நவாம்ச லக்னம் ரிஷபமானால்...

நவாம்ச லக்னம் ரிஷபமானால் - ரிஷபம் நவாம்ச லக்னமாக வரும்போது...

அசுவினி 2 பாதம்
ரோஹிணி 2 பாதம்
புனர்பூசம் 2 பாதம்
மகம் 2 பாதம்
ஹஸ்தம் 2 பாதம்
விசாகம் 2 பாதம்
மூலம் 2 பாதம்
திருவோணம் 2 பாதம்
பூரட்டாதி 2 பாதம்

ஒருவரின் லக்னமானது கீழே உள்ள நட்சத்திர பாதத்தில் இருக்கும் படி ஒருவர் பிறப்பை எடுத்திருந்தால் அவருக்கு நவாம்சத்தில் ரிஷபம் லக்னமாக வரும் அப்படி ரிஷபம் நவாம்ச லக்னமாக வரும்போது - பரந்த மனப்பான்மை அல்லது பரந்த அறிவு கொண்டவர்கள். இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்ற முனைப்பு மற்றும் பெரிய வயிறு, நீண்ட முகம். உடலாலும் விருப்பத்தாலும் வலுவான நபர்கள். சற்று சிற்றின்ப நடத்தை அதிகமாக உள்ளவர்கள். கவரும் கண்கள் இருக்கும். அதிக புத்திர பாக்கியம் குறிப்பாக மகள்கள் உடையவர்கள். தார்மீக தகுதி அல்லது தார்மீக சுயமரியாதை எதிர்பார்க்க கூடியவர். அதே சமயம் கீழ்படிந்து போகும் பக்குவமும் கொண்டவர்களாக திகழ்வார்கள். திருமண விஷயங்களில் கூடுதலான நலன்களை கொடுக்கும். இது நவகிரகங்களில் சுக்கிரன் (வெள்ளி), சந்திரன், புதன், சனி போன்ற கிரகங்களுக்கு ஏற்ற நவாம்ச இடம் ஆகும்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "நவாம்ச லக்னம் ரிஷபமானால்..."

கருத்துரையிடுக

Powered by Blogger