ்வாய் மேடு கீழ் அதற்கு எதிர்புறத்தில் இருதய ரேகையின் முடிவில் ஒட்டி தொடங்கி சந்திர மேட்டின் எல்லையில் முடியும். ஆயள்ரேகையோட்டி வரும் மேல் செவ்வாய் மேடு ஆயுளுக்கு தேவையான உடல்பலத்தை முக்கியமாக காட்டும். சந்திர மேட்டை ஒட்டி வரும் கீழ் செவ்வாய் மேடு மனோதிடம், இருதய பலம் ஆகியவற்றை காட்டும். இராசி சக்கரத்திலும் இதை நாம் காணலாம் காலபுருஷ தத்துவத்தின் படி மேஷம் இராசி மனோதிடம், இருதய பலம் காட்டுவதாகவும் மேலும் விருச்சிகம் இராசி ஆயுள் பலம் மற்றும் ஆயுளுக்கு தேவையான உடல்பலத்தை காட்டுவதாகவும் அமைந்துள்ளது. செவ்வாய் மேடுகள் காரகத்துவம்  உடல்பலம், மனோதிடம், துணிவு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, அரசியல் அரசு சார்ந்த பலம், வீரம், கோபம், யுத்த வல்லமை, சம்காரம், வன்முறை ஆகியன செவ்வாய் கிரகம் மற்றும் செவ்வாய் மேட்டின் காரகத்துவங்கள் ஆகும். செவ்வாய் மேடுகள் பருத்து பரந்து நல்ல மேல் நோக்கிய சுருள் உடன் மேலும் நல்ல குறிகளுடனும் (நட்சத்திரம், சதுரம்...) அமைந்தால் நல்லது அதனால் மேலே சொன்ன காரகத்துவ பலன்கள் அவருக்கு சிறப்பான முறையில் அமையும். அதே போல ஜாதகத்தில் செவ்வாயின் மற்றும் அதன் ஸ்தானங்களான 1,8 ஆம் ஸ்தானமும் மற்றும் அதற்கு அடுத்து 2,3,6,7,10,11 ஆம் ஸ்தானமும் செவ்வாயின் பலத்தை பிரதிபலிக்கும் ஸ்தானங்கள் ஆகும். இவ்வாறு உள்ள அமைப்புகள் ஜாதகத்தில் நல்லவிதமாக அமைய மேலே சொன்ன செவ்வாயின் காரகத்துவ பலன்கள் வாழ்வில் பலப்படும்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "கைரேகையும் ஜோதிடமும் பகுதி 3 - செவ்வாய் மேடு…"

கருத்துரையிடுக

Powered by Blogger