கோடீஸ்வர்களின் ஜாதகங்கள் - பகுதி 2

கோடீஸ்வர்களின் ஜாதகங்கள் - பகுதி 2 


கோடீஸ்வர்களின் ஜாதகங்கள் - பகுதி 1 படிக்காதவர் படித்துவிட்டு பின் பகுதி 2 தொடரலாம். 

பணத்தை பெருமளவில் சேர்க்க ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஆசை, ஆர்வம் மற்றும் திறமை, தகுதிகள் தான் காரணம் என்று என்ன சார் நீங்க ஒரு தன்னம்பிக்கை சொற்பொழிவாளர் போல பேசுகிறீர்களே என்று உங்களுக்கு தோன்றலாம் ஆம் உலகின் தற்போதை முதல் பணக்காரனாக திகழ்ந்து கொண்டிருக்கும் பில்கேட்ஸ் எந்த வகையிலும் மகாலட்சுமி, குபேரன் இன்னும் உள்ள எந்த பணக்கார தெய்வ வடிவங்களையும் வழிபட்டவரோ விரதமிருந்தவரோ இல்லை. அப்படி இல்ல சார் அவருக்கென்று வேறு ஒரு தெய்வ மகான் இருந்தார் அவரின் கிருபையால் இந்த செல்வ வசதியை அடைந்தார் என்று கூட சிலர் கருதலாம். அப்படியானால் தெய்வ நம்பிக்கையற்ற புத்த மற்றும் கன்பூசியஸ் போன்ற தத்துவ நெறி சார்ந்த நாடுகளில் வளர்ந்த எத்தனையோ கிழக்கு மற்றும் தென்கிழக்கு நாடுகளை (சீனா, ஜப்பான்) சேர்ந்த பெரும் பணக்காரர்கள் உலக அளவில் முக்கிய இடத்தில் இருக்கிறார்கள்.

இப்படியேல்லாம் சொல்வதால் செல்வ வசதி வேண்டி செய்யப்படும் வழிபாடுகளையோ, ஹோமங்களையோ அல்லது விரதங்களையோ வீண் என்று நான் சொல்ல வரவில்லை அதாவது இதற்க்கெல்லாம் மேலாக ஒருவனுக்கு இந்த பிறவியில் பெரும் பணக்காரன் ஆக வேண்டும் என்ற விதி (செல்வம் சேருவதற்க்கான புண்ணிய கர்மா) அமைய வேண்டும், அந்த விதி இருக்குமானால் மீதி வழிபாடுகள் எல்லாம் வெறும் துணை ஊக்கிகள் தான். சிலருக்கு தந்தை, தாதா என முதாதையர்களின் வழியாக செல்வ வசதி, சொத்துகள் வரலாம் அப்படி வந்தாலும் அதுவும் அவருக்கு தொடந்து இருக்க விதி ஒத்திருக்க வேண்டும். கர்மாவை விரித்து கணித்து இயம்புவதும் அது எந்த கிரத்தின் வழியாக எவ்வாறான கர்மா என்றும் விரித்து கணித்து இயம்புவது தான் ஜோதிடக் கலையே.

பணத்திற்கு மதிப்பு எங்கிருந்து வருகிறது?

உண்மையில் பணம் வெறும் காகிதமே, காசு வெறும் உலோகமே, வங்கி கணக்கு மதிப்புகள் வெறும் எண்களே அப்படியானால் அதற்கு மதிப்பு எங்கிருந்து வருகிறது? இப்போது ஒரு சித்தர் பாடலை இங்கே சுட்டிக்காட்டிகிறேன்

 ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே”

இதன் பொருள் -
ஊரிலே இருக்கும் மனிதர்கள் ஒரு மனதாய் ஒன்று கூடி கோயில் தேரிலே கனமான கயிற்றை இணைத்து அந்த தேரின் மேலே செம்பு வெங்கலத்தால் ஆன உலோகத்தை வைத்து கடவுள் என்று சொல்லி இழுக்கின்றீர்கள் யாவராலும் அறிந்து கூற முடியாத பழம்பெரும் தெய்வத்தை அறியாமையால் குழந்தைதனமாக ஒரு செம்பு வெங்கலத்தால் ஆன உலோகத்தில் வைத்து இந்த மனிதர்கள் செய்கின்ற காரியத்தை என்னவென்று சொல்வது.

அதாவது எல்லையற்ற பரம்பொருளை சைவத்தில் பரமன், விஸ்வநாதன் என்றும் வைணவத்தில் பரந்தாமன், விஸ்வரூபன் என்றும் அழைக்கப்படும் அந்த எல்லையற்ற பரம்பொருளை மக்கள் தங்களின் வழிபடும் வசதிக்காக மற்றும் தங்களின் கோரிக்கையை கேட்டு அருளும் எளிய வடிவத்தில் சுருக்கி வழிபடுகின்றனர் அதனால் மக்களின் அங்கீகாரத்தால் சிலைகள் தெய்வ பாவனைகளை கொள்கின்றது, அதன் பின் ஒவ்வொருவரின் கோரிக்கையை கேட்டு சிலையினிடத்தும் மற்றும் அவர் அவர் உள்ளத்துள்ளும் இருந்து கோரிக்கைகளுக்கான அருளும் தருகிறார்.

