உணவின்றி வாழ்வில்லை...

உணவின்றி வாழ்வில்லை...

தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்திருப்பதாக வரும் செய்திகளை கண்டு மனதிற்க்கு பெரும் வருத்தம் மேலிடுகிறது. நம் எல்லாரின் முன்னோர்களும் வேளாண்மை தொழிலில் இருந்து பிரிந்து வந்தவர்கள் தான் இந்த நிலை ஏன் வந்தது என்று சிந்தித்து பார்த்தால்

சுருக்கமாக சொல்லுவதானால் தமிழ்நாட்டின் இயற்க்கை சூழலை நம் முன்னோர்கள் நன்கு புரிந்து வைத்து மழைக்காலத்தில் வரும் நீரை குளம், ஏரி, தாடகம் என்று ஏற்படுத்தி அதற்கு முறையாக கால்வாய்கள் அமைத்தும் வந்துள்ளனர் இது அரசாட்சி காலங்களில் அரசர்கள் முறையான உத்தரவுகள் போட்டு அதை பாராமரித்தும் வந்துள்ளனர்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இப்படி போற்றிய நீர்வளத்தை மக்களாட்சி என்று சொல்லிக்கொள்ளும் நாம் நமது பண்பாட்டை மறந்து மற்றும் இயற்கையோடு இணைந்த சமய நெறிகளை மறந்து வெறும் 75 ஆண்டுகளுக்குள் இந்த பூமியை நீரிலில்லாத மணல் இல்லாத ஆறுகளாகவும் மற்றும் குப்பைகள் சூழ்ந்த குளங்களாகவும் மாற்றி விட்டுள்ளோம், மலைகளை கற்களுக்காக கரைத்தோம் அதனால் நீரை ஈர்த்து சேர்க்கும் மலைகளை இழந்து வருகிறோம். உதாரணமாக நீலகிரியை நகரமயமாக்கி விட்டதால் அதன் அடிவாரத்தில் கூட நீரின்றி காய்கிறோம்.

நமது இயற்கையை மற்றும் நீர்வளத்தை மீட்க வேண்டும் இல்லையேல் பெரும் பஞ்ச காலம் அல்லது பெரும் வேலைவாய்ப்பில்லாத காலத்தை வரும் 25 ஆண்டுகளுக்குள் எதிர்கொள்ள வேண்டி வரலாம். அதற்கு விவசாயிகளின் மரணங்கள் முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது என்பதை ஞாபகம் வைத்து அனைவரும் ஏதோ ஒரு வழிகளில் ஆள்வோர்களை தமிழ்நாட்டின் இயற்கையை மற்றும் நீர்வளத்தை காக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்க வைக்க முயல வேண்டும்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "உணவின்றி வாழ்வில்லை..."

கருத்துரையிடுக

Powered by Blogger