ஜோதிட துணுக்குகள் பகுதி 8 - ஒதுங்கி போகிறவன்…


ஜோதிட துணுக்குகள் பகுதி 8 - ஒதுங்கி போகிறவன்


தைரியம் \அஞ்சாமை, போராட்ட குணம், வீர தீரம் காட்டக்கூடிய தாக ஜோதிடத்தில் மூன்றாம் வீடு உள்ளது மற்றும் எதிரிகளை வீழ்த்தி சவால்களை வென்று சாதித்து காட்டக்கூடிய, சத்துருக்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பதை காட்டக்கூடிய ஜோதிடத்தில் ஆறாம் வீடும் உள்ளது. இயற்கை சுபகிரங்களாக உள்ள வியாழன் (குரு), சுக்கிரன் (வெள்ளி), வளர்பிறை சந்திரன் ஜாதகத்தில் 3,6 வீட்டின் அதிபதிகளாக இல்லாமல் இருந்து அக்கிரகங்கள் இங்கு அதாவது மூன்றாம் வீட்டில், ஆறாம் வீட்டில் இருந்து மேல் சொன்ன கிரகங்கள் வலிமை சமநிலை பட்டு போனால் அந்த நபர் போராட விரும்புவதில்லை, சண்டைப் போட விரும்புவதில்லை, பெரிய போட்டிகளையும் அதன் பயன்கள் மீதும் நாட்டம் கொள்ளவதில்லை அதனால் மிகவும் மென்மையான மற்றும் பொது நிதான நடத்தை உடன் போராட்டம், சண்டை போன்றவற்றில் விலகி கடந்து போவார் அதாவது ஒதுங்கி போகிறவர் சாந்தமான பழக்கமுள்ளவராக இருந்து கொண்டிருப்பார்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஜோதிட துணுக்குகள் பகுதி 8 - ஒதுங்கி போகிறவன்…"

கருத்துரையிடுக

Powered by Blogger