அது போலவே மக்களின் அங்கீகாரத்தால் மற்றும் மக்களின் பிரதிநிதித்துவ அரசுகளின் அங்கீகாரத்தால் வெறும் காகிதமும், உலோகமும்,  வங்கி கணக்கில் உள்ள எண்களும் நான் முன்னவே குறிப்பிட்டுள்ளபடி மனிதனுக்கு தேவையான நீர், உணவு தானியம், நெருப்பு, ஆடை, நிலம் என அனைத்து உடைமைகளையும் வாங்க விற்க மற்றும் பயன்படுத்த உதவும் காசு, பணத்தாள் அல்லது பணச்சீட்டு என்ற ஒரே இடைபேரக் கருவியாக அங்கீகாரிக்கபடுகிறது, பொது மக்களாலும் அரசுகளின் அங்கீகாரத்தாலும் இவைகளுக்கு மதிப்பு உண்டாகிறது.

பணம் வரும் வழி என்ன?

காசையோ, பணத்தாளையோ அல்லது பணச்சீட்டையோ ஒரு தனிமனிதனுக்கு தயாரிக்கும் திறன் இருந்தாலும் ஒரு சில மனிதர்களால் தயாரிக்கபடும் பணம் அது போலி பணமாக கருதப்பட்டு அவர்களுக்கு அரசால் தண்டனையே மிஞ்சும். அரசாங்கத்தால் ஏற்கப்பட்டு விநியோகிக்கப்படும் பணமே பணம் அதை அரசாங்கம் யாருக்கும் சும்மா விநியோகிக்க முடியாது எனவே அது பண்ட மாற்றும் மற்றும் சேவை பணிகளின் மூலமாக அது பொது மக்களிடம் வந்து சேர்கிறது. பொது மக்களிடம் வந்து சேரும் அது அதிக உற்பத்தி அதனால் விற்பனை மற்றும் அதிகமாக சேவைகளின் காரணமாக ஒரு தனி மனிதனிடம் குவிகிறது அதனால் பணக்காரன் உருவாகிறான்.

உதாரணமாக ஒரு பொருளை உற்பத்தி செய்து அதை விற்கும் ஒரு வியாபாரியை எடுத்துக் கொள்வோம் அவரின் பொருள் ஒரு பெரும்விற்பனர் (wholesaler) அடைந்து அது பின் ஒரு சிறுவிற்பனர் (retailer) அடைந்து கடைசியில் ஒரு வாடிக்கையாளரால் வாங்கப்பட்டு அந்த ஒரு பொருளின் மூலம் பெற்ற நிகரலாபம் 1000 ரூ அது சிறுவிற்பனர்க்கு கொஞ்சமாக மற்றும் பெரும்விற்பனர்க்கு கொஞ்சமாக பிரிந்து இறுதியில் உற்பத்தியாளருக்கு 500 ரூபாயாக வந்து அடைகிறது என்று வைத்துக்கொள்வோம் இப்படியாக ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் இருந்து சேர்க்க பட்ட 500 ரூபாய் இறுதியில் ஒரு பெரும் எண்ணிக்கையை அடைகிறது.

மேலும் ஒரு உதாரணமாக ஒரு பெரும் நடிகரிடம் இருக்கும் கோடிகள் எப்படி வந்தது, படத் தயாரிப்பாளர் தந்தது, படத் தயாரிப்பாளருக்கு பணம் எப்படி வந்தது, திரைபட விநியோகிஸ்தர் தந்தது, திரைபட விநியோகிஸ்தருக்கு பணம் எப்படி வந்தது, திரையரங்க உரிமையாளர் தந்தது, திரையரங்க உரிமையாளருக்கு பணம் எப்படி வந்தது, திரைப்படம் பார்த்த நீங்கள் தந்தது அப்படியானால் உங்களின் பணப்பையில் இருந்த பணம் பலரையும் கடந்து அந்த பெரும் நடிகரின் பாதுகாப்பு பேழையை (Safety Locker) சென்று அடைந்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்.

குவிதல், குவிப்பு, குவித்தல் என்ற வார்த்தைகள் ஜோதிடத்தில் முக்கியமானவை அந்த விஷயத்தில் பணத்தை குவிப்பு, குவித்தலுக்கு குபேர யோகமாக கொள்ளப்படுகிறது. ஜோதிடத்தில் இந்த பணத்தை குவிப்பதற்கு தேவையான கதிர்வீச்சு பலத்தை

1) ஒரே ஒரு கிரகத்திற்கு பல கிரகங்கள் சேர்ந்து அந்த சக்தியை தரும்
2) இரண்டுக்கு மேற்பட்ட கிரகங்கள் பலமாக சேர்ந்து அந்த சக்தியை தரும்
3) ஒரு குறிப்பிட்ட கோணத்தில் கிரகங்கள் அமர்ந்து அந்த சக்தியை தரும்
4) சரியான நட்சத்திர அறைகளையும் அல்லது சரியான வீட்டை பல கிரகங்கள் அடைந்தும் அந்த சக்தியை தரும்

இப்படி பல வழிகளை சொல்லிக்கொண்டு போகலாம். இந்த கோடீஸ்வர்களின் ஜாதகங்கள் பதிவுகளில் ஒரு கோடீஸ்வரரின் ஜாதகத்தை எடுத்து அதில் உள்ள சிறப்புகளை மோலோட்டமாக பார்த்து வரப்போகிறோம். உலக அளவில் ஜாதகங்களை எடுத்து பார்க்க இருப்பதால் பல புதிய தொழில்கள் அதில் பணக்காரர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

0 Response to "கோடீஸ்வர்களின் ஜாதகங்கள் - பகுதி 2"

கருத்துரையிடுக

Powered by Blogger